(Reading time: 9 - 17 minutes)

சில மணி நேரத்தில்,

ஜெய்யை சூழ்ந்து கொண்டு படம்பிடித்தன பல கேமராக்கள்…

அத்தனையையும் லாவகமாக அவன் விலக்கிவிட்டு செல்ல, இஷானிடம் வந்தனர் அவர்கள்….

“போதை மருந்து தயாரித்து விற்பனை செய்து வந்த வழக்கில் திவாகர் என்பவர் இன்று போலீசால் சுடப்பட்டார்….”

ஊட்டியின் ஒரு சில பகுதியை தன் கைக்குள் வைத்து ஆட்டம் காட்டிக்கொண்டிருந்த திவாகர் அடிதடி மட்டுமல்லாது போதை மருந்து தயாரிக்கும் தொழிலையும் செய்துவந்துள்ளார்… இது அறிந்த சிறப்பு காவல் துறை அதிகாரி ஜெய் மற்றும் இஷான், இன்று திவாகரையும் அவன் ஆட்களையும் சுற்றி வளைத்து பிடித்தனர்… அப்போது ஜெய்யை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்ற திவாகரை சுட வேண்டிய கட்டாயம் நேர்ந்ததாக கூறினார் காவல்துறை அதிகாரி இஷான்….”

தொலைக்காட்சியில் நியூஸ் வாசித்துக்கொண்டிருந்த ஒருவர் இதனை கூறிவிட்டு, சம்பவ இடத்தில் இருந்த இன்னொரு தொலைக்காட்சி நிரூபரை தொடர்பு கொள்ள,

“சொல்லுங்க சார்…. எப்படி திவாகர் தான் குற்றவாளின்னு கண்டுபிடிச்சீங்க?...”

மைக்கை ஜெய்யின் முன் நீட்டி கேட்டார் அவர்….

“அவன் செய்த தவறுகள் அவனை அடையாளம் காட்டிடுச்சு…” என்றான் அவன்…

“இதுல இன்னும் வேற யாரும் சம்பந்த பட்டிருப்பாங்கன்னு நினைக்குறீங்களா?...”

இப்போது இஷானை நோக்கி கேள்விவர,

“அது சம்பந்தமா விசாரணை போயிட்டிருக்கு….” என்றான் இஷான்..…

அடுத்து அவர்கள் கேள்விகள் எதும் கேட்கும் முன்னே, இருவரும் அந்த இடத்தை விட்டு சற்று நகர்ந்து செல்ல,

மைக்கைப்பிடித்திருந்த ஆள் தொலைக்காட்சிக்கு தகவல் கொடுத்தார், “இப்போ காவல்துறை அதிகாரிகளால் சுடப்பட்ட திவாகர் வெறும் ரவுடி மட்டுமல்ல… சென்னையில் ஒரு சில கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் அதிலும் முக்கியமாக மாணவியர்களுக்கு போதை மருந்து விற்பனை செய்து வந்த அந்த மர்ம நபர் திவாகர் என்பது மேலும் குறிப்பிடத்தக்கது… சமீபகாலமாக மர்மமாக இருந்து வந்த கல்லூரி கேஸ் விஷயம் இன்று திவாகரை சுட்டுக்கொன்றதின் மூலம் முடிவுக்கு வந்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன…. மேலும் இதில் பாதிக்கப்பட்ட மாணவியர்களும், அவர்கள் படிக்கும் கல்லூரிகளும் தொடர்ந்து மர்மமாகவே உள்ளன… அதைப்பற்றிய எந்த நிலவரமும் இதுவரை யாருக்கும் தெரிந்திடவில்லை… அதைப்பற்றி காவல்துறை அதிகாரிகளும் தெரிவிக்க மறுக்கின்றனர்… அனைத்து கல்லூரிகளுக்குமே போலீசார் மறைமுகமாகவும், நேரடியாகவும் சென்று விசாரித்து வந்துள்ளதால், இதில் சம்பந்தப்பட்ட கல்லூரிகள் எது எது என்பது இன்னமும் புதிராகவே இருக்கிறது…”

எம் டீவி செய்திகளுக்காக சந்திரன்….

பேச்சை முடிப்பது போல் மைக்கைப் பிடித்துக்கொண்டு பேசிய தொலைக்காட்சி நிரூபர் தமது தகவலை கூற,

அதை ஊடகமும் மக்களுக்கு படம்பிடித்து காண்பிக்க, அதைப் பார்த்துக்கொண்டிருந்தனர் அனைவரும்…

வெற்றிகரமாக கேஸை முடித்த ஜெய்யையும் இஷானையும் வெகுவாக பாராட்டினார் சோமநாதன்…

அவர் மட்டுமல்லாது வீட்டில் இருப்பவர்களும் இருவரையும் பாராட்ட,

“இதோ வந்திடுறேன்…” என்றபடி நகன்றான் ஜெய்…

ஜெய்யைப் பின் தொடர்ந்து வந்த இஷான்,

“மச்சான் என்னாச்சு?... என்ன யோசனை?....”

எனக் கேட்க, ஜெய் அமைதியாக இருந்தான்…

“டேய்… நான் உங்கிட்ட தான் கேட்குறேன்… பதில் சொல்லு…”

“ஒன்னுமில்லடா சென்னைக்கு இன்னைக்கு கிளம்பலாமான்னு யோசிச்சிட்டிருக்கேன்…”

“ஆமாடா வந்த கேஸ் தான் முடிஞ்சிட்டே….”

இஷான் சற்றே ஆசுவாசமாக சொல்ல,

“இல்லை…” என்றான் ஜெய் தனக்குள்….

அதே நேரம், “ஜெய்…………….” என்ற கூவலோடு நெருப்பை கக்கியது இருவிழிகள் கோரமாக….

Episode 25

Episode 27

{kunena_discuss:1001}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.