(Reading time: 16 - 32 minutes)

தோ வகையிலும் எல்லா வகையிலும் அனுவுக்கு அந்த சந்திப்புகள்  பிடித்தன….. சந்தோஷத்தில் குத்தித்தாள் என்று இல்லை….. ஆனால் உள்ளுக்குள் இருந்த வெறுமையின்  ஆழம் சுருங்கிக் கொண்டு வந்தது..

அடுத்தும் அவள் எழுந்து நடமாட தொடங்கிய பின் அன்று அனுவையும் கனி மொழி ஆன்டியையும் வெளியில் கூட்டி வந்திருந்தான் அதிபன்…  வெளியில் என்றால் பூங்காவனத்தார் சொத்துக்களை கனி ஆன்டி பெயரில் மாற்ற ரிஜிஸ்ட்ரேஷன் ஆஃபீஸ் கூட்டி வந்திருந்தான்.

பத்திரப் பதிவு முடிந்து மூவருமாக காரில் திரும்பிக் கொண்டிருந்தனர்….. இந்த பதிவு நிகழ்ச்சியில் அனுவுக்கு ஒரு உறுத்தல்…… அவளுக்கு அந்த சொத்துக்கள் தன் பெயரில் வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்ப்பு இல்லை….  ஆனால் கனிமொழியின்  சுபாவத்தின்படி நிச்சயமாக அவர் அந்த சொத்தை இவள் பெயரில் எழுத சொல்லுவார் என எதிர்பார்த்திருந்தாள்.

அவருக்கு வயதாகி விட்டதென காரணம் சொல்லி அவர் பிடிவாதம் பிடிப்பார்…..இவள் எப்படியாவது மறுத்து அதை அவர் பெயரிலேயே பதிய செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தாள்….

ஆனால் இந்த பேச்சு தொடங்கிய முதல் நாளிலிருந்து அப்படி எந்த நிலையும் வரவே இல்லை… கனிமொழி முதலில் அது அதிபனின் பெயரிலேயே இருக்கட்டும் என்றவர் அடுத்து அவனின் பிடிவாதத்தில் தன் பெயருக்கு மாற்ற ஒத்துக் கொண்டார்..

அதோடு அதிபன்  இப்போதெல்லாம் இவளை முழுவதுமாய் நம்புவதாய்தான் படுகிறது….. ஆனால் அவனுமே ஒரு வார்த்தை கூட இவளுக்கும் சேர்த்து அதில் உரிமை வருமாறு பதியலாம் என சொல்லி இருக்கவில்லை….

இவள் இந்த இடத்தை வித்துவிட்டு ஓடி விடுவாள் என அவன் இன்னும் நினைக்கிறான்  என இவளுக்கு நம்ப தோணவில்லை தான்…. ஆனால் எங்கள் ஊரில்…எங்கள் குடும்பத்தில் உனக்கு உரிமை இல்லை என்கிறானோ என்றிருக்கிறது…

என்ன இருந்தாலும் நீ எங்க நாட்டு பொண்ணு இல்லைனு தான் அவனுக்கு நினைக்க முடியுது  போல….நான் இந்த வீட்டு பொண்ணுனு நினைக்க தோணலை போல என அவள் மனதை ஏதோ ஒன்று அழுத்துகிறது….

பத்திர பதிவின் கடைசி நிமிடம் வரை இவளுக்கு இந்த எதிர்பார்ப்பு இருந்தது….ஆனால் ஒரு முறை கூட யாரும் அப்படி பேச்சுக்க்கு கூட சொல்லவே இல்லை…

ஆக அடுத்து என்னதான் அவள் இயல்பாய் இருக்க வேண்டும் என நினைத்து முயன்றாலும் முகம் அதாக வாட….எதுவும் பேச தோன்றாமல் காரில் ஒரு ஓரமாய் அமர்ந்தவள் வெளிப்புறமாக பார்ப்பது போல் முகத்தை வைத்துக் கொண்டு அமைதியாக வந்தாள்….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வத்சலாவின் "வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

