(Reading time: 16 - 32 minutes)

த்தனை சோகத்தில் இருந்தவள்…..அந்த நொடியிலும் அடுத்த ஜீவன் மீது இரக்கப்படும் அவளது அந்த சுபாவம்….அவனுக்கு இன்னுமாய் அவளைப் பிடித்தது…..

சாலையை ஒட்டி இருந்த காலி வயல் பரப்புக்குள் கோழி ஓட…..அனு அதன் பின்னால் துரத்த….இந்த காட்சியை பார்த்த வண்ணம் “அனு கதிர் அறுத்த வயல்….எதுவும் காலை தட்டிடாம…..கவனமா போ….” என்று அவளை அறிவுறித்தியபடி சிறு புன்னகையுடன் அவள் பின் நடந்தான் அதி…..

சற்று தொலைவில் ஓடிய ஆற்றின் கரையை அடையும் போது கோழியை அனு பிடித்திருந்தாள்…… இவன் அருகில் போய் சேரும் போது….. அதன் மூக்கில் இருந்த அந்த இறகை பிடுங்கி எரிந்துவிட்டு “நீ என்கூட வர்றியா…உன் இஷ்டப்படி பெரிய ஃபேமிலி வச்சுகலாம்…” என அதனிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள் அவள்.

இவனைப் பார்க்கவும் “பாவமில்ல இது…..நாளைக்கே திரும்பவும் சொருகி விட்றுவாங்களோ…?” என்றபடி இவனிடமாக வந்தாள்.

அடுத்து திரும்பி காரை அடையும் வரையுமே அவள் கவனம் கையிலிருந்த கோழியில் தான் இருந்தது…. அந்த கோழியை விலைக்கு வாங்கி அவள் கையில் கொடுத்துவிட்டுதான் அங்கிருந்து காரை கிளப்பினான் அதிபன்.

முதலில் அனுவிற்கு அவனது இந்த செயல் ஒன்றும் வித்யாசமாய் படவில்லை……அதோடு அவள் கவனம் அப்போதைக்கு கோழியை வீட்டிற்கு கொண்டு வந்து சேர்ப்பதை தவிர வேற எதிலும் இல்லை…..

அந்த கோழிகாரரிடமே அடைகாக்க வைக்க தக்க சில முட்டைகளை வாங்கி வந்திருந்த அனு….வீட்டில் கோழியை அடை வைப்பதை தான் முதல் வேலையாக செய்தும் முடித்தாள்.

அன்று மாலையே மீண்டுமாய் இவளை வெளியே செல்லவென கிளம்பி இருக்க சொன்ன அதிபன்….. இவளை பக்கத்து  ஊரிலிருந்த பள்ளிக்கு அழைத்துச் சென்று காட்டினான்,…..

 “இங்க வேலை செய்ய உனக்கு பிடிக்குமா அனு…? தெரிஞ்சவங்க ஸ்கூல்தான்….. மார்டனைஸ் செய்யனும்னு நினைக்கிறாங்க…. உன் எக்ஸ்‌பீரியன்ஸ் அண்ட் எக்‌போஷர் அதுக்கு ஹெல்ப்ஃபுல்லா இருக்கும்…. ஓரளவு சேலரியும் டீசண்டா தருவாங்க…. ஆனா உன்னை நம்பி நீ சொல்றபடி எல்லாம் டிசைன் செய்யனும்ன்ற அளவில இறங்குறவங்க…. நீ திடீர்னு கிளம்பிப் போய்ட கூடாதுன்னு எதிர்பார்ப்பாங்க இல்லையா……சோ பாண்ட் மாதிரி ஒரு few இயர்ஸாவது அக்ரிமென்ட் கேட்பாங்க….” என்று இவளைப் பார்த்தான்..

அனுவுக்கு ஸ்கூல் பிடித்திருந்தது……அதோடு அவன் சொல்வது போல் இவள் விருப்பத்தின் படி பள்ளி நிர்மாணிக்கபடும் என்றால்…..அது அவளுக்கு அங்கு வேலை செய்யும் ஆவலை அளவில்லாமல் தூண்டுகிறது….ஆனால் அந்த பாண்டிங் விஷயம் சற்று உறுத்துகிறது…..இதில் வேற எதுவும் ப்ரச்சனையாகிவிடக் கூடாதே என்ற உறுத்தல்….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்...

