(Reading time: 11 - 21 minutes)

ய், நான் என்ன பேசறேன், நீ என்ன பதில் சொல்றே?’

‘நீ போன் பண்ணது ராதாக்காவுக்கு, தெரிந்துவிட்டது, என்னை கேள்விக் கேட்டால், நான் என்ன சொல்லுவது,' என்று கேட்டாள்

‘நீ கவலைப் படாதே ராதா அப்படியெல்லாம் இல்லை, அப்படியே ஏதாவது கேட்டால், என்னிடம் கேட்க சொல் நான் பேசிக்கிறேன்' என்றான் சீனு

'சரி, நாளைக் காலைல பார்க்கலாம்,'என்றாள்,

'ஒகே, "குட் நைட்" நாளைக்குப் பார்க்கலாம்' என்று ஒரு பெரு மூச்சு எடுத்து விட்டாள்.

ரம்யா ரூமுக்குள் வந்தாள், ‘என்ன, அக்கா ஏதாவது கேட்டாளா?’ என்று கேட்டாள் ரஞ்சனா

‘இல்ல, ஒன்னும் கேட்கல, ஆனால் உன்னைக் கேட்டா என்ன சொல்லப் போற? நீ ஏன் போனை என் பக்கம் வக்கல்ல?’ என்று கேட்டாள்

‘என்ன கேட்டா, சும்மாத்தான் பண்ணான், கல்யாணத்தைப் பத்தி கேட்டான்னு சொல்லுவேன்.' என்று சொன்னாள்

‘சரி நாளைக்கு சீக்கிரம் எழுந்துகனுமாம் அதனால் நாம் படுக்கலாம் என்றாள் ரம்யா, ஆமாம், உன் ஆளு, என்ன சொன்னாரு?’ என்று கேட்டாள் ரம்யா

'ஒன்றுமில்லை, சும்மாதான்,' என்றாள்

‘ஒகே குட் நைட்,’ என்று சொல்லி இருவரும் கண்ணை மூடிக் கொண்டார்கள், ஆனால் ரஞ்சனா தூங்கவில்லை, சீனுதான் அவள் கண் முன்னால் வந்து என்னால் உன்னைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை என்று சொன்னான், அவள் கேவிக் கொண்டிருந்தாள், ரம்யா முழித்துப் பார்த்து ‘என்ன விஷயம்டி, ஏன் அழறே ‘என்று கேட்டாள் ரம்யா ,

‘இல்லை, ஒன்றுமில்லை’ என்றாள் ரஞ்சனா

‘பின்ன ஏண்டி அழறே, சீனு ஏதாவது சொன்னானா? நீ சண்டை போட்டியா?’ என்று கேட்டாள்,

‘இல்லை அதெல்லாம் இல்லை, நானும் அவனும் அந்த வீட்டில் மேல் மாடியில் பார்த்துப்போம், இப்போ அதே ஞாபகமா இருக்காம், அதான் கால் பண்ணான், அவன் சொன்னவுடன் எனக்கும்….. அவனை நான் மிஸ் பண்றேன்' என்று சொன்னாள்

‘ம்ம், என்னை பார், அதான் லவ்வெல்லாம் பண்ணாம நிம்மதியாக இருக்கேன்,இந்தத் தொந்தரவு எல்லாம் இல்லாம இருக்கேன்,’ என்றாள்

‘ஆமாம், உனக்கு யாரும் கிடைகல, அதனாலே நீ இப்படி பேசற, என் ஆள் பார் எவ்வளவு ஸ்மார்ட்ன்னு,' என்று சொல்லி அவளே சிரித்தாள்

‘என்னடி நீயே சிரிக்கிற? பைத்தியம் மாதிரி’ என்றாள் ரம்யா

'இல்ல ஒரு நாள் அவனை கலாய்ச்சேன் நீ அழகா இல்லைன்னு, அதுக்கு அவன் பரவாயில்ல, இந்த அழகில்லாதவன காதலிக்க உனக்கு ரொம்ப பெரிய மனசு, நீ மட்டும் அழகா இருந்தியானா, இன்னும் அழகானவனாத்தான் பார்த்துக் காதலித்திருப்ப பாவம் நீ, என்றான், அவனை துரத்தி, துரத்தி அடித்தேன் அதை நினைத்து சிரிப்பு வந்தது' என்றாள்

அதைக் கேட்டு ரம்யாவும் சிரித்தாள்,

‘பாவம் அவன் உன்னைக் கல்யாணம் பண்ணிண்டு என்ன பாடு படப் போறானோ’ என்றாள் ரம்யா

‘நிச்சயமாய் உனக்கு வரப்போகிறவனை விட இல்லை’ என்றாள் ரஞ்சனா

‘சரி, நாம நாளைக்கு பேசலாம், இப்போ தூங்கலாம், நீ அழுது ஆர்பாட்டம் பண்ணாமல் தூங்கு, என்னையும் தூங்க விடு,’ என்றாள் ரம்யா

தூங்கிவிட்டார்கள் இருவரும்

சிவா வீடு வரும்போது பன்னிரண்டு மணி, நேரே குளியலறை போனான் ஒரு குளியல் போட்டு வந்து படுத்தான், அந்த ஒண்டு குடுத்தனத்தில் தன் மேல் வந்து மோதின பெண்ணை நினைத்துப் பார்த்தான், அவள் முகம் அழகு நல்ல உயரம், கலர் கம்மி ஆனால் பார்க்க மிகவும் நன்றாக இருந்தாள், நாளைக்கு கல்யாணத்திற்கு வருவாளா? இல்லன்னா அவளை எப்படி காண்டக்ட் பண்ணுவது என்று நினைத்துக் கொண்டிருந்தான்

அப்படியே தூங்கிவிட்டான்,அவனுக்கு ஒரே அலைச்சல், காலை நாலு மணிக்கு எழுந்து ஏர்போர்ட் போக வேண்டும்

காலையில் நாலு மணி சிவா கிளம்பி விட்டான் ஏர்போர்டுக்கு

ஐந்து மணிக்கு கரக்டாக பிளேன் வந்து விட்டது, ஐந்தரை மணிக்கு ஆனந்தன் வெளியே வந்து விட்டான், அவன் ஒரே பாகுடன் வந்தான், அதனால் சீக்கிரம் வெளியே வந்துவிட்டான்

வெளியே வந்தவுடன் சிவாவைப் பார்த்தான்,' டாடி வரவில்லை?' என்று கேட்டான் ஆனந்தன் 'இல்லை சார், அவர் வர முடியாது, தெரியுமில்லையா?' என்றான் சிவா

‘ஒ!,யா, தெரியும்,’ என்று அமெரிக்கன் ஸ்டைலிலேயே சொன்னான், குரலில் ஒரு வெறுமைத் தெரிந்தது

அவன் வேறு ஏதும் கேட்கவில்லை, ‘இனிமே நான் அப்பாவை எதிர்பார்பது தப்பு,’ என்றான் சிவாவிடம்

வேறு ஏதும் பேசவில்லை.

'ரஞ்சனா சீக்கிரம்டி நானும் கிளம்பனும்' என்றாள் ரம்யா

ஆனால் அவளோ ‘இந்தா உன் புடவை அங்க ஒரு ரூம் இருக்கு அங்கே போய் கட்டிக்கோ என்னைத் தொந்தரவு பண்ணாதே’ என்று அவள் புடவையை கொடுத்து விட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.