(Reading time: 10 - 20 minutes)

"சார்!எனக்கு யாரும் கிடையாது.ஒரே ஒரு தம்பி மட்டும் தான்!மாமாவும் கொஞ்ச நாளுக்கு முன்னாடி இறந்துட்டார்.8 வருஷத்துக்கு முன்னாடி எப்படியோ இருந்த என் வாழ்க்கையை மாற்றினவளே என் அம்மூ தான்!வெளிப்படையா சொல்றேன்...அவளுக்காக தான் நான் திரும்பி வந்தேன்!சார்,நிஜமா அவளை மாதிரி ஒரு பொண்ணு வாழ்க்கை துணையா வர ஆயிரம் வருஷமாவது தவம் பண்ணணும் சார்!நான் ஆரம்பத்துல அவளை டைம் பாஸா தான் நினைத்தேன்.ஆனா,எனக்கு அப்போ தெரியலை,அவ எனக்கே தெரியாம என்னை அவ அன்புக்கு அடிமையாக்கிட்டு இருந்தான்னு!"

"இந்த 8 வருஷம் அவ இல்லாம எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு எனக்கு தான் தெரியும்!எனக்கு புரியுது,நீங்க வளர்த்த பொண்ணு யாரோ ஒருத்தன் கூட நெருக்கமா இருக்கிறதை பார்க்கும் போது உங்களுக்கு வலிக்கும் தான்!ஆனா,வெளிப்படையா சொல்றேன் சார்,அவளை மாதிரி ஒழுக்கமான பொண்ணை பார்க்கிறது கஷ்டம்!நான் ஒரு கிறித்துவன் தான்!ஆனா,உங்க குழந்தையை உங்க அளவுக்கு பாதுகாப்பா,பாசத்தோட நிச்சயம் பார்த்துப்பேன்!"

"நான் ஒத்துக்கலைன்னா?"

"என்னால அவளை விட்டு போக முடியாது!அவ இல்லைன்னா,என் வாழ்க்கையே அர்த்தமில்லாம போயிடும்!என்னோட ஆதாரமே அவ தான்!எங்களை பிரித்திடாதீங்க!"-வைத்தியநாதனின் பார்வை அவனை துளைத்தது.

"எனக்கு ஜாதி எல்லாம் அவசியம் இல்லாதது.உன்னை பற்றி ஏற்கனவே தெரியும்!எனக்கு தேவை எல்லாம் ஹனிக்கு எந்த ஒரு விதத்துலயும் கஷ்டம் வர கூடாது!உன்னை நம்புறேன்!வீட்டில கலந்து பேசி சீக்கிரம் நல்ல நாள் குறிக்கிறேன்."-என்றார் புன்னகைத்தப்படி!!!

இதைக்கேட்ட நிர்பயாவின் கண்கள் துளிர்த்தன.

"அவ்வளவு தான் ஐந்து நிமிஷம் மனம் விட்டு பேசுனா பிரச்சனை முடிய போகுது!அதை விட்டு ஒப்பாரி வைக்கிற லூசு?"-அவன் சாதாரணமாய் கூற,அவள் என்ன செய்வதென்றே புரியாமல் அவனை அணைத்துக் கொண்டாள்.அவளது முதல் அணைப்பு!!ஒரு ஆண்மகனாக இருந்தாலும்,அவனுக்குள்ளும் ஒரு வித மின்சாரம்!!

அவளை விலக்க மனம் தைரியம் கொள்ளவில்லை.மெதுவாக அவளை தழுவிக் கொண்டான் ஜோசப்.

"லூசு!"-அவளிடம் பேச்சில்,அவனது நெடிந்துயர்ந்த அன்பில் தன்னை கரைக்க ஆரம்பித்தாள் அவள்.

சில நிமிடங்கள் சென்றதும்,அவனே தொடர்ந்தான்.

"ம்..பாரேன்!உன்னை எதுக்காக வர சொன்னேனோ அதை விட்டுட்டு மற்றதெல்லாம் செய்றேன்!"

"எதுக்காக...வர..சொன்னீங்க?"-தயக்கத்தோடு கேட்டாள் அவள்.

ஜோசப் அவளது கரத்தை தனது தோளின் மீது வைத்தான்.

"நீ பாதியிலே நிறுத்துனதை முழுசா கொடுத்துட்டு போ!"-அவன் கேட்டதும் திகைத்து போனாள் நிர்பயா.

"நான் கிளம்புறேன்!"

"அப்பறம் எனக்கு தூக்கமே வராது!அப்பறம்,உன் மனசுக்குள்ள லாக் ஆகி இருக்க திருடன்,கனவுல வந்து தன் புத்தியை காட்டிவிடுவான்!"-எச்சரித்தான் ஜோசப்.

அவனது எச்சரிக்கையில் தடுமாறி போனாள் நிர்பயா.

"சீக்கிரம்..!"

"நான் மாட்டேன்!"

"மாட்டேன்னு சொன்னா?விட்டுவிடுவேனா??எனக்கு பொருளை நானே எடுத்துக்கிறேன்!"-என்றவன் அவளை நெருங்க,அவள் பின்னால் நகர்ந்து மரத்தில் மோதினாள்.

ஜோசப் அவளது இரு கன்னங்களை பற்றி,மெல்ல அவளது இதழில் தன் காதலை பதிவு செய்தான்.முதல் தீண்டல்!!உரிமைக்கொண்ட அவன் தீண்டல்,அத்தனை வருடம் அவளது காயங்களை நீக்கிய ஒரு தீண்டல்!!

அவன் காதலை ஆழமாய் எடுத்துரைத்தது அவன் தீண்டல்!!

ஜோசப் ஒரு மந்தகாச புன்னகையோடு அவளை விலகினான்.அவளது கண்களில் கண்ணீர் துளிர்த்திருந்தது.

"ஏ..என்னாச்சு?"-அவள் விசம்பியப்படி மீண்டும் தன் சகத்தை அணைத்துக் கொண்டாள்.வலிகளின் மருந்தினை அவனது நெருக்கத்தில் காண்கிறாள் போலும்!!!

தொடரும்

Episode # 06

Episode # 08

{kunena_discuss:1030}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.