(Reading time: 12 - 24 minutes)

முகம் வாடிப்போய் வந்தவளை கவனித்துவிட்டான் சிவா.அவனது விழிகளில் வினாக்கள் நர்த்தனம் ஆடின.தன்னை அவன் கவனிப்பதை உணர்ந்தவள் முகத்தை அரும்பாடுப்பட்டு இயல்பாக்கினாள்.

"கீதா கிளம்பிட்டாளாம்மா?"

"அப்பா!அது...!அக்கா..."-சரணின் மனதில் ஏதோ தவறாகப்பட்டது.

"நான் போய் அவளை கூட்டிட்டு வரேன்!எத்தனை தலைமுறை ஆனாலும் பொண்ணுங்க ரெடியாகுற நேரத்தை குறைக்க மாட்டாங்க!"-என்றவர் புன்னகைத்தப்படியே கீதாவின் அறைக்கு சென்றார்.

சிவாவின் விழிகள் இன்னும் ஆராத்யாவை கேள்விகளால் துளைத்துக் கொண்டிருந்தன.

"ஆ..மாமா!நாம முதல்ல கோவிலுக்கு போகலாமா?"

"என்ன அவசரம்??சிவா கீதாக்கூட வரட்டும்!நீ எங்கக்கூட வா!"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தீபாஸ்ன் "பெண்ணே என் மேல் பிழை" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

"இல்லை அங்கிள்...நான் ஆராவைக் கூட்டிட்டு போறேன்!அவ பேசிக்கிட்டே வருவா எனக்கும் என்டர்டெயிண்மண்ட்டா இருக்கும்!"

"சரிப்பா!"

"............"

"ஏ..வாலு!ரொம்ப மொக்கை போடாதே!'

"ம்!"-இருவரும் கிளம்பிவிட்டனர்.

"சிவாவும்,கீதாவும் ஏன் சந்திக்கவே மாட்றாங்க?"-ஆர்யாவின் மனம் வினாவை எழுப்பியது.

காரில் கல்லாய் அமர்ந்திருந்தாள் ஆராத்யா.

"என்னாச்சு பிரிசன்ஸஸ்?உம்முன்னு வர?"

"ஒண்ணுமில்லையே!"

"செம அடியோ?"

"ம்??என்ன??"

"கன்னத்துல விரல் ரேகை பதிந்திருக்கும்மா!"-ஆராத்யா தன் கன்னத்தை தொட்டுப் பார்த்தாள்.

"என்ன பிரச்சனை??"

".............."

"சொல்லு!"

"அது..வந்து..நான் அக்காவை கொஞ்சம் ஓவரா கிண்டல் பண்ணிட்டேன்!"-அவள் கூறியவுடன்,அவனால் சிரிப்பை அடக்க இயலவில்லை.வாய்விட்டு சிரித்துவிட்டான்.

"என்ன மாமா சிரிக்கிறீங்க?"

"ஒண்ணுமில்லைம்மா...!"-போராடி நிலைக்கு வந்தவன்,

"அவதான் டென்ஷன் பார்ட்டின்னு தெரியும்ல!ஏன் அவக்கிட்ட வம்பிழுத்த?"-எதையும் அறியாமல் தன் தமக்கையை முழுதாய் புரிந்திருக்கும் சிவாவின் மேல் ஆராத்யாவிற்கு பரிதாபமே வந்தது.

"சரி விடு! இப்போ உன்னை விட இதுக்காக அவதான் அதிகமா கவலைப்பட்டுட்டு இருப்பா!"

"உங்களுக்கு அக்காவை நிஜமாவே பிடித்திருக்கா?"-திடீரென்று எழுந்த அவள் வினாவை அவன் சற்றும் எதிர்நோக்கவில்லை.

"ஏன் இப்படி கேட்கிற?"

"சொல்லுங்க!"-சில நொடிகள் அங்கே மௌனம்.

"கீதாவை நான் முதல்முறையா பார்த்த போது எனக்கு  என்ன ஒரு 12 வயசு இருக்கும் அவ்வளவு தான்!அன்னிக்கு ராகுல் அங்கிள் ஏதோ தப்பு பண்ணிட்டார்னு அவ அவரை திட்டிட்டு இருந்தா!ரொம்பலாம் இல்லை...வெறும் 2 நொடி சந்திப்பு தான் அது!!அவ முகத்தைக்கூட சரியா பார்க்கலை.முதல் சந்திப்பிலே அவ தைரியம் என்னை ஈர்த்தது!அதுக்கு அப்பறம் ஆஸ்ரேலியா போனேன்!கொஞ்ச நாளில் எல்லாம் மறந்துட்டேன்னு நினைத்தேன்.கொஞ்ச நாள் முன்னாடி ராகுல் அங்கிள் கல்யாண விஷயத்தைப் பற்றி சொன்னதை அப்பா சொன்னார்!சம்பந்தமே இல்லாம  எனக்குள்ள பல மாற்றம்.அதுநாள் வரைக்கும் அப்படி நான் நடந்தது இல்லை.எந்தப் பொண்ணையும் பற்றி யோசிக்காத நான்,கீதாவைப் பற்றி யோசிக்க மட்டுமே செய்தேன்!அப்போ தான் தெரிந்தது,என்னிக்கோ புதைந்துப் போன காதல்,அங்கீகாரம் வேண்டி துடிச்சிட்டு இருக்குன்னு!"-மனதில் உள்ள அனைத்தையும் அவன் கொட்டிவிட,மலைத்துப் போனாள் ஆராத்யா.

"அவளுக்காக தான் இந்தியா வந்தேன்.ஆனா,அவ என்னடான்னா,எனக்கு தரிசனமே தர மறுக்கிறா!"

'எவ்வளவு காதலை வைத்திருக்கிறான்?ஒரு மனிதனால் குணநலன்களை,அதிலும்,ஒரு கன்னிகையின் தைரியத்தையும்,வைராக்கியத்தையும் மட்டுமே அடிப்படையாக்கி அவளை காதலிக்க இயலுமா??தமக்கையின் தோற்றத்தைக் குறித்து இவன் கவலைக் கொள்ளவில்லை.என்றோ சந்தித்த,முகம் கூட காணாமல் நிகழ்ந்த சந்திப்பை ஆதாரமாக்கி கடல் கடந்து வந்துள்ளானா இவன்??இந்தக் காதல் கரம் சேராமல் போகுமாயின் நிகழ்வது தான் என்ன??நிகழும் இந்த யுத்தத்தில் வெற்றி பெற போவது தான் யார்??'-மனதளவில் குழம்பி போனாள் அக்கன்னிகை.

தொடரும்

Episode # 07

Episode # 09

{kunena_discuss:1070}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.