(Reading time: 11 - 22 minutes)

வாலைப் பார்த்ததும் ஈ அந்த மானை நோக்கிச் சென்றது.

  

மானே மானே உன் அழகான சின்ன வாலை எனக்குத் தருவாயா? நீ தா ஒப்புக்கொண்டால் கடவுள் அதைத் தருவதாகச் சொல்லியிருக்கிறார். என்ன சொல்கிறாய்? என்று அன்போடு கேட்டது.

  

"என் வாலைக் கொடுத்து விட்டு நான் என்ன செய்வேன்? வால் இல்லாவிட்டால் என் குட்டியைப் பறி கொடுக்க நேரிடுமே” என்று கூறியது மான்.

  

உன் வாலுக்கும் குட்டிக்கும் என்ன தொடர்பு? என்று வியப்புடன் கேட்டது.

  

"ஓநாய்கள் எங்களுக்குப் பகை. அவற்றின் வாயில் அகப்பட்டால் நாங்கள் தப்ப முடியாது. ஆகையால், விரட்டி வரும் ஓநாயிடமிருந்து தப்ப நாங்கள் தலை தெறிக்க ஓடுவோம். ஒடும் போது ஓநாயின் கண்ணில் படாமல் ஏதாவது புதருக்குள் நான் பதுங்கிக் கொள்வேன். வெளியிலிருந்து பார்த் தால் என்னைக் கண்டு பிடிக்க முடியாது.

  

ஆனால் நான் எங்கேயிருக்கிறேன் என்பது என் குட்டிக்கு மட்டும் தெரிய வேண்டும். புதருக்குள் மறைந்திருக்கும் நான் என் வாலை ஆட்டுவேன். அதைக் கண்டு என் குட்டி நான் எங்கே இருக்கிறேன் என்று புரிந்து கொள்ளும். உடனே அதுவும் ஒளிந்து மறைந்து ஓடி வந்து என்னோடு சேர்ந்து கொள்ளும்' என்று விளக்கமாகக் கூறியது மான்.

  

வால் இல்லா விட்டால் மான் எவ்வளவு துன்பப் படும் என்று ஈ புரிந்து கொண்டது. மேலும் அதை வற் புறுத்திக் கேட்கக் கூடாது என்று அங்கிருந்து கிளம்பியது.

  

காட்டு வழியில் ஒரு நரி போய்க் கொண்டிருந் தது. அந்த வால் மாதிரி ஒரு சின்ன வால் இருந்தால், எவ்வளவு அழகாக இருக்கும் என்று எண்ணியது ஈ. உடனே அது நரியை நோக்கிப் பறந்தது.

  

"நரி யண்ணா , நரியண்ணா. கடவுளிடம் நான் ஒரு வால் கேட்டேன். நீங்கள் ஒப்புக் கொண்டால், உங்கள் வாலை எடுத்துச் சின்ன வால் ஆக்கி எனக் குத் தருவதாகக் கடவுள் சொன்னார். உங்கள் வா லைத் தந்து உதவுங்கள் அண்ணா. வால் இல்லாமலே நீங்கள் அழகாக

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.