(Reading time: 16 - 32 minutes)

'யாரிவன்??? யாரிவன்??? ஒரு வேளை அவன் பாடியது, பேசியது எல்லாம் அபர்ணாவுக்காக தானா????

'இல்ல.. ஒரே ஒரு முக்கியமான விஷயம்... நான் ஒரு அவார்ட் ஃபங்ஷன் போகணும் அது பத்தி....'

'நீ எங்கே வேணுமானாலும் போ.... இப்போ நான் ஃபிரண்ட்ஸோட இருக்கேன். உன்னோட கொஞ்ச முடியாது..'

சற்று முன் ஏதோ சொல்ல விழைந்தாளே என்னவள்??? நான் பட்டென பேச்சை முறித்தேனே??? உள்ளுக்குள் தவிப்பு.

ச்சே... எங்கிருந்து வருகிறது எனக்கு இந்த கோபம்???' அவனுக்கே புரியவில்லை.

வீட்டிலே அப்பா அம்மாவுக்கு ஒரே மகன். உடன் பிறந்தவர்கள் என யாரும் இல்லை. பிறந்தது முதலே நினைத்ததை நினைத்தபடியே செய்து பழக்க பட்டவன். அதனாலேயே இப்படி ஒரு குணமா? அவனுக்கே தெரியவில்லை.

அந்த நிமிடம் முதல் தொடர்ந்து அபர்ணாவின் கைப்பேசிக்கு முயன்றுகொண்டே இருக்கிறான். அவள் கைப்பேசியை சைலென்ட் மோடில் போட்டு கைப்பையினுள் வைத்திருக்க, அதற்கு அழைப்பு வந்துக்கொண்டே இருப்பதை இன்னமும் உணரவில்லை அவள்.

நேரம் இரவு ஒன்பதரையை தாண்டி இருக்க...

கார் அபர்ணாவின் வீட்டை அடைந்திருக்க.... இறங்கினாள் அவள். பரத் அமர்ந்திருக்கும் ஜன்னல் அருகே வந்து நின்றாள். எதுவுமே பேசாமல் பார்த்திருந்தான் அவளை.

'ஆல் தி பெஸ்ட் பரத். உங்களுக்கு இனிமே எல்லாம் நல்லதா நடக்கணும்'

'நல்லதா??? எனக்கு எது நல்லதாம்???' வாயே திறக்கவில்லை அவன்.

'ஸீ யூ... வரேன்...'

'எப்போதாம்??? மறுபடியும் எப்போது பார்ப்பதாம்??? இல்லை பார்க்கவே முடியாதா???' விடை தெரியவில்லை அவனுக்கு. ஒரு வெறுமையான புன்னகையுடன் தலை அசைக்க மட்டுமே முடிந்தது அவனால்.

'வரேன் விஷ்வா....'  நகர்ந்து விட்டாள் அவள். பரத்தின் முகத்திலும், மனதிலும் கூட வெறுமை!!!

'மறுபடியும் வரமாட்டாளா???' பெருமூச்சுடன் கண்களை அவன் மூடிக்கொள்ள மறுபடி ஓடி வந்தாள் அபர்ணா.

'பரத்...' அவன் சட்டென கண் திறக்க...

'இந்த விஷ்வாவை கொஞ்சம் என்னனுன்னு கேளுங்க. அவன் வீட்டிலே சாப்பிடறதை விட்டு நாலு அஞ்சு  வருஷமாச்சு...'

'ஹேய்... லூசு...வாயை மூடு ...' விஷ்வா பாய...' கொஞ்சம் திகைத்து போனவனாக விஷ்வாவை ஒரு முறை பார்த்து விட்டு அபர்ணாவை பார்த்து கேட்டான் பரத்

'வீட்டிலே சாப்பிடறது இல்லையா? ஏன்???

'என்னை கேட்டா??? எல்லாம் உங்களுக்காகதான்.... கொஞ்சம் விசாரிங்க என்னன்னு...' என்றவள் ஒரு சின்ன புன்னகையுடன் சொன்னாள் 'நீங்க ரெண்டு பேரும் சீக்கிரம் சேரணும்... அதுக்குதான் சொன்னேன்... வரேன்...' நகர்ந்தாள்.

'எல்லாம் உங்களுக்காகத்தான்...' புரிந்தது அதன் அர்த்தம். விஷ்வா என்ன செய்துக்கொண்டிருக்கிறான் என புரிந்தது பரத்துக்கு.  பதில் பேசாமல் விஷ்வா காரை கிளப்ப, மௌனமாகவே அமர்ந்திருந்தான் பரத். இருவர் மனதிலுமே பேரலைகள்.

கார் பரத் தங்கி இருக்கும் ஹோட்டலை அடைய, காரை நிறுத்தினான் விஷ்வா. இறங்க வில்லை பரத். ஒரு நிமிடம் இருவரும் அப்படியே இருக்க.....

'நூத்தி எழுபத்தி நாலு ரூபா...' மெதுவாக எழுந்தது விஷ்வாவின் குரல்.

எதுவும் புரியாமல் பரத் அவனை கேள்வியாக பார்க்க 'உங்களை இங்கே கொண்டு வந்து விட்டதுக்கு டாக்சி சார்ஜ்...'

சட்டென பர்ஸை எடுத்து பணத்தை எடுத்துக்கொண்டு விஷ்வாவின் பக்கம் திரும்பியவனுக்கு அவன் முகத்துக்கு நேரே பணத்தை நீட்டி விட தோன்றவில்லை. என்ன தோன்றியதோ??? மறுபடி பணத்தை பர்ஸினுள் வைத்துக்கொண்டு அவன் காரை விட்டு இறங்க...

அடுத்த நொடி காரை விட்டு இறங்கி விட்டான் விஷ்வா., ஹோட்டலுக்குள் நுழைய போனவனை முன்னால் சென்று தடுத்தான்

'ஹலோ... காசு கொடுத்திட்டு போங்க ப்ரதர்...'

அவன் பதில் பேசாமல் நகர முயல அவன் சட்டையை பிடித்துக்கொண்டான் விஷ்வா 'டேய்... காசு கொடுத்திட்டு போடா...'

அங்கே இருந்த சிலரின் பார்வை இவர்களை தொட்டு செல்ல ஒரு பெருமூச்சுடன் கேட்டான் பரத் 'டேய்... இப்போ என்னடா பிரச்சனை உனக்கு??? நான் உன் கூட பேசணுமா???'

'ஆமாம் ...' அவன் சட்டையிலிருந்து மெல்ல கையை எடுத்தான் விஷ்வா.

'ஏன்டா இப்படி பைத்தியமா இருக்கே??? ஆமாம்...  ஏன் வீட்டிலே சாப்பிடாம இருக்கே... நீ என்ன பெரிய தியாகியா.???'

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.