“எனக்கு ரொம்ப பிடுச்சுறுக்கு தீபன்……ஆனா பாண்டிங்….” என இவள் யோசிக்க….

“அதெல்லாம் நம்ம சொந்தகாரங்கதான்….ஒரு ப்ராப்ளமும் வராது…..” என இவளை சம்மதிக்க வைத்தான்.

அன்று இரவு வழக்கம் போல் இவளை அழைத்துப் பேசிவிட்டு அவன் இணைப்பை துண்டிக்க அனுவுக்கு முதல் முதலாக அதிபனின் இவளிடம் என்னதாக பழகுகிறான் என்ற கேள்வி எழுந்தது….

இவளை எல்லோரும் ‘நீ இங்க வேண்டாம், திரும்பி யூஎஸ் போய்டு’ன்னு சொல்றாங்களோ என நினைத்து இவள் மனதிற்குள் குமைந்தாள் தான்…..அதை அவன் புரிந்து கொண்டுதான் இந்த கோழி ஸ்கூல் என இவள் மனதிற்கு எது இதம் சேர்க்கும் என பார்த்து செய்து கொடுத்துறுக்கிறான் என இவளுக்கு புரிகிறதுதான்…..

அதுவும் ஃஸ்கூல் விஷயம் உன்னை எங்கயும் நான் போக சொல்லலை என்பதின் செயல் வடிவமாக தெரிகிறது இவளுக்கு….

இத்தனை நாள் அதியுடன் பேசியதில் அவள் புரிந்து வைத்திருக்கும் விஷயங்களில் இதுவும் ஒன்று….அவன் அன்பையோ அக்கறையையோ வார்த்தைகளில் வெளிப்படுத்துவது மிகவும் குறைவு…. எல்லாவற்றிற்கும் பதில் அவன் செயல்களில்தான் இருக்கும்….. அப்படி ஒரு செயல்தான் இந்த ஸ்கூல் விஷயம்….

அது நிச்சயமாய் இவளுக்கு மகிழ்வாகவும் இருக்கிறதுதான்….. ஆனால் ஏதோ ஒன்று உறுத்துகிறது….. அப்படின்னா ஏன் அந்த லேண்ட இவளுக்கும் சேர்த்து கொடுப்போம்னு சொல்லலை…? புரியாமல்  நின்றாள் அவள்….

றுவடை திருநாள் என்பது கிராமத்து சர்ச்சுகளில் ஒரு முக்கிய விழா…..வருடம் ஒருமுறை கோலகலமாக நடக்கும் இது. பொதுவாக குடும்ப உறுப்பினர் வெளியூரில் எங்கு இருந்தாலும் தம்பதி சகிதமாக, மொத்த குடும்பமாக இதில் கலந்து கொள்வர்….

அதோடு உள்ளூரில் இருப்பவர்கள் தங்களது பக்கத்து ஊரில் இருக்கும் தனது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரையும் விருந்துக்கு அழைக்கும் வழக்கமும் இந்த நாளில் நடை பெறும்…..

அந்த விழாவுக்குத்தான் பவிஷ்யா குடும்பத்தை அழைக்க எண்ணினார் மரகதம். பவிஷ்யா குடும்பம் ஒரு வகையில் உறவினர் என்றாலும், இவர்கள் குடும்பத்திற்கும் அவர்கள் குடும்பத்திற்கும் பொது உறவினர்களுக்குள் பகை என்பதால், வெகு காலம் தொடர்பில் இல்லாமல் இருந்த நிலையில், இப்போது யவி வினி திருமணம் அடுத்து பவிஷ்யா இங்கு வேலைக்கு வருதல் என்ற நிகழ்வுகள் உறவில் ஒரு இயல்பு நிலையை கொண்டு வந்து கொண்டிருந்தாலும்….

இன்னும் பவி தவிர அவள் குடும்பத்தினர் யாரும் இவர்களது வீட்டிற்கு வந்து போகும் அளவு உறவாடவில்லை என்பதால், வீட்டிற்கு விருந்துக்கு அழைத்து நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு பெண் கேட்க வேண்டும் என எண்ணினார் மரகதம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.