(Reading time: 17 - 33 minutes)

'னக்கு இது பிடிக்கவில்லையே!!! என்ன செய்வது??? நான் மட்டும் ஏன் இப்படி இருக்கிறேன்??? வேலையை தூக்கி எரிந்து விடலாம்தான். அதன் பிறகு யாரென்னை மதிப்பார்கள்???' அவன் சொன்னதை போல் நிஜமாகவே நான் உபயோகம் இல்லாதவள்தானோ??? மனம் கலங்கி கொதித்து பொங்கி பொங்கி வழிந்தது. காற்றே இல்லாத ஒரு அறைக்குள் சிக்கிக்கொண்டதைப்போல் அழுந்தியது சுவாசம்.

அதற்கு மேல் அங்கிருக்க பிடிக்கவில்லை. கைப்பையை எடுத்துக்கொண்டு யாரிடமும் எதுவும் சொல்லாமல் அலுவலகத்தை விட்டு வெளியே வந்து தெருவில் இறங்கி நடந்தாள் அவள். வீட்டுக்கு செல்ல கூட தோன்றவில்லை. வானம் இருட்டிக்கொண்டு மழை தூர துவங்கி இருந்தது. மழையில் நனைந்தபடியே நடந்தாள் அபர்ணா.

'வெளிநாடு செல்லவில்லை என்றால் நான் யூஸ்லெஸ்ஸா???' அந்த வார்த்தை அழுத்தியது .திரும்ப திரும்ப  ' யூஸ்லெஸ் க்ரீசரஸ்'

கண்ணீர் வரக்கூடாது என்று எவ்வளவு தவிர்த்து பார்த்தும் முடியவில்லை. கண்களை தாண்டி  கண்ணீர் அவள் கன்னம் தொட்ட நொடியில் சரேலென அவள் அருகில் வந்து நின்றது அந்த கார். அவள் கொஞ்சம் திகைத்து விலக அதன் பின் பக்க கதவை திறந்துக்கொண்டு இறங்கினான் அவன்!!! பரத்!!!

'என்ன அபர்ணா. இப்படி மழையிலே நனைஞ்சுகிட்டு??? எங்கே போகணும்??? வா ட்ராப் பண்றேன்.' கொஞ்சம் வியந்து தான் போனாள் அவள். அவனை பார்த்ததும் விரல்கள் தன்னாலே கண்ணீரை துடைத்துக்கொண்டன.

'இப்போ இல்லை..... வாழ்கையிலே எப்பவுமே நான் உனக்கு என்ன செய்யறேனோ இல்லையோ.... உன் கண்ணிலே தண்ணி மட்டும் வர விட மாட்டேன் கண்ணம்மா..' அவன் முன்பு ஒரு முறை சொன்னது இப்போது ஞாபகம் வருவதை அவளால் தவிர்க்கவே முடியவில்லை.

'இவன் எப்படி இங்கே??? சென்னையில்???' அவள் கேள்வியாக அவனை பார்க்க

'மழை பெருசாகுது பார். வா அபர்ணா. நான் உன்னை டிராப் பண்றேன்.' அவன் மறுபடியும் சொல்ல, ஏனோ மறுக்க தோன்றவில்லை. ஏறிக்கொண்டாள் காருக்குள்ளே.

டிரைவர் காரை நகர்த்த மெல்லக்கேட்டான் பரத் 'எங்கே போகணும் அபர்ணா???'

'ஆங்... ம்??? தெரியலை...' குழப்பம் கலந்த குரலில் சொன்னாள் அவள்.

ஏன்டா??? மெல்ல இறங்கியது அவன் குரல் 'மனசிலே என்ன குழப்பம்???

பதில் சொல்லாமல் இடம் வலமாக தலை அசைத்தாள் அவள்.

'சரி விடு. நான் இப்போ சாங் ரெக்கார்டிங் போறேன். அதுக்குதான் சென்னை வந்தேன். நீயும் என்னோட ஸ்டூடியோ வரியா.???

'ம்???' சாங் ரெக்கார்டிங்கா???

'எஸ். நீ இதுவரைக்கும் பார்த்திருக்க மாட்டே. வாயேன். மனசு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும்.' இயல்பாக சொன்னான் பரத்.

காலையில் அருண் அப்படி நடந்துக்கொண்ட நொடியில் இருந்து, அதன் பிறகு நடந்தவை எல்லாமாக சேர்ந்து  மனம் முழுவதும் அழுத்தம் பரவிக்கிடக்கிறது. கண்டிப்பாக ஒரு மாற்றம் தேவைப்பட்டது அவளுக்கு.

'சரி..' தலையசைத்தாள் அவள்.

ன்னமும் லேசாக தூறிக்கொண்டிருந்த மழையுடன் விளையாடிக்கொண்டிருக்கும் மரங்களுக்கு இடையில் அழகாக அமைந்திருந்தது அந்த ரெக்கார்டிங் ஸ்டுடியோ. உள்ளே நுழைந்த நிமிடத்திலேயே மனம் லேசாகி போயிருந்தது. அவர்களை புன்னகையுடன் வரவேற்றாள் அந்த இளம் பெண்.

'ஷீ இஸ் ஸ்ரீஜா. தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளர்..' பரத் அவளை அறிமுக படுத்த

'ஆமாம், முன்னணி... இப்படி உசுப்பேத்தி உசுபேத்தியே உடம்பை புண்ணாக்குங்கடா...' அவள் சிரிப்புடன் சொல்ல.. இருவரும் நல்ல நண்பர்களாக இருக்க வேண்டும் என்று புரிந்தது அபர்ணாவுக்கு.

'நான் உண்மையை தானே சொல்றேன் ஸ்ரீ ... நான் அவர்ட் வாங்கினது உன் பாட்டுக்கு தானே..' என்றான் பரத்.

'ஆங்... போதும்... போதும்... நீ என்ன சொன்னாலும், என்ன ஐஸ் வெச்சாலும்  இன்னைக்கு ரெண்டு பாட்டு முடிக்காம உன்னை விட மாட்டேன்..' என்று சிரித்தவள் அபர்ணாவின் பக்கம் பார்த்தாள் 'மேடம் யாரு???'

'ம்??? என்னோட தி பெஸ்ட் ஃப்ரெண்ட்... ரொம்ப வருஷமா...' என்றான் அபர்ணாவின் முகம் பார்த்துக்கொண்டே

உன்னோட தி பெஸ்ட் ஃப்ரெண்ட் பாடுவாங்களா??? கேட்டாள் அந்த இசை அமைப்பாளர்.

'அபர்ணாவா???' அவன் அவள் பக்கம் யோசனையுடன் திரும்ப

'இன்னைக்கு வர வேண்டிய ஃபீமேல் சிங்கர் வரலை. ஒரு மாசம் அவங்களாலே பாட முடியாதாம். ஏதோ சர்ஜரியாம். இப்போ ஒரு பெண் குரல் தேவை. என்ன செய்யலாம்???' அவளும் அபர்ணாவை பார்க்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.