(Reading time: 16 - 32 minutes)

மாலையில் அவன் மறுபடி அழைத்த போது நேரம் 5.30

'அபர்ணா... நான் ஒன் வீக் பெங்களூர் போறேன்... அங்கே ட்ரைனிங்... நைட் எட்டரை மணிக்கு பிளைட்..... எனக்கு உன்னை பார்க்கணும் போலே இருக்கு...அதுக்கு அப்புறம் உன்னை ஒரு வாரம் பார்க்க முடியாது  நீ நேரே ஏர்போர்ட் வரியா???' அவன் அவசரமாக கேட்க கொஞ்சம் திடுக்கென்றது அவளுக்கு.

இப்படி எல்லாம் தனியாக சென்று அவளுக்கு பழக்கம் இல்லை. அருணுடன் பேசுவதும் பழகுவதும் கூட அலுவலகத்தில் பார்க்கும் போது மட்டுமே. சில நேரங்களில் அவனே சொல்லி இருக்கிறான்...... .

'அவனவன் லவ்வரை கூட்டிட்டு எங்கெங்கயோ சுத்தறான். நீ என்னடான்னா இப்படி இருக்கே. உன்னை வெச்சிட்டு என்ன பண்றது???'

'என்ன செய்வதாம்??? அவள் வளர்ந்த விதமும், அவள் பழக்க வழக்கங்களும் அப்படி ஆயிற்றே???'

'நான் வீட்டிலே கேட்கணுமே...'

'ஹேய்.. நான் உன்னை பார்க்கணும்ங்கறேன்.. நீ என்னமோ... வீட்டிலே எதையாவது சொல்லிட்டு வா.. நான் சொல்லிட்டேன்..... அப்புறம் உன் இஷ்டம்....'

வீடு வந்து சேரும் போது மணி ஆறை தொட்டிருந்தது. என்ன சொல்வது வீட்டில்??? எப்படி போவது??? அவளுக்கு புரியவே இல்லைதான். அப்போது வந்து சேர்ந்தான் அந்த ஆபத்பாந்தவன். அவளது அண்ணன் அஷோக்!!!

அவளுக்கு அருணின் மீது இருக்கும் நேசம் வீட்டில் அவனுக்கு மட்டுமே தெரியும். ஓரிரு முறை அருணை பார்க்கவும் செய்திருக்கிறான் அஷோக்.

'அஷோக்... ' மெது மெதுவாக துவங்கினாள் 'அருண் என்னை ஏர்போர்ட் வர சொல்றார் நீயும் வரியா???' முதலில் அண்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை.

'இல்ல ஒரு வாரம் ஊருக்கு போறார் என்னை பார்க்கணும்னு...' அவள் சொல்லி முடிக்க விழுந்து விழுந்து சிரிக்க துவங்கினான் அஷோக்.

'அடிப்பாவி... இந்த உலகத்திலே லவரை மீட் பண்றதுக்கு அண்ணனையும் கூட கூட்டிட்டு போற முதல் பொண்ணு நீ தான்...'

'ப்ளீஸ்... அஷோக் எனக்கு அப்படி எல்லாம் போய் பழக்கம் இல்லை.... தனியா போக பயமா இருக்கு...' கவலை தோய்ந்த குரலில் சொன்ன தங்கையை பார்க்க பாவமாக இருந்தது அண்ணனுக்கு.  அவள் அருகில் அமர்ந்து அவள் தலையை தோளில் சாய்த்துக்கொண்டான்

'செல்லம்... செல்லம்... நீயெல்லாம் எப்படி லவ் பண்ணேன்னு புரியவே இல்லை. சரி வா போகலாம்...'

சென்னை விமான நிலையம்...

வெளியில் உள்ள கார் பார்க்கிங்கில் காத்திருந்தான் அருண். அவள் அண்ணனுடன் வந்து நிற்க அருணுக்கு நிறையவே ஏமாற்றம். அண்ணனை வைத்துக்கொண்டு அவளிடம் என்ன பேசுவதாம்???

