(Reading time: 10 - 20 minutes)

"ன்ன காரியம் பண்றம்மா நீ?என்ன இதெல்லாம்?"-வைத்தியநாதனின் கேள்விக்கு அவளால் பதில் கூற இயலவில்லை.தலை குனிந்து நின்றிருந்தாள்.

"யாரிவன்?"

".............."

"கேட்கிறேன்ல!"-அவர் கோபமாக கேட்கவும்,ஜோசப் இதழ் மலர்ந்தான்.

"சார் என் பெயர் ஜோசப்!ஜோசப் வில்மட்!நான்..."

"நான் கேட்டது என் பேத்தியைப்பா!உன்னை இல்லை.."

"..........."

"பதில் சொல்லு ஹனி!"

"ஜோசப் தாத்தா!"-அதற்கு மேல் அவளால் எதுவும் பேச இயலவில்லை.மனதில் ஏதோ உறுத்த,அங்கிருந்து அழுதப்படி உடனடியாக விலகிவிட்டாள் அவள்.

கண்களை கசக்கியப்படி தன்னறைக்குள் நுழைந்தவளை அதிர்ச்சியாக பார்த்தார் பார்வதி.

ன்றிரவு....

"அந்த பையனை என்னன்னு சொல்வேன் பாரு?அவன்.."-அவர் பேச்சு தடுமாறியது.

"என்னங்க நடந்தது?நிர்பயா  சாப்பிடவே இல்லை.அந்த ரூமை விட்டே வெளியே வரலை!என்ன தான் ஆச்சு?"

"நிர்பயாக்கு சீக்கிரம் கல்யாண தேதி குறிக்கணும்!இதுக்கு மேலே தாமதம் பண்றது சரியில்லை."

"என்னங்க ஆச்சு?"

"அதை நானே எப்படி சொல்வேன்?"-அவர் மௌனம் காத்தார்.

அழுதழுது அவள் கண்கள் எல்லாம் சிவந்திருந்தன...

மனதின் குற்ற உணர்வு அவளை கலங்கடித்தது.

இனி எவ்வாறு அவரது முகத்தில் விழிப்பேன்??தான் வளர்த்தவள் பாதை மாறியதை எவ்வாறு அவர் ஏற்பார்??அவள் மனம் குழம்பிய சமயத்தில் அவளது கவனத்தை ஈர்த்தது அவள் கைப்பேசி.எடுத்து பார்த்தாள்.

"ஜோசப்!"-என்றிருந்தது.

அழைப்பை ஏற்க அறிவு மறுத்தது.ஆனால்,மனமோ அவனிடம் பேசவே துடித்தது.

"ஹலோ!"

"................"

"பேச மாட்டேன்னு தெரியும்!உன்னை உடனே நான் பார்க்கணும்!"

"என்னால வர முடியாது!"

"இதுதான் கடைசி.இதுக்கு மேலே திருட்டுத்தனமா பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது.கிளம்பி அதே இடத்துக்கு வா!"

"மாட்டேன்!"

"இல்லைன்னா,நான் வருவேன்.எப்படி வசதி?"

"ஏன் இப்படி பண்றீங்க?நான் வர மாட்டேன்னு சொல்றேன்ல!"

"கடைசியா ஒரே ஒரு முறை வா!"-தழுதழுத்த குரலில் அவன் கேட்க,அவளால் மறுக்க இயலவில்லை.

யாரும் அறியாதவண்ணம் அங்கிருந்து கிளம்பி,அவன் குறித்த இடத்தை அடைந்தாள்.

அவன் மரத்தில் சாய்ந்தப்படி நின்றிருந்தான்.

"என்ன வேணும் சீக்கிரம் சொல்லுங்க!"

"................."-அவன் பதில் பேசாமல் அவள் முகத்தையே உற்று பார்த்தான்.

"நாம பிரேக் அப் பண்ணிக்கலாம்!"-ஒரே வாக்கியத்தில் அவன் முடிக்க,அவள் இதயமே சுக்கலானது.

"................."

"எனக்கு நீ செட் ஆக மாட்ட!உன் பேமலியும் செட் ஆகாது!எல்லாத்தையும் கனவா நினைத்து மறந்துடு!"-நிர்பயாவிற்கு காயங்களை சந்திப்பது புதிதல்ல!ஆனால்,அவனது வாக்கியம் அவளை ஏனோ பலமிழக்கவே செய்தது.

"இப்படியெல்லாம் சொல்லி உன்னை வெறுப்பேற்ற தான் தோணுது.ஆனா வேணாம்!"-என்றவனை கேள்வியாக பார்த்தாள் நிர்பயா.

"என்ன செல்லம் திருட்டு முழி முழிக்கிற?"

"நீங்க என்ன சொல்ல வரீங்க?"

"நான் சொல்றதை விட,உன் தாத்தா சொன்னதை தெரிஞ்சிக்கிட்டா கான்ஸப்ட் புரியும்னு நினைக்கிறேன்!"-என்றவன் கதையை விலக்க ஆரம்பித்தான்.

"சார்!ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளுங்க ப்ளீஸ்..!"

"............."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.