(Reading time: 2 - 3 minutes)

குட்டிக் கதைகள் – 66. எலிகளின் நட்பு

ரு முறை நகரத்தில் வாழும் எலி ஒன்று கிராமத்தில் வாழும் தன்னுடைய நண்பனை சந்திக்க சென்றது.

  

கிராமத்து எலி தனது நண்பனை அன்புடன் வரவேற்று அவனுக்கு சாப்பிட பீன்ஸ் மற்றும் சாதத்தைக் கொடுத்தது.

  

நகர எலிக்கு அந்த உணவு சுத்தமாக பிடிக்கவில்லை.

  

நகர வாழ்வை பற்றி ஒயாமல் பெருமை பீற்றிய நகர எலி, தன் நண்பனையும் தன்னோடு நகரத்திற்கு வரச் சொல்லி அழைத்தது.

  

கிராமத்து எலிக்கும் நகர வாழ்க்கையை அனுபவிக்க ஆசை ஏற்பட்டது.

  

நண்பர்கள் இருவரும் ஒன்றாக நகரத்தை அடைந்தார்கள்.

  

ஒரு உணவறைக்கு சென்று இரண்டு நண்பர்களும் தடபுடலான உணவை கொறித்தார்கள்.

  

திடீரென்று இரண்டு பெரிய நாய்கள் குறைத்துக் கொண்டே அவர்களை கவ்வ ஓடி வந்தது.

  

நண்பர்கள் இருவரும் விரட்டும் நாய்களிடம் இருந்து உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓட்டம் எடுத்தார்கள்.

  

நாய்களிடம் இருந்து ஓடி எப்படியோ தப்பி பிழைத்தார்கள்.

  

கிராமத்து எலி தனக்கு நகர வாழ்க்கை ஒற்றுக் கொள்ளாது என்று சொல்லி கிராமத்திற்கே நடைக் கட்டியது.

  

கருத்து:

  

தடபுடலான உணவை உயிருக்கு பயந்து பயந்து உண்பதை விட, எளிய உணவை அமைதியான சுழலில் உண்பது எவ்வளவோ மேல்!

   

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.