(Reading time: 15 - 30 minutes)

"சொல்லு அக்கா"

"என்னடா பண்ணிட்டு இருக்க?"

"நீ தான் இல்லையே, அதான் நானே டீ போட்டுட்டு இருக்கேன். அப்பா எப்படி இருக்காரு?"

"பரவால்லடா. கண் விழிச்சி கொஞ்ச நேரம் பேசினாரு. நிலா என்ன பண்ணிட்டு இருக்கா?"

"தூங்கிட்டு இருக்கா"

"அமேலியா நேத்து மயக்கம் போட்டுட்டாளா என்ன?"

"அது எப்படி உனக்கு தெரியும்?" அதிர்ச்சியோடு கேட்டான் வசந்த்.

"கொஞ்ச நேரத்துக்கு முன்னே ஜான் வந்தான். என்ன என்னமோ சொல்லி குண்டு தூக்கி போட்டுட்டு போயிட்டாண்டா"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தெய்வாவின் "காதல் கீதம்" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

"என்ன சொன்னான்?"

"நீ அவளை மடி மேல படுக்க வச்சு பாத்துக்கிட்டியாம்"

"அவன் தான் லூசு ஆச்சே அக்கா. அவன் சொல்லுறத எதுக்கு நம்புற?"

"நான் நம்பலை, ஆனா அப்பா தான்..."

"அவ மயக்கம் போட்டது உண்மை, டாக்டர் வந்து பார்த்தது உண்மை, மத்தபடி அவன் சொன்னதெல்லாம் வடிகட்டின பொய்"

"அவளுக்கு என்ன ஆச்சு? எதுக்கு மயக்கம் போட்டா?"

"திடீர்னு கத்தினா. வெளியே வந்து பார்த்தா மயங்கி கிடக்குறா"

"கண் விழிச்சிட்டாளா?"

"இல்லை. தூங்கிட்டு இருக்கா"

"ட்ரீட்மெண்ட் கொடுத்த டாக்டருக்கு அவ மேல சந்தேகம் வந்திடலையே?"

"அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை அக்கா"

"சரிடா நிலாவை ஸ்கூலுக்கு அனுப்பு. டிமிக்கி கொடுத்திட போறா. நான் சாயந்திரம் வரேன்" என்று கூறி இணைப்பைத் துண்டித்தாள் மேகலா.

'ஏண்டா ஜான், என்னய்யா போட்டு கொடுக்கிற. அமேலியாவ  ஊருக்கு அனுப்பிட்டு நிலைமை எல்லாம் சரியாகட்டும். உன்னை என்ன பண்ணுறேன் பாரு' என்று தனக்குத் தானே கூறிக்கொண்டே தேனீர் கோப்பையோடு வெளியே வந்து,  பேப்பர் பேனாவை எடுத்துக்கொண்டு டைனிங் டேபிளில் அமர்ந்து தேனீரை சுவைத்தபடி தனது ராஜினாமா கடிதத்தை எழுதினான் வசந்த்.

எப்படியும் தன் வேலை பறிபோகும் என்று அவனுக்குத் தெரியும். அதனால், அவனே வேலையை ராஜினாமா செய்ய முடிவெடுத்துவிட்டான். இனி, அடுத்து புகும் திசை என்னவென்று அவன் யோசிக்கவில்லை. போகிற போக்கில் போகட்டும், எல்லாம் முடிந்த பின்னே வருத்தப்படுவதில் பயனேது.

ராஜினாமா கடிதத்தை எழுதி முடித்ததும், நீண்ட பெருமூச்சை விட்டெறிந்து, சிறிது நேரம் அமைதியாக இருந்தான் வசந்த். மற்றொரு தேனீர் கோப்பையை எடுத்துக்கொண்டு தன் அறைக்கு சென்றான்.

அமேலியா அசையாமல் படுத்துக்கொண்டிருந்தாள். இன்னும் அவள் விழிக்காமல் இருந்தது வசந்த்திற்கு பயத்தைத் தந்தது. அவள் கன்னங்களை மெதுவாக தட்டி எழுப்ப முயற்சி செய்தான். அமேலியா அசையவில்லை.

வசந்திற்கு பயம் அதிகரித்தது. இனி பொறுமையாக இருப்பது பயனளிக்காது, அவளை மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம் என்றெண்ணி அமேலியாவைத் தூக்கிக்கொண்டு அறையின் வாசலைத் தாண்டினான்.

அமேலியா மெல்ல கண் விழித்தாள்.

தொடரும்...

Episode # 16

Episode # 18

{kunena_discuss:983}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.