(Reading time: 17 - 33 minutes)

'நானா நான் எப்படி???. அவள் அவசரமாக சொல்ல

ஏன் உங்க குரல் ஸ்வீட்டாதானே இருக்கு??? ஸ்ரீஜா கேட்க...

'எனக்கு பாட எல்லாம் வராது' என்றாள் அபர்ணா.

'அதெல்லாம் வரும்.. ' அபர்ணாவிடம் சொல்லிவிட்டு....

கொஞ்சம். டைம் கொடு ஸ்ரீ... நான் இவளை பாட வைக்கிறேன்...' தீர்மானமாக சொன்னான் பரத். கட்டை விரலை உயர்த்தி காட்டி புன்னகைத்து விட்டு ஸ்ரீஜா நகர..

'நான் எப்படி பரத்???' அபர்ணாவிடம் பதற்றம் தொற்றிக்கொண்டது. 'சினிமாவிலே வருமா இந்த பாட்டு... இதெல்லாம் வேண்டாம் பரத், ப்ளீஸ்... பயமா இருக்கு... நான் சும்மா பார்க்க தான் வந்தேன்... நான் கிளம்பறேன் ப்ளீஸ்... படபடவென அபர்ணா நிறுத்தாமல் பேசிக்கொண்டே போக

.'கண்...ண...ம்...மா..' அவனையும் அறியாமல் கொஞ்சம் அழுத்தமான குரலில் வெளிவந்தது அந்த வார்த்தை. கொஞ்சம் திடுக்கிட்டவளாக மௌனமானாள் அபர்ணா. சில நொடி மௌனம் இருவரிடத்திலும்

'சாரி..' அபர்ணா என்றான் சில நொடிகள் கழித்து. 'இனிமே கண்ணம்மா சொல்லலை' .ஒரு பெருமூச்சுடன் தலை குனிந்துக்கொண்டாள் அவள்.

'ஒரு நிமிஷம் ..அபர்ணா... என்னை பாரேன்...' அவள் மெல்ல நிமிர்ந்து அவன் கண்களை பார்க்க 

'நான் உனக்கு ஏதாவது தப்பா செய்வேனா??? இந்த மாதிரி வாய்ப்பு எப்பவாவதுதான் நம்ம கிட்டே வரும். அப்போ உபயோக படுத்திக்கணும். பாட்டுதானே அதுக்கு ஏன் இவ்வளவு  யோசிக்கறே???' சும்மா ட்ரை பண்ணு.. அதான் நான் இருக்கேன் இல்ல....' மிக இதமாக பரத் சொல்ல.. அதை மறுக்க தோன்றாமல் அவள் மெல்ல தலை அசைக்க

அப்போது ஒலித்தது அவள் கைப்பேசி. அலுவலகத்திலிருந்து அழைப்பு. ' யூஸ்லெஸ் க்ரீசரஸ்'' அந்த வார்த்தை மறுபடி அவள் காதில் ஒலிப்பது போல் இருக்க சுள்ளென்று பொங்கியது அவளுக்கு. போனை துண்டித்து அணைத்து விட்டிருந்தாள் அவள்.

எங்கிருந்தோ ஒரு வேகம் '.நான் பாடறேன் பரத்...' இப்போது பளிச்சென முழு மனத்துடன் வெளிவந்தது பதில். மலர்ந்து போனது பரத்தின் முகம்.

'கிட்டத்தட்ட இரண்டு மணிநேரங்கள் கடந்திருக்க, ஒவ்வொன்றையும் பொறுமையாக பரத் கற்றுக்கொடுத்திருக்க  காதில் ஹெட்ஃபோனுடன் மைக்கின் முன்னால் அவனுடன் நின்றாள் அபர்ணா.

உன் தோள் சாய்ந்து கண்மூடும்  வரம் மட்டும் வேண்டும் ....

உன் தோட்டத்து மழையாகும் சுகம் மட்டும் போதும்...

அவன் குரல் உருகி கரைய, அதனோடு சேர்ந்து கரைந்தவளாக அவளும் பாடி முடித்திருந்தாள் இரண்டு பாடல்களை!!! படத்தின் இயக்குனருக்கும் அந்த பாடல்கள் மிக திருப்தியாக அமைந்துவிட்டிருந்தது. அங்கிருந்த எல்லாரிடமிருந்தும் அவளுக்கு பாராட்டுக்கள். 

அங்கே அவளை விட அதிகமாக மகிழ்ந்தவன் பரத்தாகதான் இருந்தான். அவள் பாடியதற்கான செக் அவள் கையில் வந்து சேர்ந்திருந்தது. இத்தனை நாட்கள் வாங்கிய சம்பளத்தில் கிடைத்த மகிழ்ச்சியை விட இன்று மனதிற்குள்ளே மிகப்பெரிய நிறைவு வந்திருந்தது அவளுக்கு. புதிதாக ஒரு தன்னம்பிக்கையும் கூடி இருந்தது,

எல்லாம் முடித்துவிட்டு காரில் வீடு நோக்கி இருவரும் சென்றுக்கொண்டிருக்க அவன் அவள் அருகில் அமர்ந்திருக்க

'நான் நல்லா பாடினேனா பரத்...' மெதுவாக கேட்டாள் அவள்.

'ரொம்ப ரொம்ப நல்லா பாடினே ... பாட்டு எப்படி ஹிட் ஆகுதுன்னு  பாரு... அப்போ தெரியும் உனக்கு....' சொல்லும்போதே அவன் விழிகள் சந்தோஷத்தில் பளபளத்தன.

அப்போ நான் 'யூஸ்லெஸ்..' இல்லை... அப்படித்தானே பரத்??? இதை அவனிடம் கேட்க வேண்டும் என்று ஏனோ தோன்றியது அவளுக்கு.

'யூஸ்லெஸ்ஸா எவன் சொன்னான் அப்படி??? பளார்னு அறைய வேண்டியது தானே அவனை. பரத் பாய...

'அறையறேன். அறைய வேண்டியவங்களை அறைய வேண்டிய விதத்திலே அறையறேன்..' என்றாள் உறுதியாக.

கார் அபர்ணா வீட்டு வாசலை தொட்டிருக்க, அவளது அம்மா வாசலிலேயே நின்றிருக்க அன்று நடந்ததற்கும் இன்று நடப்பதற்கும் சாட்சியான மழை இன்னமும் சிறு சிறு தூறல்களாக விழுந்துக்கொண்டிருக்க, கார் கதவை திறந்துக்கொண்டு இறங்கினான் பரத்.

சுவாசிக்க மறந்து போனார் அவள் அம்மா. நடையில் கூடி இருந்த கம்பீரத்துடன் அவர் முன்னால் வந்து நின்று மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு புன்னகைத்தான் பரத்.

இப்போ உங்க பொண்ணை எனக்கு கொடுப்பீங்களா??? அவன் கேட்பது போலே தோன்றியது அம்மாவுக்கு.

Episode # 09

Episode # 11

தொடரும்......

{kunena_discuss:982}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.