(Reading time: 16 - 32 minutes)

க வினி குடும்பத்தை நேரில் சென்று அழைத்த மாதிரியே தன் தந்தை பொற்பரனுடன் சென்று பவி குடும்பத்தை விருந்துக்கு அழைத்தான் அதிபன். எந்த அலட்டலும் இல்லாமல் மகிழ்வாகவே அழைப்பை ஏற்றார் பவியின் தந்தையும்.

எதிர்பார்த்த அந்த விருந்தும் வந்தது…….

அதிபன் வீட்டில் ஒரு வழக்கம் இருந்து வந்தது….. அறுவடைத் திருநாள் என்பது அந்த வருட விளைச்சல் மற்றும் உற்பத்திக்காக நன்றி செலுத்தும் நாள் என்பதால் அந்த விழாவிற்கு முந்திய நாள் தங்களது தொழில் ஸ்தலங்களுக்கும்…வயல் வெளிகளுக்கும் சென்று ஜெபம் ஏறெடுத்துவிட்டு வருவார்கள்.

இப்பொழுது மூன்று மகன்களின் தொழில்களும் வெவ்வேறு இடத்தில் பரவிக் கிடப்பதால் எல்லோரும் எல்லா இடத்துக்கும் சென்று வர முடியாது என்பதால்.......ஒவ்வொரு சகோதரனும் அடுத்த சகோதரனின் தொழில் இடத்திற்கு சென்று ஜெபித்துவிட்டு வரட்டும் என சொன்னார் பொற்பரன்.

அதன்படி அதிபன் செல்ல வேண்டியது யவியின் பண்ணைக்கு….. கிளம்பும் நேரம் எல்லோரும் மொத்தமாக பார்க்கிங்கில் நின்று பேசிக் கொண்டிருக்க……அனுவும் அவர்களோடு நின்று சள சளத்துக் கொண்டிருந்தாள் தான்…

நீ இந்த கார்ல….நீ அங்க என ஒவ்வொருவரும் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தவர்கள்…..என்ன சொன்னார்கள் எப்படி செய்தார்கள் என இவள் உணரும் முன்னே அனு அதிபனின் காரில் இருந்தாள்.

மரகதம் வந்து இவளை அழைத்திருந்ததால்தான் மறுக்க முடியாமல் கிளம்பி வந்திருந்தாள் இவள்….இங்கு அதிபன் அபை வினி என எல்லோரையும்  காணவும் இத்தனை நாள் பழக்கத்தில் இயல்பான பேச்சிற்குள் நுழைந்திருந்தவள்….

எல்லோரும் கிளம்பும் நேரம் அப்படியே நழுவிவிட வேண்டும் என இவள் எண்ணி இருக்க…..இப்போது அதிபனின் காரில்…..கூடவே பொற்பரனும் மரகதமும் …..…அனுவுக்கு இயல்பாக இருக்க முடியவில்லை…..

தொடர்ந்து வாழ்வில் இழப்புகளை பார்த்து வந்திருந்தவளுக்கு எதோ வகையில் அவள் இருக்குமிடத்தில் அழிவுதான் உண்டாகும் என்ற உணர்வு….. அதில் ஒரு தொழில் ஸ்தாபனத்துக்காக ஜெபிக்க இவளா…..? என ஒரு அடிப்படை அற்ற பயம்….

அங்கு ஜெபம் முடியும் வரையுமே அதிபன் அவளைவிட்டு அகலவே இல்லை….. வார்த்தையால் எதுவும் அவன் சொல்லாவிட்டாலும் கூட அனுவுக்கு அவன் இவள் எண்ண ஓட்டத்தை புரிந்து வைத்திருப்பதாய் ஒரு உணர்வு….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சிவாஜிதாசனின் "அமேலியா" - சர்வதேச காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

அது அப்போது அவளுக்கு பிடித்திருந்தது…..

