(Reading time: 16 - 31 minutes)

Chithra 

விசாலி – ஓகே! கதையை தொடர்ந்து படித்து அவங்களை பற்றி தெரிஞ்சுக்குறேன். உங்க லேட்டஸ்ட் கதை, மழையோடு தான் வெயில் சேர்ந்ததே வேகமாக செல்லும் இனிய கதையாக போய் கொண்டிருக்கிறது. அந்த கதைக்கு ஒரு preview தாங்களேன்.

சித்ரா V - நானே இந்த கதைக்கு இப்படி ஒரு வரவேற்பை எதிர்பார்க்கவில்லை. ரொம்ப சந்தோஷமாக இருக்கு. இது ஒரு குறுந்தொடர்.   ஏப்ரல் மாத கடைசியிலேயோ இல்லை மே முதல் வாரத்திலேயோ இந்த தொடர் முடிந்துவிடும். அதான் கொஞ்சம் வேகமாக போகுது போல..

பொதுவாக கதைக்கான தலைப்பு யோசிக்க மண்டையை பிச்சிப்பேன். இதில் இந்த தலைப்புகாகவே இந்த கதையை யோசித்தேன். ஒரு பாடலில் வரும் வரி இது. அடிக்கடி கேட்கும் அந்த பாடலில் இந்த வரி எனக்கு பிடித்து போய், இதை ஏதாவது ஒரு கதைக்கு தலைப்பாக வைத்தால் என்ன? என்று யோசிக்கும் போதே கதை கருவும் பெயரிடப்படாமலேயே ஆதவனும் வருணாவும் மனதில் வந்துவிட்டார்கள். ஆனா கதை கொஞ்சம் டெவலப் ஆகாம இருந்தது. சரி ஒரு சிறுகதையாவது எழுதுவோம் என்று நினைத்திருந்தேன். ஆனால் பிறகு இந்த கதை குறுந்தொடர் கொடுக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கு.

ப்ளாஷ்பேக், சஸ்பென்ஸ், ரொம்ப செண்டிமென்ட், எமோஷன் இல்லாமல் ஒரு கதை கொடுக்க வேண்டும் என்று நினைத்ததற்கு ஏற்பவே இந்த கதையை உருவாக்கினேன். இந்த கதையில் ஆதவன் இருக்கும் வீடு, ஏரியா அப்படி ஒரு இடத்தில் தான் எனக்கு கருத்து தெரிந்த வயதிலிருந்து திருமணம் வரை இருந்தேன். என்னோட பிறந்த வீடு அங்க தான், அதன்பிறகும் என்னோட அப்பா, அம்மா, தம்பி, தங்கையெல்லாம் அங்க தான் இருந்தாங்க. சில வருடங்களுக்கு முன்பு தான் வசதியில்லை என்று வேறு இடத்திற்கு வந்தோம். அதிலும் நாங்க இருந்தது ஓட்டு வீடு, ஆனால் எங்கள் உறவினர்கள், நண்பர்கள் இருந்த மாடி வீட்டை வைத்து தான் ஆதவன் வீட்டைப்பற்றி எழுதினேன்.

அதேபோல அப்பா கார் டிங்கர். தனியா வொர்க்‌ஷாப்பெல்லாம் இல்லை. வெளி வேலைக்கு தான் செல்வார். அதை வச்சு தான் என்னோட கற்பனை கலந்து ஆதவன் கதாப்பாத்திரம் உருவாகியது. அப்பாவை ஹீரோவா நினைச்சு எழுதினேனா என்று கேட்டுடாதீங்க அப்படில்லாம் இல்லை. நான் இருந்த இடம், அப்பாக்கு அந்த வேலை என்பதால் அந்த பகுதியெல்லாம் என்னால எளிதாக எழுத முடிந்தது. இந்த கதை வாசகர்களுக்கு ரொம்ப பிடித்து போகும் என்று தெரிந்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறது.

 

விசாலி – கதைக்கு பின்னால் இருக்கும் கதையை கேட்க ரொம்ப சுவாரசியமாக இருக்கு! சரி, உங்க எழுதும் ஆர்வத்தை பார்த்து, உங்க  மகள் கதை எழுதுறேன்னு சொன்னா, உற்சாகப் படுத்துவீங்களா?

