(Reading time: 9 - 18 minutes)

தீபாவளி வர இன்னும் ரெண்டு நாளே இருந்திச்சு.ஊரே கலகலப்பா இருந்திச்சு.பொன்னி தீபாவளிக்கு பலகார பட்சணம் பண்ண நெனச்சு கொல்லைப்புரத்தில் அடுப்ப வெச்சு பட்சணம் செய்ய ஆரம்பிச்சா.

ஒரு வாளி நிறைய அதிரசமும் இன்னொரு வாளி நிறைய முறுக்கும் செஞ்சா.பட்சண வாசனை மூக்க தொளச்சுது.ஜாலியா படுத்துக்கிடந்த கழுதைக்கு பட்சண வாசனையால வாயில எச்சில் ஊறிச்சு..அதுக்கு தின்னனும்போல ஆசையா இருந்துச்சி.ஆனா யாராவது கழுதைங்களுக்குப் பட்சணம் கொடுப்பாங்களா?என்னடா செய்யலாம்ன்னு யோசன பண்ணிச்சு கழுத.அப்ப யாரோ வாசல்லேர்ந்து பொன்னி..பொன்னின்னு கூப்டாங்க.தோ வாரேன் அப்பிடின்னு சொல்லிட்டு பொன்னி பட்சண வாளிங்கள லேசா மூடிட்டு வாசப் பக்கம் போனா.சட்டுன்னு எந்திருச்ச கழுத இன்னொரு கழுதய பாத்திச்சு.அது பாவம் மூட்ட தூக்கி வேல செஞ்ச களைப்புல நல்லா தூங்கிக்கிட்டு இருந்துச்சு.

இந்த கழுத மெள்ள பட்சணம் இருந்த வாளிகிட்ட போய் வாளிங்கள்ள இருந்த அதிரசம்,முறுக்கு எல்லாத்தியும் அவசர அவசரமா தின்னு தீத்திட்டு மறுபடியும் தன்னோட எடத்துல வந்து படுத்திடுச்சு.தூங்கறமாரி நடிச்சிது.

வாசல்லேர்ந்து மறுபடியும் அங்க வந்த பொன்னி வாளிகள்ள வெச்சிருந்த அதிரசம்,முறுக்கு எல்லாம் காணாமல்போயிருப்பதைப் பார்த்து லபோதிபோ என்று கத்தினா.பொன்னனும்,கண்ணனும் ம்ற்றும் அக்கம் பக்கத்தினரெல்லாம் கூடிவிட்டார்கள்.அத்தனை பட்சணங்களும் எப்படி மாயமாய் மறைந்திருக்குமென ஒருவருக்கும் புரியவில்லை.அப்போது தற்செயலாய் கண்ணனின் பார்வை தூங்குவது போல் நடித்துக்கொண்டிருந்த அந்த நடிபுக்காரக் கழுதையின் மேல் விழுந்துச்சு.

அதன் வாயின் இருபுறமும் பட்சணத் துணுக்குகள் ஒட்டியிருப்பதைப் பார்த்தான்.அதன் மேல் அவனுக்குச் சந்தேகம் வந்திச்சு.சட்டென அவனுக்கு ஒரு ஐடியா தோணிச்சு.

உள்ளே போய் ஒரு சீனுவெடி சரம் ஒண்ண எடுத்திட்டு வந்த கண்ணன் அத அந்தக் கழுதையோட வால்ல கட்டி நெருப்ப வெச்சுட்டான்.அவ்வளவுதான் அந்த சரவெடி படபடன்னும் டமால் டுமீல்ன்னும் வெடிக்க ஆரம்பித்திச்சு.பயந்து போன கழுத லபக்குன்னு எழுந்து கத்திகிட்டே ஓட ஆரம்பிச்சுது.அங்ககயும் இங்கயும் ஓடிச்சு சுத்தி சுத்தி ஓடிச்சு.உண்மையில அதுக்குக் கால் வலின்னா அதால ஓட முடியுமா?

அப்பா..அப்பா..பாருங்கப்பா..கழுத எப்பிடி ஓடுது பாருங்கப்பா...அதுக்குக் கால் நல்லாதாம்ப்பா இருக்கு.இத்தன நாளும் சும்மா நடிச்சு நம்மள ஏமாத்திருக்குப்பா..அதுதாம்பா எல்லா பட்சண்ங்களையும் தின்னிருக்கு.அதோட வாய் ஓரத்துல ஒட்டிருக்கு பாருங்கப்பான்னு கண்ணன் கத்தினான்.கண்ணன் சொல்வது உண்மை என்று எல்லோருக்கும் புரிந்தது.பொன்னனும் புரிந்து கொண்டான்.ஆனாலும் கண்ணா நீ இதுபோல் அதன் வாலில் வெடியைக் கட்டி வெடித்திருக்கக் கூடாது.அது பெரும் பாவம்,பெரும் தவறு இனி இது போல் செய்யாதே என்று சொல்லியபடியே

வெடிக்கும் வெடிச் சரத்தை தண்ணீரால் அணைத்தான் பொன்னன்.

இனிமேலும் இந்த பொல்லாக் கழுதையை,நடித்து ஏமாற்றிய கழுதையை,நம்மிடம் வைத்திருக்கக் கூடாது என பொன்னனிடம் பொன்னி கட்டிப்பாய் சொல்லிவிட வேறு வழியின்றி பொன்னன் பக்கத்து ஊர்க்காரன் ஒருவனிடம் அந்தக் கழுதையை விற்றுவிட்டான்.

அவன் ரொம்பவும் பொல்லாதவன்.கழுதையை கடுமையாக வேலை வாங்கினான்.நிறைய சுமையை அதன் முதுகில் ஏற்றினான்.தூக்காவிட்டால் பளீர்பளீர் என்று சாட்டையால் அடித்தான்.அரை வயிற்றுக்குதான் தீனி போட்டான்.பாவம் அந்த கழுதை.அவனிடம் வசமாக மாட்டிக் கொண்டது. பொன்னனை நினைத்து அழுதது.பொய்யாய் நடித்ததால்தானே இந்த தண்டனை என்பதை புரிந்து கொண்டது.கெடுவான் கேடு நினைப்பான் அல்லவா?.. 

ஹி..எல்லாருக்கும் இந்த கதை புடிச்சுதா?குட்டீஸ்..பொன்னன் சொன்ன மாதிரி எந்த விலங்கோட வால்லயும் பட்டாச கட்டி பத்தவைக்கக்கூடாது.உங்களுக்கே தெரியும்தானே?அதுமட்டுமில்ல.. பொய்யும் சொல்லக் கூடாது இல்லியா.?.பொய்யா நடிச்ச கழுத பொல்லாதவங்கிட்ட மாட்டிக்கிச்சு பாத்தீங்களா.. நன்றி...

{kunena_discuss:875}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.