(Reading time: 15 - 30 minutes)

'ன்னும் என்னலாம் நடக்க போகுதோ' என்று நொந்தபடி அமேலியாவின் தோள்களில் மெதுவாய் தட்டியபடியே இருந்தான் வசந்த்.

அமேலியாவின் இதழ்கள் அவளையும் அறியாமல் புன்னகைத்தன, தன் தந்தையின் மடியில் படுத்துறங்கும் சுகம் அவளுக்கு கிடைத்தது போல எண்ணினாள். குழந்தையைப் போல் மெல்ல சிணுங்கினாள்.

அவள் அவ்வாறு செய்தது வசந்த்திடம் ஒருவித உணர்வை ஏற்படுத்தியது. அவளது வாசம், ஸ்பரிசம் என முதல் முறை தான் இதுவரை யாரிடமும் உணராத ஒரு வித்தியாசமான உணர்வை அடைந்தான்.

அமேலியாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான் வசந்த். முதல் முறையாக அவளின் முகம் அவனுக்குப் பிடிப்பது போல் தோன்றியது. தான் செய்வது தவறு என்பதை போல் உணர்ந்த வசந்த், அவள் தலையை மெதுவாக பிடித்து படுக்கையில் படுக்க வைத்துவிட்டு எழுந்து செல்ல முற்பட்டான்.

ஆனால். அமேலியாவோ வசந்தின் கைகளைப் பற்றிக் கொண்டாள். அவன் உடலில் ஏதோ மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது. மீண்டும் அவளை தன் மடியில் படுக்க வைத்துக்கொண்டான். அவனது இதயம் படபடத்தது. .

அமேலியாவின் இதழில் புன்னகை அரும்பிக்கொண்டிருந்தது. 

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

நாராயணன் கண் விழித்தார். அவருடைய உடலெங்கும்  வலி, அசையக்கூட முடியவில்லை. எதிரில் இருப்பவர்கள் யாரென அவரால் தெளிவாக பார்க்க முடியவில்ல. வெள்ளை உருவம் ஒன்று அவர் முன் நடந்து வந்தது.

"இப்போ நீங்க எப்படி உணருறீங்க மிஸ்டர் நாராயணன்?" அந்த தாதிப் பெண் ஆங்கிலத்தில் கேட்டது அவருக்கு புரியவில்லை.

நாராயணனால் பேசக் கூட முடியவில்லை. அவர் எதையோ கூறினார். ஆனால், தாதிப் பெண்ணிற்கு புரியவில்லை. உடனே, அவள் வெளியில் இருந்த மேகலாவை அழைத்தாள். மேகலா உள்ளே வந்து தன் தந்தையிடம் பேசினாள். 

"அப்பா அப்பா இப்போ எப்படி இருக்கு?"

"உடம்பெல்லாம் வலிக்குதும்மா. எத்தனை நாளா மருத்துவமனையில இருக்கேன்?"

"நேத்தில இருந்துப்பா"

"டாக்டர் என்ன சொன்னாரு?"

மேகலாவிடம் சிறு தயக்கம் உருவானது.

"என்ன பேசாம இருக்க?"

"லேசான நெஞ்சு வலியால வந்த மயக்கம்னு சொன்னாருப்பா"

"என் இதயமே வெடிச்சுபோனது போல இருந்தது. அவருக்கு லேசான நெஞ்சு வலியாமா?"

"நீங்க அதிகம் பேசக் கூடாதுப்பா. ரெஸ்ட் எடுங்க"

"எப்போ நாம வீட்டுக்கு போக போறோம்?"

"இன்னும் சில டெஸ்ட் எடுக்கணும் அப்பா"

"அது முடிய எத்தனை நாள் ஆகும்?"

"ஒரு வாரம் ஆகலாம்"

"ஒரு வாரத்துக்கும் மாத்திரை மருந்து வாங்கிட்டு வீட்டுக்கு போய் வைத்தியம் பார்க்க முடியாதா?"

"நாம நெனச்ச நேரத்துக்கு எல்லாம் போக முடியாதுப்பா"

"நேத்தில இருந்து நீ இங்க தான் இருக்கியா?"

"ஆமாம்ப்பா"

நாராயணன் சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.

தாதிப் பெண்ணொருத்தி கதவைத் திறந்து உள்ளே வந்து மேகலாவிடம் ஆங்கிலத்தில் எதையோ கூறினார். மேகலாவும் அவளிடம் ஆங்கிலத்தில் பதிலுரைத்தாள்.

"என்ன விஷயம்?" என்று கேட்டார் நாராயணன்.

"உங்களை பார்க்க ஜான் வந்திருக்கானாம்"

"அந்த கிறுக்குப்பய ஏன் வந்தான். எங்கு போனாலும் எனக்கு நிம்மதி மட்டும் கிடைக்கவே மாட்டேங்குது"

"இப்படி எல்லாம் பேசாதிங்கப்பா"

"அவன் வரும் போது நான் தூங்குற மாதிரி இருக்கேன். என்னை தொந்தரவு பண்ணாம போயிட சொல்லு. நீயும் முகத்தை கொஞ்சம் சோகமா வச்சிக்க" என்றார் நாராயணன்

ஜான் கதவைத் திறந்து மலர்க்கொத்தோடு உள்ளே வந்தான். நாராயணன் சொன்னது போலவே மேகலா, நாராயணன் அருகே சோக முகத்தோடு அமர்ந்திருந்தாள்.

ஜான், மேகலாவையும் உறங்கியது போல  நடித்துக்கொண்டிருந்த நாராயணனையும் மாறி மாறிப் பார்த்தான்.

"அய்யய்யோ!  நாராயணன் போய்ட்டாரா" என ஜான் அலறினான்.

திடுக்கிட்டு விழித்த நாராயணன், "அறிவு கெட்டவனே!" என ஜானை முறைத்தபடி திட்டினார்.

"மிஸ்டர் நாராயணன் நீங்க உயிரோடு தான் இருக்கீங்களா? ஒரு நிமிஷம் பயந்துட்டேன். இந்தாங்க நீங்க குணமடையணும்னு என்னுடைய வாழ்த்துகள்" என்றபடி கொண்டு வந்த மலர்க்கொத்தை நாராயணனின் வயிற்று பகுதியில் வைத்தான் ஜான்.

"என்னடா மலர்வளையம் வைக்குறியா? ச்சே எடு!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.