றுநாள் பவிஷ்யா குடும்பம் இவர்கள் வீட்டிற்கு கிளம்பிவிட்ட செய்தி கிடைத்த நொடியிலிருந்து அபை மிதந்து கொண்டிருந்தான்….. அதுவும் பவிஷ்யாவின் பெற்றொர் மட்டுமாய் வருவார்களோ என எண்ணி இருக்க…..பவிஷியா அவளது தங்கை என அனைவருமே குடும்பமாக வருகின்றனர் என்றவுடன் அவன் ஆனந்தத்தின் எல்லையில் இருந்தான் அவன்…… பவிஷ்யா வருவது அவனுக்கு ஜாக்பாட் என்றால்…..

குடும்பமாக அவர்கள் வருகிறார்கள் என்பது இவர்களோடு உள்ள நல்லிணக்கத்தின் அடையாளம்……ஆக அவள் வீட்டில் இவன் வீட்டிலிருந்து கல்யாண பேச்சை நாளைக்கே கூட எடுக்கலாம்…..

வீடே படு கல கலப்பாய் இருந்தது…….நிலவினி மேலும் கீழுமாய் ஓடிக் கொண்டிருந்தாள் எனில் அபை பறந்து பறந்து சுத்திக் கொண்டிருந்தான்…..இதோ பவி வீட்டிட்டிலிருந்து வந்தாயிற்று….

அவளது அம்மாவிற்க்குப் பின் வந்த பவி வாசல் அருகில் நின்று வரவேற்பாய் அவளது பெற்றோருடன் பேசிய அபயனை தாண்டும் போது தலையை இன்னுமாய் குனிந்து கொண்டு வர…..

அவள் காதில் “வெல்கம் ஹோம் கிஷ்பொஷா. அபயன்”  என கிசுகிசுத்து அவளுக்கு ஷாக் கொடுத்தான். (கிஷ்பொஷா என்றால் Mrs என அர்த்தம் ரஷ்யனில்)

“இத புரிஞ்சுக்க ரஷ்யன் தெரியனும்னு அவசியம் இல்ல…” இப்போது இவன் அருகில் முனுமுனுத்தது வினி….

“இன்னும் ஒரு நாள்…நாளைக்கு போய் பேசி முடிக்க போறாங்களாம்…..உங்க அண்ணா சொன்னாங்க…..அதுக்குள்ள ஏன் வம்ப விலைக்கு வாங்குறீங்க….அடுத்து நீங்க என்ன பேசுனாலும் யாரும் கண்டுகவா போறாங்க…?”  என்ற அவளை அதகு முன்பாக அவளோடு பேசி திட்டு வாங்கி சமாதானமாகி இருந்த பவி பாசமாய் கட்டிக் கொண்டு இவனைப் பார்த்து பழிப்பம் காட்டினாள்…

“இன்னும் ஒன் மந்த்தான் உனக்கு டைம்…அப்றம் இப்டி வாயல செய்து பாரு….” என காதலாய் மிரட்டி   அவளை காலை கதிரவனாய் சிவக்க வைத்து கேட்டிருந்த அண்ணியை “இனிமே நான் வர மாட்டேன்பா உங்க பேச்சை கேட்க….” என ஓட வைத்துவிட்டுப் போனான் அபை.

இப்படியாக எல்லோரும் அடுத்த நாள் திருமணம் நிச்சயமாகிவிடும் ஒரு மாதத்தில் திருமணம் நடந்துவிடும் என உறுதியாய் நினைத்திருக்க….. மதிய விருந்துக்குப் பின் இயல்பாய் பேசிக் கொண்டிருந்த நேரம்….

“எங்க மூத்தவளுக்கு கல்யாணம் முடிவு செய்துறுக்கோம்……அவ தாய் மாமாதான் மாப்பிள்ள…….சீக்கிரம் கல்யாணம் இருக்கும்….முறையா வந்து அழைப்பேன் நீங்க எல்லோரும் குடும்பமா வரனும்….” என்றார் பவிஷ்யாவின் தந்தை….. அமைதியாக ஆமோதிப்பாக நின்றிருந்தார் அவளது அம்மா….

அதைக் கேட்டிருந்த பவியின் அடி வயிற்றில் இருந்து அடித்து ஏறிய பயத்தை அவள் முழுதாக உணர்ந்து சேரும் முன் மயங்கி விழுந்திருந்தாள் அவள்….

தொடரும்!

Episode # 25

Episode # 27

{kunena_discuss:929}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.