(Reading time: 16 - 31 minutes)

Chithra 

விசாலி - கண்களின் பதில் என்ன மௌனமா கதையை பற்றி சொல்லுங்களேன். நீங்க எழுதி முடித்த இரண்டு கதைகள் & இப்போது தொடராக போய் கொண்டிருக்கும் 3 கதைகள் என்று பார்த்தால் இது தான் ரொம்ப youthful கதைன்னு ஒரு பீல் வருகிறது. இது சரியா?

சஞ்சய் & நீரஜா உருவான கதையை சொல்லுங்களேன்.

சித்ரா V - இருக்கலாம்.. ஏனென்றால் என்னுடைய மத்த கதைகளில், ஆரம்பமே நாயகன் நாயகிக்கு திருமணம், இரண்டு பேருக்கு நடுவில் பிரிவு, என்ன காரணம் என்ற சஸ்பென்ஸ், செண்டிமென்ட், எமோஷன் இப்படி நிறைய உண்டு.. ஆனால் இந்த கதையை பொறுத்தவரை, சஞ்சய் நீரஜாவின் காதல், அதை அவர்கள் எப்படி சொல்லப் போறாங்க? என்று கதை அவர்களை முன் வைத்தே இருக்கும், இந்த கதையிலும் நிறைய கதாப்பாத்திரங்கள் இருந்தாலும், சஞ்சய், நீரஜாவிற்கு தான் நிறைய முக்கியத்துவம் உண்டு. அதனால் யூத் ஸ்டோரியா தெரியுது போல..

கண்களின் பதில் என்ன மௌனமா? கதையும் என்னோட முதல் கதை என்று தான் சொல்வேன். காதலை உணர்ந்தது உன்னிடமே கதையை யோசிக்கும் போதே, இந்த கதையும் உருவாகிவிட்டது. என்ன அது முதலில் முந்திக் கொண்டது. இது இரண்டாவது கதையா போனாலும், முதல் புத்தகமா வந்திருப்பதில் மகிழ்ச்சி.

எனக்கு காதல் கரு சார்ந்த திரைப்படங்கள், கதைகள் பிடிக்கும் அதிலும் நாயகன் நாயகியிடையே உள்ள ஈகோ, அதிலும் நாயகிக்கு தான் அதிகம் இருக்க வேண்டும் இப்படிப்பட்ட கதைகள் என்றால் பிடிக்கும், அதோட தாக்கம் தான் இந்த கதை உருவாகியிருக்கும் என்று நினைக்கிறேன். இப்படி ஒரு கதை எழுதலாம் என்று முடிவு செய்ததுமே சஞ்சய், நீரஜா என்று பெயரோடே கதாப்பாத்திரம் தயாராகிவிட்டது. ரொம்ப யோசிக்காமல் உடனே பெயர் தேர்ந்தெடுத்தது இந்த ஜோடிக்கு தான், அதே போல வெற்றி என்ற பெயரும் உடனே தேர்வு செய்துவிட்டேன். அதன்பிறகு தான் சஞ்சய் என்ற பெயருக்கும் வெற்றி என்ற அர்த்தம் உண்டு என்பது தெரிந்து, அந்த ஜோசியம் சொல்ற சீன் யோசிச்சேன். கதை எழுதலாம் என்று நினைத்து இந்த கதையை யோசித்ததில்லை. முன்னமே நான் சொன்னது போல் என் கற்பனையில் இப்படி ஒரு கதை கரு யோசித்து வைத்திருந்தேன். எழுதலாம் என்று முடிவானதும் அதற்கு வடிவம் கொடுத்துவிட்டேன். காதலை உணர்ந்தது உன்னிடமே, உன் நேசமதே என் சுவாசமாய் கூட எப்போதோ யோசித்து வைத்திருந்த கதை கரு தான். அதனாலேயே உடனுக்குடன் இக்கதைகள் தயாராக இருந்தது போல, இப்போ ஆரம்பித்திருக்கும் கதைக்கெல்லாம் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் யோசித்து எழுத வேண்டி உள்ளது.

 

விசாலி - ஈகோ பிடிக்குமா? குட் குட் :-)
சரி, நெஞ்சோடு கலந்திடு உறவாலே கதையில் வரும் பெரிய குடும்பம் ஐடியா எப்படி வந்தது? நிறைய பேர் இருந்தால் படிக்கும் ரீடர்ஸ்க்கு எல்லோரையும் ஞாபகம் வைத்துக் கொள்ள முடியுமா??? இதை பற்றி எல்லாம் நீங்க யோசித்தது உண்டா?

சித்ரா V - அம்மா பக்க உறவுகள் அதிகம், அம்மா உறவு முறையில் தான் நானும் திருமணம் செய்துள்ளேன். தனித்தனி குடும்பம் என்றாலும், சின்ன சின்ன பிரச்சனைகள், மனஸ்தாபம் இருந்தாலும் ஏதாவது நிகழ்வுகள் என்றால் அனைவரும் ஒன்று கூடி விடுவோம். அதை மனதில் வைத்து தான் இப்படி ஒரு பெரிய குடும்பம் யோசித்தது. கூடவே என் கறபனைகளும் கலந்து எழுதுகிறேன்

இதில் நிறைய கதாப்பாத்திரம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. நாயகன், நாயகி, அவரவர் குடும்பம், நண்பர்கள் இப்படி அனைத்து காதாப்பாத்திரங்களும் இங்கு ஒரே குடும்பமாக இருக்கிறது. மகிழ், சுடர், அருள்மொழி, அமுதவாணன்(அவனை இன்னும் 2,3 அத்தியாயங்களில் அறிமுகப்படுத்திவிடலாம்) இவர்களை சுற்றி தான் மற்ற கதாப்பாத்திரங்களும் காட்டப்படும். முதலில் கொஞ்சம் குழம்பினாலும் போக போக அந்த காதாப்பாத்திரங்களை அறிந்துக் கொள்ள முடியும். முதல் அத்தியாயத்தில் வாசகர்களும் இதைத்தான் சொல்லியிருந்தார்கள். ஒவ்வொரு அத்தியாயத்திற்கு இடைவெளி விழுவதும் கொஞ்சம் கதாப்பாத்திரங்களை ஞாபகம் வைத்துக் கொள்ள சிரமமாக இருக்கலாம். MVS முடிந்ததும் அதே நேரத்தில் இந்த தொடரை தொடரலாம் என்று இருக்கிறேன்.

 

விசாலி - இந்த கதையின் கதாநாயகி சுடரொளியும் கங்கா, சம்யுக்தா போல நெகட்டிவாக வந்து பாசிடிவாக முடியும் கதாநாயகின்னு சொல்லலாமா?

சித்ரா V - அப்படி சொல்ல முடியாது.. கங்கா, யுக்தா ஒருவிதமாக பாவமென்றால், சுடரொளி வேறு விதத்தில் பாவமான கதாப்பாத்திரம். அவங்க ரெண்டுப்பேரும் ரொம்ப ஸ்டாராங்கான கதாபாத்திரம். காதல் கைகூடலன்னா பரவாயில்ல, கணவனுடன் வாழவில்லையென்றால் பரவாயில்லை என்று முடிவெடுப்பவர்கள். ஆனால் சுடர் அப்படி வெளிப்படையாக காட்டிக் கொண்டாலும் மனதளவில் குழந்தை போன்ற கதாப்பாத்திரம். அன்பு பாசத்துக்காக ஏங்கும் ஒரு குழந்தை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.