(Reading time: 12 - 24 minutes)

வனது முகத்தில் ஒரு மந்தக்காசப் புன்னகை!!

என்றோ ஒருமுறை தான் அவளை பார்த்திருக்கிறான்!அதுவும்,சிறு வயதில்!!அவள் மிகவும் துணிச்சலானவள்!!தவறென்றால்,அது எவராயினும் கண்டிக்க தவறுவது அவள் இயல்பல்ல!!மனம் முழுதும் ஒரு வித மின்சாரம் பாய்ந்தது அவனுக்கு!!ஏன் அவள் எனைக் காண தயங்குகிறாள்??நானாக எவ்வாறு அவளை சென்று சந்திக்க இயலும்??அது உசிதமல்லவே!!எப்போது தான் தேவியின் தரிசனம் எனக்கு கிட்டும்??அவன் இதுபோன்ற சஞ்சலங்களை துறந்தவன்!ஆனால்,இன்றோ,தவக்கோலத்தை சிதைத்து,மையலில் விழுந்தான் என்றே தோன்றுகிறது!!!

"சிவா?"-பின்னாலிருந்து யாரோ குரல் கொடுக்க,புகைப்படத்தை டிராவிலிட்டு மூடினான்.

"ஆ..அங்கிள் நீங்களா?வாங்க!"

"என்னப்பா?இடமெல்லாம் வசதியா இருக்கா?"-என்றப்படி வந்தான் ராகுல்.

"ஆ...அதெல்லாம் எந்தக் குறையும் இல்லை!நீங்க உட்காருங்க!"-இருவரும் சோபாவில் அமர்ந்தனர்.

"கார்த்தி ஏன் வரலை?"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "மூங்கில் குழலானதே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

"அப்பாக்கு டிக்கெட் கேன்சல் ஆயிடுச்சு அங்கிள்!அதான்,அம்மாவும்,அப்பாவும் அப்பறம் வரேன்னு சொல்லிட்டாங்க!"

"சரிப்பா!நான் கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காதே!நீ ஏன் கீதாவை இன்னும் பார்க்கலை?"

"அது...!கீதாவை பார்க்கணும்னு ஆசை தான்!இருந்தாலும்,சட்டென அவ முன்னாடி போய் நிற்க எனக்கு விருப்பமில்லை!ஒருவேளை,அவ கல்யாணத்தைப் பற்றி எந்தக் கனவும் இல்லாம இருக்கலாம்!திடீர்னு நான் தான் உன்னை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு அவ முன்னாடி போய் நின்னா,முதல் சந்திப்பிலே என் மேலே அவளுக்கு ஒரு வெறுப்பு வரலாம் இல்லையா??அதான்...."-சிவாவின் குணாதிசயங்கள் விசித்ரமானவை!!அவனது பிறருக்கென சிந்திக்கும் இயல்பு,ராகுலை வெகுவாக ஈர்த்தது.

"உன்னை மருமகனா அடைய நான் கொடுத்து வைத்திருக்கணும்!"

"இல்லை அங்கிள்...கீதா மாதிரி ஒரு பெண்ணை கல்யாணம் பண்ண,நான் தான் கொடுத்து வைத்திருக்கணும்!"-அவனது தனது உயர்ந்த குணாதிசயங்களால் ராகுலின் மனதினை கவர்ந்துப் போனான்.

"சரிப்பா!இன்னிக்கு சாயங்காலம் கோவிலுக்குப் போகலாம்னு இருக்கோம்!நீயும் வாப்பா!"

"ம்..சரிங்க அங்கிள்!கண்டிப்பா வரேன்!"

"நான் வரேன்பா!"-அவனிடமிருந்து விடைப்பெற்று நகர்ந்தான் ராகுல்.

அவன் சென்றப்பின்,மீண்டும் மறைத்து வைத்த அந்தப் புகைப்படத்தை வெளியே எடுத்தான் சிவா.

அவனறியாமல் அவன் இதழோரம் குறுநகை மலர்ந்தது.

"ச்சீப்!"-எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தவனின் சிந்தனையை கலைத்தது மனோவின் குரல்.

"ம்??"

"உங்க பி.ஏ.போஸ்ட்க்கு ஆள் செலக்ட் பண்ணியாச்சு!"

"ம்!அப்பாயிண்ட்மண்ட் ஆர்டர் கொடுத்துவிடு!"

"நீங்க ஒருமுறை..."

"எனக்கு அதுக்கெல்லாம் டைம் இல்லை!"

"ஓ.கே.ச்சீப்!"

"மனோ!"

"ச்சீப்?"

"பிரகாஷ் எண்டர்பிரைசஸ் ஃப்பைலை என் டேபிளுக்கு எடுத்துட்டு வா!"

"உங்க பி.ஏ.கிட்ட கொடுத்து விடுறேன் ச்சீப்!"

"ம்!சீக்கிரம்!"-சென்றது...முழுதாக 30 நிமிடங்கள்...!

அரை மணி நேரம் கழித்து,கதவை தட்டப்படும் ஓசை ருத்ராவின் செவிகளில் விழுந்தது.

"கம் இன்!"-கதவை திறந்து உள்ளே நுழைந்தாள் ஒரு இளம் கன்னிகை!!

முகத்தில்,ஒரு வித தூய்மையான தேஜஸ்!இளம் பிங்க் நிற காட்டன் புடவை அவளை குடும்பபாங்கான நங்கையாய் காட்டியது.

"வாங்க!"-அவன் எதற்கும் அசராமல் கூறினான்.

"உங்க பெயர் என்ன?"

"பார்வதி வெங்கட்ராமன்!"-மெல்லியதாய் ஒலித்தது அவள் குரல்.

"எக்ஸ்பீரியன்ஸ் இருக்கா?"

"இ..இல்லை சார்!ஃப்ரஷ்ஷர்!"

-ருத்ராவிடம் ஒரு பெருமூச்சு வெளியானது.

"நிறைய ஹார்ட்வொர்க் பண்ண வேண்டி வரும்!எனக்கு எல்லாம் பர்பெக்ட்டா இருக்கணும்!"

"எஸ் சார்!"-அவள் மனோ கொடுத்தனுப்பிய கோப்பையை அவனிடம் நீட்டினாள்.

"தேங்க்யூ!நீங்க உங்க வேலையில ஜாயின் பண்ணிக்கலாம்!எதாவது சந்தேகம்னா உங்க சீனியர்கிட்ட கேளுங்க!"

"ஓ.கே.சார்!"

"கேரி ஆன்!"-அவள் சிரம் தாழ்ந்தப்படி அங்கிருந்து நகர்ந்தாள்.

ருத்ராவின் மனம் துணுக்குற்றது....கடினமான ஒரு பணியை அதிலும்,எனது முரட்டுத்தனத்தினை சமாளிக்க ஒரு கன்னிகையால் இயலுமா??

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.