சித்ரா V - கண்டிப்பா.. சிறு வயதிலிருந்தே என் மகளுக்கு தமிழ் புத்தகம் படிப்பதில் ஆர்வம் உண்டு.. இப்போதும் நல்ல தரமான கதைகள் என்றால் படிக்க கொடுப்போம்.. அதே போல் எழுதும் ஆர்வம் இருந்தாலும் அதை ஊக்கப்படுத்துவோம்.

 

விசாலி - உங்க பதிலில் கொடுப்போம், ஊக்கப்படுத்துவோம்ன்னு உங்க கணவரையும் சேர்த்து சொல்வது ஸ்வீட்! உங்கள் எழுத்து அல்லது கதைகளின் மூலம் நீங்க சாதிக்க விரும்புவது என்ன?

சித்ரா V - அப்படி எதுவும் நினைத்து நான் எழுத ஆரம்பிக்கவில்லை. என் மனதிற்கு ஒரு நிறைவை கொடுக்கிறது என்பதற்கே எழுதுகிறேன். எனக்கு உலக அறிவு குறைவு தான்.. எங்கள் வீடு, பள்ளி, கல்லூரி, உறவினர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்து விட்டினர் இதுவே நான் அறிந்தவை.. அதை வைத்து தான் நான் எழுத தொடங்கியதே, இப்போதைக்கு காதல், உறவு, நட்பு இதை வைத்து எழுதிக் கொண்டிருக்கிறேன். போக போக என்னை மெருகேற்றிக் கொள்ள வாய்ப்பு அமையலாம்.. இப்போதைக்கு இந்த எழுத்தாளர் கதை படிக்க நன்றாயிருக்கும் என்று வாசகர்கள் நம்பி படிக்கும் அளவிற்கு உயர வேண்டும். சில வாசகர்களை ஏற்கனவே அப்படி தக்க வைத்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

 

விசாலி - சில இல்லை பல வாசகர்கள் அப்படி இருக்காங்கன்னு உறுதியாகவே சொல்லலாம். அந்த வாசகர்களுக்கும், நம் Chillzee வாசகர்களுக்கும் நீங்க சொல்ல விரும்பும் மெசேஜ் ஏதாவது?

சித்ரா V - மெசேஜ் சொல்லும் அளவுக்கெல்லாம் நான் பெரிய ஆள் கிடையாது.. இருந்தாலும் ஒன்று சொல்கிறேன். கதை மாந்தர்களை பொறுத்த வரை, கொஞ்சம் உண்மை, அதிக கற்பனை கலந்து தான் உருவாக்கப்படுகிறது.  ஆனால் நிஜ வாழ்க்கையின் யதார்த்தம் என்ற  உண்மையை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். கதையில் நடப்பது போல வாழ்க்கையில் எதிர்பார்க்கக் கூடாது. திருமணம் ஆகாத பெண் வாசகர்களும் இங்கு உள்ளனர். இந்த உண்மையை அவர்கள் உணர்ந்துக் கொள்ள வேண்டும். திருமணம் ஆனவர்களும் இப்படி இனிமையான உறவுகள் நமக்கு அமையவில்லையே என்று ஃபீல் செய்யக் கூடாது.

 

விசாலி - :-)

நேரம் ஒதுக்கி கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொன்னதற்கு மிக்க நன்றி சித்ரா!

இந்த புதிய வருடம் உங்களுக்கு இனிமையானதாக அமையவும், உங்கள் எழுத்து பயணம் இன்னும் பல பல உயரங்களை அடையவும் Chillzee சார்பாக எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சித்ரா V - இப்படி ஒரு வாய்ப்பை அமைத்துக் கொடுத்த உங்களுக்கும் நன்றி. என்னைப் பற்றி, என் கதைகளை பற்றி இங்கு பகிர்ந்துக் கொண்டதில் மிகவும் மகிழ்ச்சியாக உணருகிறேன். உங்களுக்கும் மற்ற சில்சீ குழுவினருக்கும், வாசக நண்பர்களுக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். ஆத்மார்த்தமான நன்றிகள்.

 

சித்ரா Vயின் பங்களிப்புகள்:

அனைத்து பங்களிப்புகளையும் படிக்க, https://www.chillzee.in/chillzee-contributors/201:chithra-venkatesan பக்கம் செல்லுங்கள்.

நிறைவுப்பெற்ற கதைகள் படிக்க https://www.chillzee.in/stories/chillzee-completed-stories-by-authors-01#chithra பக்கம் செல்லுங்கள்.

 

{kunena_discuss:1188} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.