(Reading time: 10 - 20 minutes)

"நிர்பயாவை ஒருத்தன் கூட பார்த்தேன் மாமா!"-கார்த்திக்கின் கூற்று சங்கரனை திடுக்கிட வைத்தது.

"என்ன உளர்ற?"

"நடுரோடுன்னு கூட பார்க்காம அவ அவன்கூட நெருக்கமா இருந்தா!!"

"அவ அது மாதிரி செய்யுறவள் இல்லை!"

"நான் பொய் சொல்லலை..நமக்கு அவ முக்கியமில்லை.அவ பவர் முக்கியம்!அதை நாம பயன்படுத்தணும்னா,அவ வைராக்கியத்தை உடைக்கணும்!அதுக்கு ஒரே ஆயுதம் பல்லவி அத்தை தான்!"

"................"

"அடுத்த விளையாட்டை ஆரம்பிங்க!நிர்பயா அவளுக்கே தெரியாம நமக்கு சாதகமா விளையாடணும்!"

"ம்..."-உண்மைநிலை அந்த உரையாடலில் உடைப்பட்டது.

"அந்த பையன் யாருன்னு என்ன எல்லா விவரமும் எனக்கு வேணும்!!இன்னிக்கு ராத்திரிக்குள்ள!"

"கொண்டு வந்து தரேன் மாமா!"-சங்கரனின் வழியில் புதிய சிக்கல் உருவானது.

"ண்ணா!ஒரு சாக்கோ பார் கொடுங்க!"-அந்த ஐஸ் வண்டிக்காரனிடம் கேட்டாள் நிர்பயா.

"வணக்கம் மேடம்!"

"ஐஸ்கிரீம் கேட்டா வணக்கம் சொல்றீங்க?சாக்கோ பார் இல்லையா?"-என்றவளை விசித்ரமாக பார்த்தார் அவர்.

"நீங்க கலெக்டர் தானே?"

"ஆமா..ஏன்??கலெக்டருக்கு ஐஸ்கிரீம் இல்லையா?"

"ஐயோ!அப்படியில்லைங்க..!"-என்றவர் ஒரு பனிக்கூழை எடுத்து அவளிடம் தந்தார்.

"இந்தாங்க!"-அதற்கான பணத்தை நீட்டிவளை மீண்டும் அதிர்ச்சியாக பார்த்தார்.

"வாங்கிக்கோங்க!"

"இல்லை..கலெக்டர்கிட்ட போய்..!"

"கலெக்டர் தானே கடவுள் இல்லையே!பிடிங்க..!"

"இல்லைம்மா..சில்லரை இல்லை!"-அவர்,அவளிடம் பணம் வாங்க கூடாது என்று இருந்தார்.

"பரவாயில்லை...நாளை பின்ன என்னை எங்கேயாவது பார்த்தா மீதி சில்லறைக்கு ஐஸ்கிரீம் கொடுத்துடுங்க!"-என்று அவர் கையில் பணத்தை திணித்துவிட்டு நகர்ந்தாள்.அவள் அதை பிரிக்க முயன்றப்படி வர,சட்டென அதை பிடுங்கியது ஒரு கரம்.

புன்னகைத்தப்படி அவள் முன் நின்றான் ஜோசப்!!

"நீங்களா?"-அவளிடம் ஒரு தயக்கம்!!

"ம்..நான் தான்!இன்னும் உனக்கு இந்த பழக்கம் போகலைல்ல?"-என்றவனை முறைத்தாள் அவள்.

"ஸ்கூல் படிக்கும் போது ஐஸ்கிரீமா வாங்கி சாப்பிடுவ!இப்போ கூட இது உனக்கு சலிக்கலை போல!"

"ஒரு விஷயத்தை பிடித்துவிட்டால் அது சலிக்காது!"-என்றவள் அப்பனிக்கூழை பிடுங்கினாள்.

"நீங்க இங்கே என்ன பண்றீங்க?"

"நான் சும்மா வேடிக்கை பார்த்தப்படி வந்தேன்.வந்த இடத்துல ஒரு ராட்ஸஸியை பார்த்துட்டேன்!"

"ராட்ஸஸியா?"

"ம்...சரியான அழுமூஞ்சி,பயந்தாங்குளி!"

-நிர்பயா அவன் பேச்சை கேட்க விரும்பாமல் விருட்டென்று நடந்தாள்.

"ஏ..எங்கே போற?"-என்றவன் சிந்திக்காமல் அவள் கரத்தை பற்றினான்.அவனது முதல் தீண்டல் உண்மையில் அவளை உறைய வைத்தது.

அவளின் இதயத்துடிப்பு உச்சமடைந்தது.

ஜோசப் ஒரு புன்னகையோடு அவளை மெல்ல நெருங்கினான்.அவளது கரத்தில் இருந்த பனிக்கூழ் தன்னால் கீழே விழுந்தது.

பெரும் மூச்சுகள் அவளிடமிருந்து வெளியாகின.மெல்ல அவள் முன்னால் போய் நின்றான் ஜோசப்!!

முகம் நிலம் நோக்க நின்றவளை,மெல்ல நிமிர்த்தினான் அவன்.அந்த கண்களில் ஒரு ஏக்கம்!!ஆம்...!அத்தனை வருடமாய் ஏங்கிய அன்பு எதிரில் இருந்தும்,உரிமை கொண்டாட முடியாததால் உருவான ஏக்கம் அவள் கண்களில்!!

ஜோசப் அவளது முடிக்கீற்றை விலக்கி விட்டான்.அவளது கரங்கள் அவனது சட்டையை அழுந்த பற்றி இருந்தன.இரு விழிக்குமான இடைவெளி குறைந்து அவள் இதயத்துடிப்பை எகிற வைத்தது.

"ஹனி!"-பரிச்சயத்திற்குரிய குரல் உக்கிரமாக ஒலிக்க பதறிக்கொண்டு விலகினாள் நிர்பயா.அவளை அழைத்தவரை கண்ட மாத்திரத்தில் அவள் முகம் வெளிறிப் போனது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.