(Reading time: 11 - 21 minutes)

ம்யா புலம்பிக் கொண்டே அங்கிருந்த ஒரு ரூமில் நுழைந்தாள், அவள் நைட்டியை அவிழ்த்து தன் புது பிளவ்ஸ் போட்டு அந்தக் கண்ணாடியில் அழகு பார்த்தாள். அந்த ரூமை இப்போதான் சுத்திப் பார்த்தாள், அழகாய் இருந்தது நல்ல பெரிதாக கட்டில் சோபா காபி டேபிள் டிரெஸ்ஸிங் டேபிள் என்று ரொம்ப அழகாக இருந்தது.

அவள் அந்த அழகை ரசித்துக் கொண்டே மெதுவாக புடவையை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தாள், கதவு திறந்த சத்தத்தை உணரவில்லை 'யார் நீ? இங்கு என்ன வேலை?’

அவள் பயத்தில் தன் புடவையை கீழே நழுவவிட்டாள், கண்கள் பயத்தில் விரிந்தது, முகமோ செக்கச் சிவந்தது, அவன் அவளை மேலிருந்து, கீழாக உற்று நோக்கினான், மனதினுள் இவ்வளவு அழகா? என்று நினைத்து 'ஒ, நீதான் அந்தப் பெண்ணா?’ என்று கேட்டு, ‘சரி புடவையை கட்டிக்கொள் நான் வெளியே இருக்கிறேன்’ என்று வெளியே வந்தான்.

மனதில் போராட்டம், யார் இந்தப் பெண், ஒரு வேளை, இந்தப் பெண்தான், அப்பாவைக் கட்டிக் கொள்ளப் போகிறவளோ? ஆனாலும் மிகவும் சின்னப் பெண்ணாக, இருக்கிறாளே? ஒரு வேளை அவர்கள் பெண்ணோ?என்று பலவாறாக யோசித்தான். ஆனாலும் மனதில் எவ்வளவு அழகு இந்தப் பெண்? அவளை அப்படியே கட்டிக் கொள்ள வேண்டும்போல், இருந்தது .

கதவு திறக்கும் ஓசைக் கேட்டது அவள் வெளியே கண்ணீருடன் வந்தாள்,'சாரி, நான் யாரையும் அந்த ரூமில் எதிர்பார்க்கவில்லை,ஐ அம்,,ரியல்லி சாரி....' என்று கூறினான் ,அவளோ அவனை நிமிர்ந்துக் கூட பார்க்காமல் சென்று விட்டாள்.

ரம்யா தங்களுக்கு கொடுத்திருக்கும் ரூமின் கதவைத் தட்டினாள், கதவை திறந்த ரஞ்சனா இவள் கண்ணீருடன் வருவதைப் பார்த்தாள்,'ஏய், என்ன ஆச்சு? என்று கேட்டாள்

ரம்யா, நடந்ததை சொன்னாள், ‘அவர் நான் தான் கல்யாணப் பெண், தனக்குப் பார்த்திருக்கும் பெண் என்று நினைத்திருக்கிறார், என்னை அலங்கோலமாக வேறு பார்த்துவிட்டார், இப்ப என்ன பண்ணறது?’ என்று கேட்டாள்

ரஞ்சனாவோ, ‘பரவாயில்லை நீ உன்னை சரி பண்ணிக்கொள் முதலில், பிறகு எல்லாம் பார்த்துக் கொள்ளலாம்,’ என்றாள் ரஞ்சனா

‘இல்லை, அக்காவிடம் சொல்லிவிட வேண்டும், ஒரு வேளை, அவர் சொல்லி விட்டால்?’என்ற ரம்யா கூற

‘சும்மா புலம்பாதே, அவர் சொன்னா சொல்லட்டும், ஆனால், நீ இப்ப ஏதாவது சொல்லி குட்டையைக் குழப்பாதே, நீ போய் முதல்லே ரெடி ஆகு,’ என்று கூறி அப்போதைக்கு அவளை சமாதானப் படுத்தினாள் ரஞ்சி.

