(Reading time: 10 - 20 minutes)

"தீபன் ஆகிய நான் ப்ரீதா ஆகிய உன்னை என் மனைவியாக ஏற்றுக் கொள்கிறேன். இன்பத்திலும் துன்பத்திலும், உடல் நலத்திலும், நோயிலும் உனக்கு பிரமாணிக்கமாக இருந்து, வாழ்நாளெல்லாம் உன்னை நேசிக்கவும், மதிக்கவும் வாக்களிக்கிறேன் .."

"ப்ரீதா ஆகிய நான் தீபன் ஆகிய உங்களை என் கணவனாக ஏற்றுக் கொள்கிறேன். இன்பத்திலும் துன்பத்திலும், உடல் நலத்திலும், நோயிலும் உங்களுக்கு பிரமாணிக்கமாக இருந்து, வாழ்நாளெல்லாம் உங்களை நேசிக்கவும், மதிக்கவும் வாக்களிக்கிறேன் .."

அதைத் தொடர்ந்து தீபன் ப்ரீதாவிற்கு அணிவிக்க வேண்டிய திருச் சிலுவை நடுவில் அமைந்திருக்கும் இதய வடிவிலான டாலர் கொண்ட தாலிச் செயின் செபிக்கப் பட்டு தீபன் கைகளில் கொடுக்கப் பட்டது.

 "ப்ரீதா என் அன்பிற்கும் , பிரமாணிக்கத்திற்கும் அடையாளமாகிய இந்த திருமாங்கல்யத்தை பிதா , சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே அணிந்துக் கொள்." என்று சொல்லி ப்ரீதாவிற்கு அணிவித்தான். அந்த நேரம் ஏற்கெனவே ஏற்பாடு செய்தபடி வெளியே பட்டாசுக்கள் வெடித்தன. திருப்பலியின் ஏனைய ஜெபங்கள் அத்தனையும் நிறைவுற மணமக்கள் இருவரும் திருமணத்திற்கான ரெஜிஸ்டரில் தங்கள் கையெழுத்தை இட்டனர். பெரியவர்கள் சாட்சிக் கையெழுத்திட திருமணம் முடிந்த மகிழ்ச்சி அங்கே ஒவ்வொருவர் முகத்திலும் தெரிந்தது. 

 திருப்பலி நிறைவேற்றிய பாதிரியார்கள் உடன் ஓரிரு புகைப்படம் எடுத்தபின் அங்கே இருந்த உறவினர்களும் உடனே வாழ்த்துச் சொல்லி புகைப் படம் எடுத்துக் கொண்டனர். தனி தனியாக ஆலயத்திற்கு வந்த தீபனும் ப்ரீதாவும் கைக் கோர்த்தவர்களாக கணவன் மனைவியாக ஆலயத்தினின்று வெளியே வந்தனர். அனைவர் முகத்திலும் களிப்பே நிறைந்து இருந்தது.

 உறவினர்கள் எல்லோரும் ஹாலிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். ரூபனின் பார்வை விடாமல் அனிக்காவைத் துளைத்துக் கொண்டிருந்தது. நடைபெற்ற எல்லா நிகழ்வுகளிலும் அவன் தன்னையும் அனிக்காவையும் சேர்த்து சேர்த்து எண்ணிப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.

 தன்னை ஆறு விழிகள் கவனித்துக் கொண்டிருப்பதை அறியாமல்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

கிருத்திகாவின் "வசந்த காலம்" - குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

அவள் விழிகளில் 

விழுந்தேன் நான்

மீளவே இயலா

புதை மணலில்

 விழுந்தாற் போல்

அவள் விழிகளில் 

 விழுந்தேன் நான்

 

மீண்டும் எழுகின்ற 

உத்தேசம் இல்லாதது போல்

அவள் விழிகளில் 

விழுந்தேன் நான்.

பி.கு:ஹாய் ஃபிரண்ட்ஸ் , இந்த அத்தியாயத்தில் நெகட்டிவாக எதையும் எழுத விரும்பாததால் கொஞ்சம் சின்ன அப்டேட் தான் தந்திருக்கிறேன். எந்த நாவலிலும் நான் கிறிஸ்தவ முறை திருமணத்தை வாசித்ததில்லை. அதனால் நான் பார்த்த திருமண நிகழ்வுகளிலிருந்து ஒரு துளியைச் சேர்த்திருக்கிறேன். குறை இருந்தால் பகிரவும்.

தொடரும்

Episode # 07

Episode # 09

{kunena_discuss:970}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.