(Reading time: 8 - 16 minutes)

நிர்பயாவை பார்த்தவன்,

"வாயை மூடிட்டு சும்மா இருக்க மாட்ட?இவன் எல்லாம் அடித்தா தாங்குவியா நீ?"-என்றான்.அவன் யாருமில்லை ஜோசப் தான்!!

"ஏன் ப்ரோ!தனியா இருக்கிற பொண்ணு அனுமதியில்லாம அவளை அடைய முயற்சி பண்ற வெட்கமா இல்லை??"

"யார்டா நீ?"

"நியாயத்தை யார் சொன்னா என்ன ப்ரோ?போ!கையை காலை உடைத்துக்காம,வீடு போய் சேரு போ!"

"டேய்!"-என் கோபத்தில் அவனை அடிக்க வந்தவனின் கரத்தைப் பற்றி முறித்தான் ஜோசப்.அவனது எலும்பு முறியும் சத்தமானது,நிர்பயாவின முகத்தில் திகிலை பரவ வைத்தது.

அதை பார்த்த மற்றொருவன் அவனை தாக்க வர,அவன் ஒரு அறை தான் அவனை அறைந்திருப்பான்,ஓடி வந்தவன் அப்படியே மயங்கி விழுந்தான்.

எஞ்சிய இருவரும் உயிரை காக்க அங்கிருந்து ஓடிவிட்டனர்.

"ஐயயோ!செத்துட்டானா?"-என்று அவன் மூச்சை பரிசோதித்தான் ஜோசப்.அது சீராக தான் இருந்தது.

"ம்..உயிர் இருக்கு!"-என்றவன்,கை முறிந்தவனை பார்த்தான்.அவன் அச்சத்தில் பின்னால் நகர்ந்தான்.

"இங்கே வா!"

"ம்ஹூம்!"

"வா!அடிக்க மாட்டேன்!"-என்றவன் அவன் தோள் மீது கையை போட்டுக் கொண்டு நடந்தப்படி பேசினான்.நிர்பயாவிற்கு அவன் செய்கைகள் ஒன்றும் புரியவில்லை.

"என்ன பண்ற நீ?"

"சும்மா தான் இருக்கேன்ணா!"

"அப்போ குடிக்க,கூத்தடிக்க பணம் எங்கிருந்து வருது?"

"அப்பா பிசினஸ் மேன்ணா!"

"ம்..அப்பாவோட பணத்துல ஒரு குறிப்பிட்ட வயசு மேலே வாழுறதே தப்பு!நீ தண்ணியா செலவு பண்ற!அவருக்கு கெட்டப் பேரு வாங்கி தர!"

"............."

"ஒழுங்கா வேலைக்கு போய் சம்பாதி,அப்போ தெரியும் உழைப்போட வலி என்னன்னு!"

".............."

"யாரையாவது லவ் பண்றீயா?"

"ம்ஹூம்!"

"ம்...பொண்ணுங்களை பொம்மையா நினைத்தால் காதலோட அருமை எங்கே தெரியும்?"-என்றவன் அவன் சட்டையை சீராக்கினான்.

"இப்படி இருக்காம,உருப்படுற வேலையை பாரு!ஒரு காலத்துல நானும் உன்னை மாதிரி தான் இருந்தேன்.ஆனா,என் வாழ்க்கையில வந்த ஒரு தேவதை என்னை மொத்தமா மாற்றினா!என் அனுபவத்துல சொல்றேன்.உனக்காக வாழு!உனக்காக மட்டும் வாழாதே!புரியுதா?"

"ம்..."

"ம்...ஆம்புலன்ஸ்க்கு போன் பண்றேன்!கம்ப்ளைண்ட் கொடுக்க பெயர் கேட்டா,ஜோசப் வில்மட்னு சொல்லு!இது என் கார்டு!இதில் என் அட்ரஸ் இருக்கு!"-என்றவன்,தன் கார்ட்டை கொடுத்துவிட்டு ஆம்புலன்ஸ்க்கும் போன் செய்து விவரத்தை கூறிவிட்டு நடந்தான்.அவன் அருகே வர வர,நிர்பயாவின் இதயத்துடிப்பு காரணமே இன்றி,உச்சத்தை தொட்டது. அவளருகே வந்து நின்றவன்,

"போகலாமா?"என்றான்.

அவள் குழப்பமாக அவளை பார்த்தாள்.அவனிடம் அவளது தைரியம் எடுப்படவில்லை.

8 வருடங்களுக்கு முன் இருந்த அதே நிலையில் இருந்தாள் அவள்.

"பைக்ல வருவியா?"-பதில் இல்லை.

"உன்கிட்ட பேசுறதும் சுவருக்கூட பேசுறதும் ஒண்ணு தான்!"-என்றவன் யாருக்கோ அழைப்பு விடுத்தான்.

"ஹலோ எட்!"

"சொல்லுண்ணா!"

"அவுட் ஹவுஸ் பக்கத்துல என் பைக்கை விட்டு இருக்கேன் வந்து எடுத்துட்டு போயிடு!நான் ஒரு 30 நிமிஷத்துல வந்துடுறேன்!"

"சரிண்ணா!"-இணைப்புத் துண்டிக்கப்பட்டது.

"உங்க வீடு வரைக்கும் விட்டுட்டு வரேன் வா!"

"இ..இல்லை நானே போயிக்கிறேன்!"

"ஒண்ணும் தேவையில்லை!இல்லை..உங்க வீட்டுக்கு போன் பண்ணி யாரையாவது இங்கே வர சொல்லு!ஒருவேளை என் கூட வர விருப்பம் இல்லைன்னா!"-என்றவன் அவளை உற்றுப் பார்த்தான்.

அவள் பேசாமல் நின்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.