(Reading time: 11 - 22 minutes)

ராக்கில் உள்ள இஸ்லாமியர்கள் எல்லோரும் அமெரிக்கர்களை வெறுப்பவர்கள் தான், ஜின்னா உட்பட. அப்படி இருந்தும், அவர் ஜான்சனுக்கு பணிந்து பேசினார்.என்றால் அதற்கு காரணம் உண்டு.

ஒருமுறை, ஜின்னாவின் கடைசி மகன் தீவிரவாதிகளோடு தொடர்பு வைத்திருப்பதாய் ராணுவத்திற்கு தகவல் கிடைத்து அவனை கைது செய்து அழைத்து சென்றனர். தீவிரவாதிகளை பற்றி விசாரிப்பதற்காக அவனை கடுமையாக தாக்கினார்கள். ஜின்னாவின் மகன் தனக்கு எதுவும் தெரியாது என கடவுள் மேல் சத்தியம் செய்தான். ஆனால், ராணுவத்தினர் நம்பவில்லை.

ஜின்னா பதறினார். என்ன செய்வதென்று அவருக்கு புரியவில்லை. தினமும் ரோந்து செல்லும் ஜான்சனை காண்பது வழக்கம். ஆனால், பேசிக்கொண்டதில்லை. தனக்கு தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் அவனிடம் உதவி கோரினார்.

ஜான்சனும் ஜின்னாவின் மகனைப் பற்றி விசாரித்து அவன் தீவிரவாத தொடர்பு கொண்டவன் அல்ல என்று நிரூபித்து ஜின்னாவின் மகனைக் காப்பாற்றினான். அதனால் ஜான்சனின் மேல் மட்டும் அவருக்கு நன்மதிப்பு வந்தது.

மேலியா வெகுதூரம் நடந்துவிட்டதால், அவளது உடலே அவளுக்கு பாரமாய் தோன்றியது. நடந்த சம்பவங்களை நினைவு கூர்ந்தாள். எனது வாழ்க்கையில் இத்தனை திருப்பங்களை கொண்ட நாட்களை நான் கண்டதில்லை என்று தனக்கு தானே கூறிக் கொண்டாள். குளிர் உடலை கவ்வியது. கால் முட்டிகள் மேற்கொண்டு நடக்காதே என அவளை வலியால் துன்புறுத்தியது. இருந்தும் அவள் நடந்தாள், நடந்து கொண்டே இருந்தாள்.

ஒரு நாள் முழுவதும் உணவு இல்லாமல் தடுமாறியபடியே வந்தாள். அந்த அமெரிக்க பெண் தான் ஈராக்கை சேர்ந்தவள் என்று தெரிந்ததும் எதற்கு தன்னை சுட்டுக்கொல்ல முயன்றாள்  என்று தன்னை தானே கேட்டுக் கொண்ட அவளுக்கு விடை தெரியவில்லை. இந்த அமெரிக்கர்களுக்கு ஈராக்கியர்களை துளியும் பிடிக்காது போலும்! என்று ஒரு விடையை அவளே கூறிக் கொண்டாள்

நீண்ட நேரம் இருளையே கண்டு வந்தவளுக்கு முதல் முறையாக வெளிச்சம் தென்பட ஆரம்பித்தது. வெடி பொருட்கள் வானில் சீறிப் பாய்ந்து விண்ணில் மத்தாப்புகளாய் சிதறி பூமியை நோக்கி ஓடி வந்தன. தன் மேல் விழப் போகிறது என்று பயந்து ஓடினாள் அமேலியா. ஆனால், அவளை நோக்கி வந்த மத்தாப்புகள் அந்தரத்திலேயே காணாமல் போய்விட்டன. அது அவளுக்கு வியப்பைத் தந்தது. மீண்டும் மீண்டும் வானில் பொழிந்த மத்தாப்பு மழையை குழந்தையைப் போல் பூரிப்போடு பார்த்தாள். அவள் பாதையில் வெளிச்சம் உருவானது. தொடர்ந்து நடந்தவளை பெரிய வீதி ஒன்று வரவேற்றது.

வீதியின் இரு பக்கங்களிலும் கடைகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இரவு என்ற ஒன்று மறைந்து பகல் உருவானது போல் இருந்தது. மக்கள் அங்கும் இங்கும் நடந்து சென்றுகொண்டிருந்தனர். அமேலியாவிற்கு அதிசயமாக இருந்தது. இரவில் இப்படி ஒரு இடம், அதுவும் இவ்வளவு மக்கள் நடமாடிக் கொண்டிருப்பார்களா! என்று ஆச்சர்யம் கொண்டாள். ஈராக்கில் இரவு ஏழு மணிக்கு மேல் மக்கள் நடமாடுவதையே நிறுத்தி வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடப்பார்கள். ஆனால், இன்று அவள் காண்பதோ நம்பவே முடியாத ஒன்று.

மெல்ல அவள் வீதியில் நடந்து சென்றாள்  அவளைக் கடந்து சென்ற மக்கள் அவளை அருவெறுப்போடு பார்த்து சென்றனர்.  அவள் கண்களில் கண்ணீர் ஊற்று பெருகியது. இதுவரை வெளி ஆட்களின் முன்னால் தன் முகத்தை மறைத்து வைத்தே பழக்கப்பட்டவள், இன்று விதியின் கொடுமையால் தலையில் அணியும் முக்காடு கிழிந்து மற்றவர்கள் தன் முகத்தைக் காணும்படி சூழல்  அமைந்துவிட்டதே! அல்லாஹ் இது என்ன சோதனை! என்று மனதிற்குள் பொருமினாள். அவளுக்குள் தாழ்வுமனப்பான்மை மேலோங்கியது

யாரிடம் உதவி கேட்பது என்று அவள் குழம்பினாள். அவளை நோக்கி வயதான பெண்ணொருத்தி நடந்து வந்தார். அவரை தடுத்து நிறுத்திய அமேலியா அவரிடம் உருதுவில் உதவி கூறினாள். அமேலியாவின் கோலத்தை கண்ட வயதானவள் பசிக்கு உணவு கேட்கிறாள் என்று எண்ணி தன்னிடமிருந்த ரொட்டி பொட்டலத்தை அவளுக்கு கொடுத்துவிட்டு சென்றார். 

இவர்களுக்கு நான் எப்படி புரியவைப்பேன் என்று அவள் மனதளவிலும் உடலளவிலும் சோர்ந்து போனாள். அப்பொழுது ஒருவன் போனில் பேசிக்கொண்டு கையில் மலர்கொத்துடன் அவளைக் கடந்து சென்றான். அவனுடைய பர்ஸ் கீழே விழுந்தது. அதைப் பார்த்த அமேலியா பர்ஸை எடுத்து, அவனிடம்  கொடுக்க முனைந்தபோது அவன் கூட்டத்தில் எங்கு சென்றான் என்பதே தெரியவில்லை. சுற்றும் முற்றும் அவனைத் தேடியவள் திடீரென சிலையென நின்றாள்.

அமேலியாவையே பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தார் ஒரு போலீஸ்காரர்.

தொடரும்...

Episode # 06

Episode # 08

{kunena_discuss:983}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.