‘யாருக்குமே நான் வேண்டாம் போல….’ என்ற ஒரு நினைவு…..அவளை எந்த சூழலிலும் விட்டுக் கொடுக்காத கனி ஆன்டி கூட அவளை விலக்கி வைப்பதாய் ஒரு உணர்வு…. அவள் இங்கிருந்து அவள் நல்லதற்காக கிளம்பி போய்விட வேண்டும் என நினைத்து தான் இப்படி செய்கிறார் என அவள் எண்ணிக் கொண்டாலும்…. அடிபட்டிருந்த மனமல்லவா….வீடாய் இருந்தால் வெடித்து அழுதிருப்பாள்….ஆனால் வெளியிடத்தில் என்ன செய்ய? தன்னைத்தானே அடக்கி ஆள சிரமபட்டுக் கொண்டிருந்தாள்….

அதிபன் பத்திரப் பதிவு அலுவலகத்திலேயே அனு இயல்பாய் இல்லை என உணர்ந்திருந்தாந்தான்…..முதலில் அவள் நடந்து முடிந்த மரணத்தை குறித்தும், இந்த இடம் தேவைக்கு உதாவமல் போனதை குறித்தும் வருந்துகிறாள் என நினைத்து என்ன சொல்லி  அவளை ஆறுதல் படுத்த என புரியாமல் நின்றவன்….அவள் கனி ஆன்டியின் மீது அவ்வப்போது செலுத்திய ஏக்கப் பார்வையை வைத்து ஒருவாறு விஷயத்தை புரிந்து கொண்டான்.

நாளை இவனுக்கு மனைவியாக வரும் போது…..அவளது முதல் திருமணத்தின் பலனாய் அவளுக்கு வந்த இந்த இடம் அவள் மனதுக்கு உறுத்தலாய் அமைய கூடாது எனதான் அதிபன் நிலத்தை கனி ஆன்டியின் பெயரில் மாத்திரமாக பதிய முடிவு செய்தது……

கனி ஆன்டியின் எண்ணமும் அது தான் என்பதும் இவனுக்கு தெரியும்…. ஆனால் இதை இப்போது அனுவுக்கு எப்படி விளக்கவாம்?

அதைப் பற்றி யோசித்துக் கொண்டும், பின் இருக்கையில் இருக்கும் அவள் மீது அவ்வப்போது பார்வையை பதித்துக் கொண்டும் அவன் காரை செலுத்திக் கொண்டிருந்தான்….

அவன் பார்வைகளை கூட உணராமல் அனு வெளியே வெறித்துப் பார்த்திருந்தாள்….. சட்டென சடன் ப்ரேக் அடித்து நின்றது கார்…..

இப்பொழுது என்ன என்பது போல் அதிபனை பார்த்தாள்….. அவனோ சின்ன புன்னகையுடன் வெளியே கை காட்டினான்….

அலகில் இறகு சொருகப்பட்ட கோழி ஒன்று முன்பாக ஓடிக் கொண்டிருந்தது…..காரின் குறுக்காக பாய்ந்திருந்த அது அடிபடாமல் இருக்கவென காரை நிறுத்தி இருந்தான் அவன்….முன்பு இது போல ஒன்றைப் பார்த்து தானே அவள் பயந்து ஓடி வந்தது…… ஒரு வகையில் அது அவளுடனான  முதல் சந்திப்பல்லவா…..அந்த நினைவில்தான் அதிபன் முகத்தில் புன்னகை……

ஆனால் அனுவோ சட்டென கார் கதவை திறந்து கொண்டு இறங்கிவிட்டாள்….

“ஹேய் …எங்க போற…?” அதிபனும் அவசரமாக இறங்கினான்.

“ஏன்தான் எல்லாரும் இப்படி கோழிய கொடும படுத்றாங்களோ….பாவம் அது…..” சொல்லியபடி அந்த கோழியை தேடத் தொடங்கி இருந்தாள் அனு….. அத்தனை நேரம் அவள் முகம் இருந்த கோலத்திற்கும் இப்போதைய அவள் அக்கறைக்கும்…..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.