(Reading time: 27 - 54 minutes)

னக்கு ஊர் அறிய கல்யாணம் முடிவது ஐஸ்வர்யாவுடன் தான். ஆனால் ஊருக்கு தெரியாமல் எனக்கு அடுத்தமாதம் கவிழையாவுடன் கல்யாணம் முடியப்போகிறது. அதனால் எனக்கு முதல் மனைவி கவிழையா தான் என்றான்.

அவன் கூறியதை கேட்ட கதிர் இதற்க்கு கவிழையா ஒத்துக்கொள்ள வேண்டுமே! எனக்கு என்னவோ இதற்க்கு கவி ஒத்துக்கொள்வாள் என்று தோன்றவில்லை என்றான்,

நேற்று நான் கவிழையா வீட்டுக்கு அருகில் உள்ள பூங்காவின் வாயிலில் உன் கார் நிற்பதைப்பார்த்து அங்கு போனால் நம் ஆட்கள் கவிழையாவை பூங்காவிற்கு உன் காரில் கூட்டிவந்த விபரத்தை என்னிடம் கூறினார்கள்.. அவர்கள் என்னிடம் கூறிக்கொண்டு இருக்கையில் கவிழையாவின் அப்பா பூங்கா வந்தார்.

அவர் வருவதைப்பார்த்து நான், எதற்கு வந்துள்ளார் என்று கண்டறிய உள்ளே சென்றேன் அவர்கள் ஓர் மரத்தின் அடியில் உட்கார்ந்து இருந்தார்கள் நான் அந்த மரத்தின் பின்புறம் சென்று நின்று அவர்கள் பேசியதைக்கேட்டேன் என்று அவர்கள் பேசியதை கூறினான்.

உன்னிடம் ஐம்பதுலட்சம் பணத்தை ஒரு மாதத்தில் புரட்டி கொடுத்து கவிழையாவை வேலையில் இருந்து நிறுத்த போகிறார் என்றான்.

அவன் கூறியதை கேட்ட மஹிந்தன் சத்தமாக சிரித்து என் பேபியை என்னிடம் இருந்து பிரிக்க வெறும் ஐம்பது லட்சம் கொடுக்க பார்கிறார் என் மாமனார்.

“ழையா இஸ் மை லைப்” அவள் என்னுடைய புதையல் யாருக்காகவும் எதர்க்காகவும் அவளை மிஸ் பண்ண மாட்டேன்.என்று ஆழ்ந்த குரலில் கூறினான் மஹிந்தன்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தமிழ் தென்றலின் "என் சிப்பிக்குள் நீ முத்து..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

டந்த ஒரு வாரமாக கவிழையாவிற்கு அலுவலகத்தில் புது ப்ராஜெக்ட் காரணமாக வேலை தொடர்ந்து இருந்தது

மஹிந்தன் வேறு ஒரு அலுவலில் பிசியாக இருந்ததால், புது ப்ராஜெக்ட்டின் முழு பொறுப்பும் கவிழையாவின் பொறுப்பில் விடப்பட்டிருந்தது. அவன் மதியம் முக்கால் மணி நேரம் மட்டும் அங்குவந்து அன்றைய பணிகளை அறிந்து செல்வான்.

அவ்வாறு அவன் வரும் நேரத்தில் கவிழையாவிற்கு முள்ளின் மேல் இருப்பது போல் இருக்கும்.

அவன் வரும் போது உமாவின் வணக்கத்திற்கு பதிலாக தலையை அசைப்பவனின் வாய் “ழையா கம் வித் மீ “ என்று கூறிக்கொண்டு நேராக அவனின் ரூம்மிர்க்கு தான் செல்வான் .

முதல் நாள் அவன் அவ்வாறு கூப்பிட்டு செல்லும் போது அங்கு போக தயங்கி நின்றவளை திரும்பிப்பார்த்து ஏன் அங்கேயே நிற்கிறாய் என்று கேட்டான்.

அதற்கு கவி கூறினாள் பாஸ் உங்களுடைய பெர்சனல் ரூமிர்க்கு வர எனக்கு இஷ்டம் இல்லை. என்னுடைய ஆபீஸ் வேலையை இங்கேயே செய்து கொடுக்க முடியும் என்றாள்.

அதற்கு மஹிந்தன் நீ இவ்வாறு என் சொல்பேச்சு கேட்காமல் என்னை கோபப்படுத்தினால் நான் உனக்கு கொடுத்திருக்கும் ஒரு மாத நேரத்தை வாபஸ் வாங்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

என்றவன் சிறிது யோசிப்பது போல் பாவனைசெய்து “உன் அப்பா உங்கள் வீட்டை விலை பேச ப்ரோக்கரை இன்று காலை சந்தித்து பேசியிருந்தார்.” என்று கூறியவன் கவிழையாவின் அருகில் வந்தவன் “நான் நினைத்தால் உன் வீட்டை விற்க முடியாமல் செய்ய முடியும்” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் படி கூறினான்.

அவளுக்கு அப்பா வீட்டை விலை பேசியது என்று அவன் கூறியது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது மேலும் அவள் அது பற்றி பேச நினைக்கையில் அவன் திரும்பவும் ‘ம்’ வா என்று கூறி அறையை நோக்கிச் சென்றான் .

கவிழையாவிற்கு ஏனோ அவள் அப்பாவையும் வீட்டையும் பற்றி அவன் பேசியதும் பயம் அடிவயிற்றில் இருந்து கிளம்பியது.. அவளுக்கு எந்த பாதிப்பு என்றாலும் எதிர்த்து நிற்கும் தைரியம் இருந்தது .

அனால் அவள் குடும்பத்துக்கும், வீட்டிற்க்கும் ஏதாவது பாதிப்பு என்றால்! அதை அவளால் அதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை .

எனவே அதிர்சசியை கண்களில் பிரதிபலித்தபடி அவன் பின்னால் சென்றாள். உள்ளே சென்றதும் கவிழையாவிடம் மஹிந்தன் கூறினான் ஏற்கனவே நான் சொன்னதுபோல் என்னை எதிர்த்து நிற்பது பேசுவதும் உனக்கு நல்லதல்ல.

உன் அப்பாவை எனக்கு பணம் கொடுக்கும் நினைப்பிலிருந்து மாறச் சொல் ழையா. நீ என்னைவிட்டு விலகிச்செல்ல நான் அனுமதிக்க மாட்டேன் என்றான்.

அவன் கூறியதைகேட்ட் கவிழையா, நீ நினைப்பது கனவில் கூட நடக்காது அப்படி என்னை நீ நிர்பந்தத்தில் நிறுத்தினால், என் உயிரை விடுவேன் தவிர உன்னுடைய எண்ணம் பலிக்காது என்றாள் .

அதற்கு மஹிந்தன் கண்களில் சீற்றத்துடன், சிட் என்று கூறி மேஜையில் தன் கைகளால் பலமாக ஒரு குத்துகுத்தினான் பின் நீ ஏன் என்னை புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாய்? .நான் இதுவரை யாரிடமும் இது போல் பொறுமையாக பேசியது கிடயாது .

என்றவன் அவளுடைய கண்களைப் பார்த்தான் அதில் பயம், கோபம், இரண்டையும் மாறிமாறி பிரதிபளிப்பதைப் பர்த்தவன் அக்கண்கள் தன்னை காதலுடனும் ஆசையுடனும் பார்க்க ஏக்கம் கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.