(Reading time: 3 - 5 minutes)

குழந்தைகள் சிறப்பு சிறுகதை - நண்பரின் பெயர் என்ன ???? - ரேவதிசிவா

Name

பட்டுப் பிள்ளைகளுக்கு ஒரு குட்டிப் புதிர் கதை....

ம்ம நண்பர் ஒரு நாள் எதையோ ரொம்ப தீவிரமாக யோசித்துக்கிட்டிருக்கும் பொழுது, அவர பார்க்க அவரோட நெருங்கிய நண்பர் வந்தார்.

அவர வரவேற்று, நன்கு உபசரித்தார்.

அவரோ நம் நண்பரப் பார்த்து என்ன பிரச்சினைனு? கேட்க , நம் நண்பர் தன்னுடையப் பிரச்சினைய சொல்ல ஆரம்பித்தார்...

வாங்க நாமளும் நம்ம நண்பருக்கு என்ன பிரச்சனைனு தெரிஞ்சுகலாம்...

அதுவந்து நீலா, இந்த மக்களை என்னாலப் புரிஞ்சுகவே முடியல. தங்களுக்கு வளமில்ல அதனால துன்பத்தை அனுபவிப்பதாக நம்ம தலைவர்கிட்ட முறையிடராங்க. நம்ப தலைவரும் அவங்க கஷ்டத்தைப் பார்த்து அவங்க கேட்கறத தரும்படி சொல்ல, நானும் அவங்களுக்காக பார்த்துப் பார்த்து தர, அவங்க கொஞ்சம்கூட சேமிக்காம ஊதாரி போல் செலவு செஞ்சிட்டு மறுபடியும் திரும்பி வராங்க . இவங்களை எப்படி திருத்தறதுனு யோசிக்கும் பொழுது நீ வந்தனு சொல்லி முடிச்சார்.

அவர் நண்பரோ நம் நண்பரப் பார்த்து,” கவலப்படாத கார், இந்த மக்களே இப்படிதான் ! இல்லனு புலம்புவாங்க அதுவே இருந்துச்சுனா கண்டபடி செலவழித்துட்டு அழுவாங்க ... பேசமா நீ அவங்க பிள்ளைகளுக்கு சொல்லு அவங்க இப்பவே சேமிக்க கத்துக்கு வாங்கனு” கூறினார்.

(உங்களப் பத்திதான் பாராட்டி பேசறாங்க குட்டி நண்பர்களே!)

நம்ப நண்பர், தன்னோட பிரச்சனைக்கு தீர்வு சொன்ன தன்னோட நீலாக்கு நன்றி சொல்ல , அதுக்கு நம்ம நீலா(நம்ம நீலாவா? உங்களைப் பாராட்டி நல்ல விஷயத்தை சொன்னார்தானே! அதனால அவரையும் நம்ப நண்பரா சேர்த்துக்கலாம் சரியா!) நண்பர்களுக்குள் நன்றி சொல்ல கூடாது. சரி வா! சற்று உலாவி(வெளியே நடந்து போவது) வரலாம்னு சொல்லி, நம் நண்பர அழைச்சுகிட்டுப் போனார்...

இதுல சொல்லற மாதிரி இப்பயே சேமிக்க கத்துக்குங்க குட்டி நண்பர்களே.

இந்த இரண்டு நண்பர்களோடப் பேர கண்டுப் பிடிக்கனும் அதுதான் கேள்வி.

வலைப்படாதிங்க, நான் உங்களுக்கு குறிப்புகள் தரேன் சரியா?

1. நம்ப நண்பரோட முதல்பாதி “கார்”

2. “கார்” நண்பரோட முதல்பாதி “நீல”

3. இருவரோடப் பிற்பாதி பெயர் ஒன்றே

கண்டுப்பிடிச்சிட்டீங்களா?

இல்லையா. சரி இன்னும் ஒரு குறிப்பு அதுவும் உங்களுக்காக மட்டும் சரியா?

(காத காட்டுங்க, நம்ப நண்பர் கார் அழுதா நாம அனைவரும் சந்தோஷாப்படுவோம்)

கண்டுப்பிடிச்சாச்சா????

.

.

.

நம்ப நண்பர் பெயர் கார்மேகம்

அவர் நண்பர் பெயர் நீலமேகம்

பார்த்தீங்களா! மேகம் – பிற்பாதி இரண்டு பேருக்கும் ஒரே மாதிரிதான இருக்கு.

உங்களுக்குக்காக-நம்ம நண்பர் அழுதா எவ்வளவு கஷ்டப்படுவோம்! அப்படியும் நம்ப கார்மேகம் நமக்காக அழுது நமக்கு உதவும் பொழுது நாம அதை வீணாக்கலாமா? தண்ணீர் நம் நண்பரோட கண்ணீர். அதனால அதைப் பாதுகாப்போம் .

நீங்க அறிவியல் ஆசிரியரிடம் போய் மழை வரதப் பற்றி கேட்டு தெரிஞ்சுக்கோங்க.

நான் சொல்லமாட்டன்.அப்பதான் என் குட்டி நண்பர்களான நீங்க கேள்விக் கேட்பீங்க...

நாம நிறைய கேள்விகள் கேட்டாதான் நிறைய கத்துக்க முடியும்... இனிமேல் பெரியவங்களிடம் கேள்வி கேட்டு நிறைய தெரிஞ்சுகோங்க.....

{kunena_discuss:875}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.