மூவரும் சாதரணமாக பேசிக்கொண்டிருந்த அந்த நேரத்தில் அங்கே வந்து நின்றது அந்த டாக்ஸி. அதிலிருந்து இறங்கினான் பரத்!!!

மெல்ல திரும்பியவனின் பார்வையில் விழுந்தனர் சற்றே தள்ளி  நின்றிருந்த அந்த மூவரும். ஒரு முறை உயர்ந்து இறங்கின அவனது புருவங்கள்.

'மறுபடியும் பார்க்க மாட்டேனோ என்று நினைத்தேனே??? மறுபடியும் கண் முன்னே வந்து நிற்கிறாளே என் கண்ணம்மா!!!!'

அங்கே இருந்த மற்ற இருவரையும் ஒரு முறை அவன் பார்வை உரசியது. அவளது அண்ணனையும் அவன் பார்த்ததில்லை. இதில் ஒருவன் அருணாக இருக்க வேண்டுமென்று ஏனோ தோன்றியது அவனுக்கு. அவர்கள் பேசுவது கூட அவன் காதில் விழத்தான் செய்தது.

டாக்ஸிக்கு கொடுக்க பணத்தை எடுத்தபடியே அந்த பக்கம் அவன் கவனிக்க

'இல்ல அருண்...' அபர்ணா ஏதோ சொல்லிக்கொண்டிருக்க... அருணின் மீது விழுந்தது பரத்தின் பார்வை.

'இவன் தான் அருணா???' அவனை பார்த்தவுடன் எரிச்சல், பொறாமை போன்ற எந்த உணர்வும் எழவில்லை பரத்துக்கு. அவர்கள் அருகில் சென்று எந்த குழப்பத்தை ஏற்படுத்தவும் அவன் விரும்பவில்லை தான்

சில நொடிகள் இருவரையும் மாறி மாறி பார்த்திருந்தான். 'உயரத்திலும் நிறத்திலும் கூட இருவருக்கும் பொருத்தம்தான் என்று கூட ஒரு நொடி தோன்றியது அவனுக்கு. தனக்குள்ளே புன்னகைத்துக்கொண்டான் ஒரு முறை.

அந்த நேரத்தில்.... 

டாக்ஸிக்கு பணத்தை கொடுத்துவிட்டு அவன் நிமிர்ந்த அந்த நொடியில் தான் நடந்தது அது!!!

'ஹேய்... இதை பார்த்தியா... நேத்து ஒரு புது மொபைல் வாங்கினேன்,,, உனக்கு காட்டவே இல்லை...' சொல்லியபடியே அருண் அவன் நேற்று வாங்கிய புது மொபைலை எடுத்து அவளிடம் நீட்ட அது அவள் கைக்கு மாறுவதற்குள் எப்படியோ நழுவி தவறி கீழே விழுந்தது.

'இடியட்... கொஞ்சமாவது சென்ஸ் இருக்கா??? புது மொபைல்டி...' அருணின் குரல் சுள்ளென எகிறி சிதற... .அதில் அவள் அண்ணனே கூட கொஞ்சம் திகைத்து போக..... சுற்றி இருந்தவர்கள் அவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு போக... பொது இடத்தில் அவனது அந்த எதிர்பாராத கத்தலில் திடுக்கிட்டு போனவளின் கண்களில் தன்னாலே கொஞ்சம் நீர் சேர்ந்து விட...

சரியாக அப்போது அவர்களை கடந்து சென்ற பரத்தின் காதில் அந்த 'இடியட்.... ' தெளிவாக விழுந்தது. விருட்டென திரும்பியவனின் கண்களில் பட்டது அவள் கண்களில் தேங்கி நின்ற கண்ணீர்!!!!

Episode # 03

Episode # 05

தொடரும்......

{kunena_discuss:982}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.