ரஞ்சனா, ரம்யாவிடம் திரும்பி, ‘அவன் பார்க்க எப்படி இருந்தான் ?’ என்று கேட்டாள்

ரம்யாவின் முகம் செக்கச் சிவந்தது,

‘இதப் பார்ரா!!! இவ முகம் செவ்வானம் சிவக்கிறத....இப்பத்தான் புரியுது நீ என்னைப் பற்றி சொன்னது... சரி, சரி சொல்லு, ஆள், எப்படின்னு ?’ என்றாள் விடாமல்

‘நானே ஷாக்ல்ல... இருந்தேன்,ஆனால் கொஞ்சம் யோசித்துப் பார்த்துவிட்டு, சுந்தரம் சார் மாதிரியே இருந்தா மாதிரி இருந்தது, நான் முதலில் அவர்தான்னு நினைத்தேன் அப்புறம் அவர் பேச்சிலிருந்து அவர் இல்லை என்று புரிந்தது,’ என்றாள் ரம்யா

‘இதப் பாருடா, சரியா பார்க்கவில்லையாம் ஆனால் யாரை மாதிரி இருந்தான்னு தெரியுதாம் , சரி சரி நாங்க நம்பிட்டோம்!, ஒரு வேளை அந்த பீட்டர் தானோ? அதான் இருக்கும் அவர் ஜாடையில் வேறு யார் இருப்பார்,’ என்று ரஞ்சனா கூற

ரம்யாவோ, ‘அது யாருடி பீட்டர்?’ என்று கேட்டாள்

‘ஐயோ, மக்கு, பீட்டர்...ன்னா, அவன் அமெரிக்காவிலிருந்து, வந்திருக்கானில்லயா, அதான் அப்படி சொன்னேன், உனக்கு நான் விளக்கம் கொடுத்தே கிழவி ஆகிடுவேன், அதுக்கு முன்னாடி கல்யாணம் பண்ணிண்டு என் சீனுவுடன் சந்தோஷமாக வாழ வேண்டும், என்னை ஆளை விடு ‘ என்று கிளம்ப ரெடி ஆனாள். ‘நீ ரெடியா, வா போகலாம்’ என்றாள் ரஞ்சி

ரம்யாவோ, 'ஏய்,ரஞ்சி எனக்குப் பயமாக இருக்குடி, 'என்றாள்

'எப்படி இருந்தாலும், கீழே போகவேண்டியது தானே, வா, போகலாம்' என்றாள்

இருவரும் கிளம்பி கதவை மூடினர்

எதிரில் சுந்தரம் வந்துக் கொண்டிருந்தார், 'டூப்பா, நிஜமா?' என்று மெதுவாக, ரஞ்சி, ரம்யாவிடம் கேட்டாள், அவளே நடுங்கிக் கொண்டிருக்கிறாள்,

அங்கே வந்த சுந்தரம் அவர் மகனின் ரூம் கதவைத் தட்டிக்கொண்டே, இவர்களிடம் 'குட் மார்னிங்' என்றார், இவர்களும் 'குட் மார்னிங்' என்றனர்

உடனே கதவு திறந்தது, சுந்தரம் ஹே, ஆனந்தா,' என்று அவனைக் கட்டிக்கொண்டார், அவன் ரம்யாவையே முறைத்துக் கொண்டிருந்தான் அவள் முகம் சிவந்து விட்டது, விடு விடு என்று நடந்துப் போனாள் ரம்யா.

அவனும் அப்பாவைக் கட்டிக் கொண்டான், ‘ அப்பா என்னை வந்து பிக்கப் பண்ணக்கூட முடியவில்லை?’ என்று கேட்டான்

‘அப்படி இல்லையடா, எல்லோரையும் கவனிக்க வேண்டுமில்லையா, ‘என்றார்

‘அது சரி, என்ன இந்த திடீர் முடிவு?’ என்று கேட்டான்

‘சின்ன வயதில் இல்லாத கல்யாண ஆசை, இப்போது ஏன்? அதுவும் நான் கல்யாண வயதில் இருக்கும் போது?' என்றான் அவர் மகன்

‘ஐ டிட் நாட் எக்ஸ்பெக்ட் திஸ் பிரம் யு,’ என்றான் மகன்

தொடரும் 

Episode # 13

Episode # 15

{kunena_discuss:1005}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.