(Reading time: 12 - 24 minutes)

"மாமா!"-ஒரு புத்தகத்தில் மூழ்கி இருந்தவனை கலைத்தாள் ஆராத்யா.இரு புருவங்களும் விழிகளை விட்டு உயர,திரும்பி சிறு புன்னகையை உதிர்த்தான் சிவா.

"என்னம்மா?"

"கோவிலுக்கு கிளம்பலை?"

"ம்...நான் வரலை!"

"ஏன்?"

"நீங்க போயிட்டு வாங்க!"

"புரிஞ்சிடுச்சு!அக்காவை பார்க்க வெட்கப்படுறீங்களா?"-சட்டென அவள் கேட்டுவிடவும்,அவனுக்கு என்ன பாவனையை காட்டுவது என்பதே குழப்பமாய் ஆனது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

"ஆ...அது...அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை!"

"நம்பிட்டேன்!சரி..நீங்க கிளம்புங்க!டைம் ஆகுது!இதை விட்டா,உங்களுக்கும்,அக்காவுக்கும் ஒருத்தரை ஒருத்தர் சந்திக்கிற வாய்ப்பு சத்தியமா கிடைக்காது!"

"இல்லைம்மா!"

"கிளம்புங்கன்னு சொல்றேன்ல!கிளம்புங்க!"-அவனை துரிதப்படுத்தினாள் ஆராத்யா.

"சரி..சரி..வரேன்!வரேன்!"

"ம்..நான் வெயிட் பண்ணுவேன்!10 நிமிஷத்துல வரணும்!"

"உத்தரவு ராஜகுமாரி!"-ஒரு சேவகனை போல வணங்கினான் அவன்.

ங்கே...

எதையோ சிந்தித்தப்படி அமர்ந்திருந்தாள் கீதா.

"அக்கா!"

"ம்??"

"என்னக்கா?கிளம்பலை?"

"நான் வரலை!"

"வாவ்!மாமாவும் இப்படியே தான்கா சொன்னார்!"

"ப்ச்..ஆரா!"

"சரிக்கா!நான் உன்கிட்ட வெளிப்படையா கேட்கிறேன்!பதில் சொல்லு!"

"............."

"இந்தக் கல்யாணம் உனக்கு பிடித்திருக்கா?இல்லையா?"

"இல்லை.."-சட்டென கூறிவிட்டாள் கீதா.

"ருத்ராவை நீ மறக்க மாட்டியா?"

"ருத்ராவுக்கு எந்த ஜென்மத்திலும் என் வாழ்க்கையில இடம் இல்லை!"-இந்த பதில் அவள் நிலையை நன்றாக குழப்பிக் காட்டியது.

"அப்பறம்??ஏன்??"

"சிவாக்கு என் கடந்தக் காலம் எதுவும் தெரியாது!அவர் நிச்சயம இதை ஏற்றுக்க மாட்டார்!நிச்சயம் எங்களுக்கு நடுவுல சின்ன சுணுக்கமாவது இருக்கும்!என்னால பொய்யா ஒரு வாழ்க்கை வாழ முடியாது!அதுக்காக,ருத்ராக்கும் என்னால இன்னொரு வாய்ப்பை கொடுக்க முடியாது!"

"அக்கா!சிவா மாமா நிச்சயம் உன் நிலைமையை புரிந்துப்பார்!என்னை நம்புக்கா!"

"ஆரா!பேசாம இதை விடு!நான் காதலை வெறுத்துட்டேன்!என்னால என் வாழ்க்கையை சுயமா வாழ முடியும்!நான் வாழ யாரோட துணையும் எனக்கு அவசியமானதில்லை!!"

"நீ இந்தப் பதிலை உனக்கு தைரியம் இருந்தா பெரியப்பாவிடமும்,தாத்தாவிடமும் சொல்லு பார்ப்போம்!"

"என்னால ஒருத்தன் வாழ்க்கையை வீணாக்க முடியாது ஆரா!"

"ஒருவேளை இந்த கல்யாணம் நடக்கலைன்னா,ஒட்டுமொத்தமா உங்க இரண்டுப் பேரோட வாழ்க்கையும் வீணாகிவிடும்!"

"என்ன??"

"மாமா உன்னை காதலிக்க ஆரம்பித்துவிட்டார்!அவரோட முதல் காதல் உன்னால உருவாகி இருக்கு!அவர் ஒண்ணும் ருத்ரா மாதிரி இல்லை,சந்தர்ப்ப சூழலுக்கு பயந்து,வேற ஒருத்தியை கல்யாணம் பண்ணிக்க புரியுதா!"

"ஆரா!"

"போதும் நிறுத்துக்கா!இதுவும் ஒரு வகையான துரோகம் தான்!நான் நிச்சயம் நீங்க பிரிந்ததுக்காக சந்தோஷப்படுறேன்!இல்லைன்னா,சிவா மாதிரி நல்லவன் உனக்கு கிடைத்திருக்க மாட்டான்!"-அவள் பேசிக் கொண்டே போக,பொறுமை இழந்தவள்,அவளை ஓங்கி அறைந்துவிட்டாள்.

இதுவரை குரலைக்கூட கடுமையாக உயர்த்தாத தமக்கை..இன்று கரம் நீட்டியதில் உச்சக்கட்ட அதிர்ச்சி அக்கன்னிகைக்கு!!

"அக்கா??"

"பேசாம போறீயா?இல்லையா??"-ஆராத்யாவின் மனம் நொறுங்கி போனது.கண்ணீரோடு அங்கிருந்து வெளியேறினாள் அவள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.