(Reading time: 11 - 22 minutes)

குழந்தைகள் சிறப்பு சிறுகதை - ஒரு ஈயின் ஆசை - நாரா நாச்சியப்பன்

வானுலகத்தில் பிரமதேவன் படைப்புத் தொழிலில் ஈடுபட்டிருந்தார். அதாவது புதிய உயிர்களைப் படைத்துக் கொண்டிருந்தார்.

  

தங்கநிறமான களிமண்ணில் அமுத நீரை ஊற்றிப் பிசைந்தார். களிக் களியாய் வந்தவுடன் சின்னச் சின்ன உருவங்களாக கையினால் உருட்டி னார். கண், காது, மூக்கு, தலை, வாய், கை, கால் எல்லாம் செய்தவுடன் அந்த உருவத்தை உள்ளங் கையில் வைத்துக் கொண்டு, படைப்பு மந்திரத்தைச் சொல்லி வாயினால் ஊதினார்.

  

உடனே அந்த உருவம், காற்று மண்டலத்தின் வழியாகப் பூவுலகத்துக்கு வந்து, யாராவது ஒரு பெண் வயிற்றில் கருவாக உட்கார்ந்துவிடும்,

  

இப்படி ஒவ் வொரு விநாடியும் ஓராயிரம் களிமண் பொம்மையைச் செய்து கொண்டேயிருந்தார்.

  

அப்போது அவர் மூக்கின் மேல் ஒரு ஈ பறந்து வந்து உட்கார்ந்தது. இடது கையால் அதை விரட்டி னார். அது பறந்து போய் அவர் தோளிலே போய் உட்கார்ந்தது..

  

களிமண் பிடித்த வலது கையால் தோளிலே தட்டினார். அது தொடைக்குப் பறந்தது.

  

மிகக் கவனமாக கையால் பிடித்து முகத்துக்கு நேரே கொண்டு வந்து, 'ஏ சின்ன ஈயே, ஏன் என்னை வேலை செய்ய விடாமல் தொந்தரவு செய்கிறாய்?' என்று கேட்டார்.

  

கடவுளே, எனக்கு ஒரு வரம் வேண்டும் என்று கேட்டது ஈ. என்ன வேண்டும்? சொல் எனக்கு நிறைய வேலை யிருக்கிறது. இன்று பொழுது சாய்வதற்குள் இரண்டு கோடி உயிர்களைப் படைத் தாக வேண்டும் என்று பரபரப்பாய்ப் பேசினார் பிரம்மா.

  

"தேவா, பல உயிர்களுக்கு நீங்கள் வால் வைத்துப்படைத் திருக்கிறீர்கள். ஈக்களாகிய எங்க ளுக்கு மட்டும் வால் இல்லை. எங்களுக்கு ஓர் அழகான வால் மட்டும் கொடுத்து விடுங்கள்.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.