(Reading time: 9 - 17 minutes)

தி… அவனுக்காக நீ என்னையே எடுத்தெறிஞ்சு பேசுறீயா?.... உனக்கு என்னைவிட அவன் முக்கியமா போயிட்டானா?...”

அவரின் குரலில் உரிமைப்போராட்டமும், கலக்கமும் தெரிய, அவள் துடித்தாள்…

அவரின் கரங்களைப் பிடித்துக்கொண்டவள்,

“அப்பா… நீங்க எனக்கு எவ்வளவு முக்கியமோ, அதே மாதிரி அவரும் எனக்கு முக்கியம்ப்பா… உங்ககிட்ட நான் பாசத்தைப் பார்த்திருக்குறேன்… ஆனா அவர்கிட்ட காதலோட சேர்த்து, நான் உங்களையும் பார்த்திருக்குறேன்ப்பா… நீங்க என் மேல வச்சிருக்குற கட்டுக்கடங்காத பாசமும், அக்கறையும், எனக்கெதுவும்னா துடிக்கிற துடிப்பும், தவிப்பும் எல்லாமே அவர்கிட்ட நான் பார்க்க முடியுதுப்பா… இதுக்கு மேல ஒரு பொண்ணுக்கு வேற என்ன வேணும்ப்பா…. எங்களை சேர்த்து வச்சிடுங்கப்பா….”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "நிர்பயா" - சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கும் பெண்ணின் கதை...

படிக்க தவறாதீர்கள்..

சதியின் வார்த்தை அவர் உள்ளம் சென்று சேர, அவர் அவராய் இல்லை..

“நீ எங்கூட இப்போ வரப்போறீயா இல்லையா?...”

அவர் குரலை உயர்த்தி கேட்க, அவள் அதிர்ந்து விழித்தாள்…

“சதி… நான் உன் அப்பா… அந்த அநாதைக்காக என்னை நீ தூக்கிப்போட போறீயா?...”

அவர் சொல்லி முடித்ததும்,

“அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா………………………………”

உரக்க கத்தினாள் சதி…

“இன்னொரு தடவை அவரை அப்படி சொல்லாதீங்க… அவர் என்னோட பதி… அவரோட சரிபாதி நான் இன்னும் உயிரோட தான் இருக்குறேன்…”

கோபமும், ஆத்திரமுமாக அவள் அவனை தன் கணவன் என்று சொன்னதை பொறுக்க மாட்டாது, அவர் தன்னிலையை இழக்க,

“என்ன ஒரு வார்த்தை சொன்ன சதி?...............”

சொல்லிக்கொண்டே போனவர் எப்போது கைகளை ஓங்கினார் என்றே தெரியாது…

மகளின் மீது தன் கரம் விழப்போகும் நொடியிலேயே அவர் அதனை உணர,

“சதி………………….” என துடித்துப்போனார் தட்சேஷ்வர்…

அதற்குள் அவரது கரம் அவளது முகத்தினை நெருங்கிவிட, கண்களை இறுக மூடிக்கொண்டாள் சதி…

சில நொடிகள் கழித்து அவள் விழி திறக்கையில் தட்சேஷ்வரின் கரம் ஜெய்யின் கரங்களுக்குள் இருந்தது பத்திரமாய், அவள் மீது கொஞ்சமும் படாதவாறு…

மிரண்டு போனவராய் ஜெய்யினைப் பார்த்திருந்தார் தட்சேஷ்வர்… விழி எங்கும் நிறைந்து வழிந்து கொண்டிருந்த ஆத்திரத்துடன்…

Episode 30

Episode 32

{kunena_discuss:1001}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.