(Reading time: 27 - 54 minutes)

ன்னை சிறிது நிதானப்படுத்திக்கொண்டு ஓ கே பேபி நீயா? நானா? பார்த்துவிடலாம் என்றவன் “லெட்ஸ் கோ டூ அவர் வொர்க்” என்றவன் அன்றைய வேலைபற்றி கேட்டு அறிந்துகொண்டான். .மறுநாள் என்னென்ன வேலைகளை முடிக்க வேண்டும் என்று கூறி அவர்களின் வேலைபற்றிய விசயத்தில் இருவரும் கவனம் செலுத்தினர்.

இன்றும் அதே போல் கவிழையுடன் அவன் ரூமிர்க்குள் வந்தவன், ழையா! “ஒன் கப் காபி” என்று கூறியவன் அவள் காபி தயாரித்துக்கொண்டு இருக்கும்போது கபோடில் இருந்த உடையை எடுத்தான்.

அவனிடம் காபியை கொடுக்க வந்தவளிடம் நீ போய் அந்த ரெஸ்ட்ரூம்மில் இந்த உடையை மாற்றிக்கொண்டு என்னுடன் கிளம்பு என்று கூறினான் .அவள் அசையாது நிற்பதை பொருட்படுத்தாமல் அவள் முன்னேயே அவன் உடுத்தியிருந்த பார்மல் உடையை களைந்துவிட்டு வேறு உடைக்கு மாறினான் .

அவனின் செயலில் “செய்” என்ற வார்த்தையை உதிர்த்து திரும்பி நின்றவளிடம் மஹிந்தன் சிரித்துக்கொண்டு, “ உன் டார்லிங்கின் சிக்ஸ்பேக் பாடியை பார்க்க வெட்கமா பேபி!”. என் கனவுப் படி பார்த்தால் நமக்கு உன்னைப்போல் ஒரு பெண் குழந்தயுள்ளது என்றான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அன்னா ஸ்வீட்டியின் "அதில் நாயகன் பேர் எழுது..." - காதல் கலந்த சரித்திர + குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

அவன் கூறுவதைக் கேட்க்க பிடிக்காமல் தன் காதுகளை மூடியவள், காதில் உன் அப்பா நமக்காக காத்துக்கொண்டு இருக்கிறார் வேகமாக கிளம்பு என்றவன்.

அவள் நம்பாது பார்ப்பதைப் பார்த்தவன் தன் ஐ போனில் அவளின் தந்தைக்கு டையல் செய்து பேசியவன் மிஸ்டர் ஈஸவரன் உங்கள் டாட்டரை என்னுடன் கிளம்பி வரச் சொல்லுங்கள் என்றான்.

அதனை வாங்கி தன் காதிற்கு வைத்தாள் அதில் ஈஸ்வரனின் குரல் வந்தது . கவி நீ கிளம்பி வா! என்று கூறி தொடர்பை துண்டித்துவிட்டார் .

தன் அப்பா, வா! என்று கூப்பிட்டதும் பாஸ் வாருங்கள் போகலாம் என்று கவிழையா அவசரப்படுத்தினாள். அவள் கூப்பிட்டதும் மஹிந்தனுக்கு அன்று ழையா அவனுடைய ரெஸ்ட்ரூமை பயன்படுத்த மறுத்தது நினைவு வந்தது மனதிற்குள் சிரித்துக்கொண்டே அவன் இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்து ரிலாக்ஸ் பன்னுவதைபோல் பாவனைசெய்தான் .

கவிழையாவாள் பொறுமைகாக்க முடியாமல் பாஸ் அப்பா காத்திருப்பார் என்று மறுபடியும் அவனை பார்த்து கூறினாள்.

அவள் அவ்வாறு கூறவும் மஹிந்தன் நான் உன்னை கூட்டிச் செல்ல வேண்டும் என்றாள் நீ என் ரெஸ்ட் ரூமைப் பயன்படுத்தி இந்த உடையை மாற்றிக்கொண்டு வரவேண்டும் என்று கூறினான்.

அவன் அவ்வாறு கூறவும் திரும்பவும் அவள் தயங்கி கொண்டு நிற்பதைப் பார்த்தவன் திரும்ப ஈஸ்வரனுக்க்கு போன் செய்தான். மிஸ்டர் ஈஸவரன் உங்கள் மகள் என்னுடன் வர யோசிக்கிரார்கள் என்ன செய்ய? நம் டீலிங்கை கேன்சல் பண்ணிவிடலாமா? என்று கேட்டான்.பின்பு போனில் ஸ்பீக்கரை ஆண் செய்தான் .

