(Reading time: 8 - 16 minutes)

ஜோசப் புன்னகைத்தப்படி  நடக்க,இவள் பின்தொடர்ந்தாள்.அவளது பார்வை அவனையே அடந்திருந்தது.

மனதில் ஏதோ உறுத்த பின்னால் அவன் திரும்ப,அவள் சட்டென தன் பார்வையை தாழ்த்திக் கொண்டாள்.

"ஹலோ!"

"ம்??"

"முன்னாடி வா!"-அவள் தயக்கத்தோடு முன்னால் வந்தாள்.

"என்ன சைட் அடிக்கிறீயா??நான் ஏற்கனவே 8 வருஷமா ஒரு பொண்ணை லவ் பண்றேன்!அது என்னது...ஆ..நான் ஏக பத்தினி விரதன்!அதனால,என்னை சைட் அடிக்கிற வேலை எல்லாம் வைத்துக்காதே!"-என்ற வார்த்தைகளிலும் அவளுள் எழுந்த மின்னலைகள் பல!!இதுவரை இதுப்போன்ற உணர்வை அவள் சந்தித்ததில்லை.

"நட!"-என்றவன் மீண்டும் நடக்க ஆரம்பித்தான்.ஆனால்,அவள் அசையவில்லை.

8 ஆண்டுகளாய் மறைக்கப்பட்டிருந்த காதல் தடையை உடைத்துக் கொண்டு வெளியே வந்தது.

அவளது செய்கை புரியாதவன்,

"ஓய் என்ன நீ?மதிக்கவே மாட்ற?கொழுப்பு??கலெக்டர்னு திமிரா??பழைய விஷயத்தெல்லாம் மறந்துடாதே!எனக்கு கோபம் வந்ததுன்னா..."-என்றவனை நோக்கி ஓரடி எடுத்து வைத்தாள் நிர்பயா.

"வந்ததுன்னா??"

ஏ...பின்னாடி போ!"-அவன் பின்னோக்கி நடந்தான்.

"ஏ..சொல்றேன்ல பின்னாடி போடி!"-என்றவன் ஒரு மரத்தினால் தடுக்கப்பட்டான்.

அவனறிவான் அவள் மனதில் புதைந்திருக்கும் காதலின் வெளிப்பாட்டை!!!

ஜோசப் எங்கிருந்தோ தன் முகத்திற்காக சிறிது அச்சத்தை கடன் வாங்கிக் கொண்டான்.

எந்த ஒரு பெண்ணும் வேண்டுவது ஒன்றே தன் இணையானவர் தன்னிடம் குழந்தைத்தனத்தை வெளிப்படுத்த வேண்டும்.அதை போல,எந்த ஒரு ஆணும் வேண்டுவது ஒன்றே தன் துணைவியின் சுட்டித்தனம் தனக்கு மட்டுமே உரிதாக வேண்டும்  என்பதே அது!!

தன்னருகே தன்னவள் நெருங்க நெருங்க உண்மையில் அவனது இதயமும் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.ஒரு காலத்தில் இதற்காக அவன் தவம் செய்யாத நாள் இல்லை.ஆனால்,அவளோ அவனை பார்த்தாலே அஞ்சி ஓடுவாள்.இன்று அவள் நெருக்கத்தை கொண்டாட,அவனுக்கு அங்கீகாரம் கிட்டவில்லை.மெல்ல அவனை நெருங்கியவள்,தூக்கிக் கொண்டிருந்த அவன் சட்டையின் காலரை இறக்கி விட்டு விலகினாள்.

ஒரு பெரும் ஏமாற்றம் அவன் முகத்தை ஏக்கத்தில் மூழ்க செய்தது.

அவன் அதிர்ச்சியாக அவள் முகத்தைப் பார்த்தான்.

"8 வருஷமா ஒருத்தியை லவ் பண்றீங்களே!செட் ஆச்சா?"-அவன் இல்லை என்று தலையசைத்தான்.

அவள் முகத்தில் மந்தகாசப் புன்னகை!!

"செட் ஆகுறதுக்கு வாழ்த்துக்கள்!!"-அவன் திருதிருவென்று விழித்தான்.

"ம்..சரி போகலாம் வாங்க!"

"எங்கே??"

"அவசியம் சொல்லணுமா?"

"..............."

"துணைக்கு வாங்க போகலாம்!"

"நான் வேணாம்னு சொன்ன?"

"இதுவரைக்கும் நான் ஒருமுறை கூட அப்படி சொன்னதில்லையே!"-அவனிடம் மேலும் அதிர்ச்சி!எதை கூறுகிறாள் இவள்??

"என்ன?எது நடந்தாலும் எதைப் பற்றியும் கவலைப்படாம உன்னை பாதுகாக்குற பொறுப்பு என்னுடையதுன்னு சொல்லுவீங்க?இப்போ துணைக்கு கூப்பிட்டா கூட வர மாட்றீங்க?"-ஜோசப் கூர்மையாக புன்னகைத்தப்படி அவளை பார்த்தான்.

"இன்னிக்கும் அதே தான் சொல்றேன்.என்ன நடந்தாலும்,எதை பற்றியும் கவலைப்படாம உன்னை பாதுகாக்குறது என்னோட பொறுப்பு அம்மூ!"-என்றவனின் குரலில் உறுதி தொனித்தது.

தொடரும்

Episode # 05

Episode # 07

{kunena_discuss:1030}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.