(Reading time: 15 - 30 minutes)

"வ பேரு என்ன?"

"ஜெனிபர்"

"சரி அவளுக்கு போன் பண்ணி அவளை வர சொல்லு"

"டேய் இந்த நடுராத்திரில கூப்பிட்டா தப்பா நெனச்சிக்க போறா"

"நிலைமை சீரியஸ் டா ப்ளீஸ்"

"போன் பண்ணி தொலைக்கிறேன்" என்றபடி ஜான் சில எண்களை அழுத்தி அலைபேசியை காதில் வைத்தான்.

"ஜெனிபர் எங்கே இருக்க?"

"இன்னைக்கு டூட்டி ஜான். ஹாஸ்பிட்டல்ல தான் இருக்கேன்"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

"எனக்கு உன்கிட்ட ஒரு உதவி வேணும் ஜெனிபர்"

"சொல்லு"

"எனக்கு தெரிஞ்ச நண்பனோட மனைவி மயக்கமாயிட்டா"

வசந்தின் கண்கள் ஜானிடம் அனலை கக்கின. 'வேறு வழி இல்லை' என்பது போல் சைகையில் சொன்னான் ஜான்.

"ஹாஸ்ப்பிட்டல் கொண்டுபோக வேண்டியது தான?"

" வெறும் மயக்கம் தான். அதான் உன்ன கூப்பிடுறேன். அது மட்டும் இல்லாம என் நண்பனோட மனைவி புத்தி சுவாதீனம் இல்லாதவ, அது வெளிய யாருக்கும் தெரியாது. வீட்டுக்குள்ளயே ட்ரீட்மெண்ட் நடக்குது"

"ஓ! சரி. அட்ரஸ் சொல்லு, டாக்ஸி புடிச்சு வரேன்"

"உனக்கு அந்த கஷ்டமே வேணாம். நீ இருக்க இடத்துக்கு கொஞ்ச நேரத்துல நானே வந்துருவேன்" என்று கூறி இணைப்பைத் துண்டித்தான் ஜான்.

"யாரை கேட்டுடா அவளை என் மனைவின்னு சொன்ன. இந்த விஷயம் நாளைக்கு வெளிய தெரிஞ்சா என்ன ஆகுறது?"

"ஆயிரம் பொய் சொல்லியாவது மயக்கத்துல இருக்கவங்களை பிழைக்க வைக்கணும்னு அந்த காலத்திலயே பெரியவங்க சொல்லிருக்காங்க"

இருபது நிமிட பயணத்திற்கு பிறகு ஜெனிபர் பணிபுரியும்  மருத்துவமனையை கார் சென்றடைந்தது. மருத்துவமனை வாசலில் ஜெனிபர் காத்திருந்தாள்.

"ஜெனி கார்ல ஏறு" என்று ஜான் அழைத்தான். அவளும் ஏறினாள். கார் சிட்டாக பறந்தது.

மேலியாவை பரிசோதித்துக்கொண்டிருந்தாள் ஜெனிபர். அவளது கண்கள் அவ்வப்போது வசந்தையும் ஜானையும் நோக்கின.

"உங்களுக்கு கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆகுது வசந்த்?"

வசந்த் ஜானை கொலை செய்வது போல் முறைத்தான்.

"ஒரு வருஷம் ஜெனி" என்றான் ஜான்.

மீண்டும் அமேலியாவின் நாடித்துடிப்பை ஆய்வு செய்தாள் ஜெனிபர்.

"இவனோட மனைவி கர்ப்பமா இருக்காளா?" என்று ஜான் மெல்லமாய் ஜெனியிடம் கேட்டான்.

வசந்த்திற்கு தூக்கிவாரி போட்டது. "டேய்! ஏண்டா இப்படி?"

"வழக்கமா மயக்கம் போட்டா தமிழ் சினிமாவுல இப்படி தான் கேள்வி கேப்பாங்க. நாம மட்டும் ஏன் விட்டு வைக்கணும்? அதான் நானும் கேட்டேன்" என்று சொல்லிய ஜான், "அது மட்டுமில்லாம இவ தான் உன் மனைவின்னு ஜெனி நம்பணும்ல" என்று வசந்தின் காதில் கிசுகிசுத்தான்.

"நீங்க நினைக்கிறது போல இவங்க கர்ப்பமில்லை" என ஜானின் கூற்றை நிராகரித்தாள் ஜெனிபர்.

மயக்க நிலையிலிருந்த அமேலியாவின் மனதில் சில காட்சிகள் மின்னலைப் போல்  வந்து வந்து சென்றன. ராணுவ வீரன் அவளை நோக்கி ஓடி வர, தீவிரவாதிகள் அவளை குறிபார்த்து சுடுகிறார்கள். பயத்தில் அமேலியா அலறினாள். அந்த அலறல் அவளைச் சுற்றி இருந்தவர்களுக்கும் கேட்டது. "சுடாதீர்கள்! சுடாதீர்கள்!" என அவள் உதடுகள் அரபிக் மொழியில் முணுமுணுத்தன.

"இவங்க பேசுறது புரியலையே" என்றால் ஜெனிபர்.

"அது பைத்தியங்களுக்கான மொழி. அவங்களுக்கு மட்டும் தான் புரியும். உனக்கும் புரியணும்னா நீயும் பைத்தியம் ஆகணும்" என்றான் ஜான்.

ஜானை செல்லமாக முறைத்த ஜெனிபர், "இவங்க பல்ஸ் நார்மலா தான் இருக்கு. அதிர்ச்சியிலயோ இல்லை பயத்திலயோ தான் இவங்க மயக்கம் போட்டு இருப்பாங்க. ஒரு இன்ஜெக்ஷன் போடுறேன். காலைல எல்லாம் சரி ஆகிடும்"

"என் நண்பனோட மனைவியை காப்பாத்துனதுக்கு ரொம்ப நன்றி ஜெனி" என்றான் ஜான்.

ஜெனிபர் வசந்தை நோக்கி, "அவங்க பக்கத்திலயே இருங்க வசந்த். உங்க மடி மேல அவங்களை படுக்க வச்சிக்கோங்க. அவங்களுக்கு ஆறுதலான துணை தான் இப்போ தேவை"

வசந்த் நெருப்பில் நிற்பது போல் என்ன செய்வது என்று புரியாமல் தவித்தான்.

"அவ சொன்னத செய்டா" என்று வசந்த்திடம் கூறினான் ஜான்.

வேறு வழியில்லாமல் படுக்கையில் அமர்ந்து அமேலியாவின் தலையை தன் மடியில் வைத்துக்கொண்டு அவள் தோள்களில் மெதுவாய் தட்டிக் கொடுத்தான் வசந்த்

ஜெனியும் ஜானும் அங்கிருந்து புறப்பட்டார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.