ஈஸவரன் என் மகளிடம் நான் சொல்கிறேன் என்றவர் கவி உடனே கிளம்பி வா, இங்கு நான் மிகவும் நெருக்கடியான சூழலில் உள்ளேன் என்று கூறினார் .

அவர் அவ்வாறு கூறவும் அப்பா உங்களுக்கு எதுவும் பிரச்சனையா என்று கேட்டாள். அதற்கு “நீ முதலில் கிளம்பிவா” என்றார். உடனே சரிப்பா நான் இதோ கிளம்பி வருகிறேன் என்று கூறி தொடர்பை துண்டித்தாள்.

மஹிந்தனைப் பார்த்தாள், அவன் கிளம்பும் எண்ணம் இல்லாமல் ரிலாக்ஸ்ஆக உட்கார்ந்துகொண்டு இருந்தான் .

வேறு வழியில்லாமல் கவிழையா அவன் எடுத்துவைத்திருந்த கவரை எடுத்துக்கொண்டு ரெஸ்ட்ரூம் சென்றாள்.

புடவையுடுத்தி வெளியில் வந்த கவிழையாவை இமைக்க மறந்து பார்த்தான் மஹிந்தன். அந்த மெரூன் கலர் டிசைனர் புடவையில் முகத்துக்கு சற்றும் மேக்கப் இல்லாமல் இவவளவு அழகாக இருக்கமுடியுமா என்று அவன் மெய் மறந்து பார்த்தான் .வெளியில் வந்த கவிழையா போகலாமா என்று கேட்டாள்

அவள் அருகில் சென்றவன் போகலாம் பேபி அதற்கு முன் என்று அவள் கைபிடித்து கூட்டிவந்து ட்ரெஸ்ஸிங் டேபிளில் அவளை அமரவைத்தான் .

அவன் கைப்பற்றியதும் சட்டென உதரபோனவளின் கையை இருக்கிபிடித்த மஹிந்தன் உன் அப்பாவிடம் வேகமாக போகணும் என்றாள் நான் சொல்வதையும் செய்வதையும் அமைதியாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று குலைந்த குரலின் கூறியபடி அவளை உட்காரவைத்தவன் அவள் கழுத்தில் அந்த புடவைக்கு பொருத்தமான கழுத்தாரமும் , ஓர் டாலருடன் கூடிய மெல்லிய சங்கிலியும், காதில் ஜிமிக்கியையும் அவனே போட்டுவிட்டான்.

அவனின் இச்செயலை தடுக்க முடியாமல் அவள் அப்பாவின் நிலையால் அவள் கண்களில் கோபத்தின் காரணமாகவும் இயலாமையின் காரணமாகவும் கண்ணீர் அருவி போல வழிந்தது .

அவள் கண்ணில் கண்ணீரை பார்த்ததும் மஹிந்தனுக்கு கோபம் வந்தது உடனே தன் கையை அகற்றிவிட்டு அவளிடம் கண்ணீரை துடைக்கச்சொல்லி அவளுடன் அவ்வறையை விட்டு வெளியில் செல்ல முயன்றான்.

அதற்கு கவிழையா பாஸ் ஒரு நிமிடம் என்றவளை நிமிரிர்ந்து பார்த்தவன், என்ன? என்று கேட்டான்.அதற்கு கவிழையா இந்த ரூமின் பின் வாயில் வழியாக வெளியில் செல்லலாமா என்று தயக்கமுடன் கூறியனாள்.

அதற்கு ஏன்? என்று கேட்டவனிடம் நாம் இருவரும் இப்படி காஸ்டுயூமில் வெளியில் சென்றால் எல்லோரும் என்னை தவறாக நினைப்பார்கள் என்று கண்ணீர் தளும்ப கூறினாள்

அவ்வாறு அவள் கூறியதும் இந்த நிமிடம் முதல் உன்னை தப்பான பார்வை பார்க்கக்கூட எவனுக்கும் தைரியம் வராது. இப்படி நாம் போவதால் நீ என்னுடையவள் என்று உன்னை மரியாதையாகதான் பார்ப்பார்கள் என்று கூறி, அவள் கைபிடித்து தரதர என்று இழுத்துக்கொண்டு அவ்வறையை விட்டு வெளியில் வந்தவன் அவள் கையை விடாமல் பிடித்தவன்னம் தன் காருக்குள் போய் ஏறிக்கொண்டான்.

தொடரும்

Episode # 05

Episode # 07

{kunena_discuss:1081}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.