(Reading time: 7 - 13 minutes)

மிழன் மட்டுமே,

தமிழை மொழி மட்டுமல்லாது உயிராக நேசிக்கிறான்!!

அனைவருக்கும் பகிருங்கள் . ​தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா...​

பெத்தவங்கள ஏன் ..............

"அம்மா"

"அப்பா" ன்னு கூப்பிட்றோம்..!!

எப்பவாவது யோசிச்சிருக்கீங்களா.?

அந்த வார்த்தைக்கும் நமக்கும் என்ன தொடர்பு..?

*அந்த வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் என்ன...?*

அ – உயிரெழுத்து.

ம் – மெய்யெழுத்து .

மா – உயிர் மெய்யெழுத்து.

அ – உயிரெழுத்து.

ப் – மெய்யெழுத்து .

பா – உயிர் மெய்யெழுத்து.

தன் குழந்தைக்கு உயிரை கொடுப்பவர் தந்தை.

தாயானவள் தன் கருவறையில் அந்த உயிருக்கு மெய் (கண், காது, மூக்கு, உடல் உறுப்புகள்) கொடுப்பவள் தாய். .

இந்த உயிரும் , மெய்யும் கலந்து உயிர் மெய்யாக வெளிப்படுவது குழந்தை. எந்த மொழியிலும் அம்மா, அப்பாவுக்கு இந்த அர்த்தங்கள் கிடையாது.

*நமது "தமிழ்" மொழியில் தான் இத்துனை அற்புதங்கள் உள்ளது..!!*

_"மம்மி -என்பது பதப்படுத்தப்பட்ட பிணம்..."_*

வாசிக்கவே தமிழர்களாகிய நமக்கு புல்லரிப்பு கொடுக்குதில்ல, ஒரு வகையில் இந்த மெஸேஜ் மற்ற மொழிகளை ஒப்பிட்டு இருப்பதாக இருந்தாலும் அதில் குறிப்பிட்டுள்ள விஷயம் உண்மையே என்பதால் நானும் பெருமிதமாகவே உணர்ந்தேன். அந்த புல்லரிப்போட தான் ஒரு நண்பன் இந்த மெஸேஜை போஸ்ட் செய்ய, தமிழ் மீடியம்ல படிச்சுட்டு ஒரு நிலைமைக்கு வர்றதுக்குள்ள மலைச்சிகரம் ஏறினக் களைப்போட இருக்கின்ற என்னைப் போன்ற நண்பர்கள் க்ரூப் தான் அது. அதில ஒரு நண்பனுக்கு இந்த மெஸேஜின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

"தமிழெல்லாம் நமக்கு எதுக்கு?, இப்போ குழந்தைகள் எல்லாம் எங்கே அம்மா, அப்பான்னு கூப்பிடுது எல்லாம் மம்மி, டாடி தானே, நாம் முதலில் இந்தியர்கள் அதனை ஞாபகத்தில் கொள்வோம். இங்கிலிஷ் மட்டும்தான் நமக்கு தேவை" எனப்பொரிய, பதிலுக்கு பல கருத்துப் பரிமாற்றங்கள்.

மொழிக் குறித்த கருத்துப் பறிமாற்றத்தால் நாம் இந்தியர்கள் அல்ல, அல்லது தேசப் பற்று மிக்கவர்கள் அல்ல என்று ஆகிவிடுமா? இல்லை ஆங்கிலம் தான் நம்முடைய தாய்மொழி அல்லது தேசத்தின் மொழி என்று ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை வருமா? என்று ஏற்பட்ட சிந்தனை தான் இப்பதிவு.

முதலில் இந்தியர்கள் என்றுச் சொல்லும் போது இந்தியர்களுக்கென்று ஒரு தனிப்பட்டக் குணம் இருக்கின்றதா? என்று யோசித்துப் பார்த்தால், இந்தியர்கள் என்றாலே ,"வேற்றுமையில் ஒற்றுமை" என்பது தானே நாம் கற்றுக் கொண்டதும் , வாழ்வில் கண்டதும் கூட. பல்வேறு இனம், மதம் , மொழிக் கலாச்சாரங்களுக்குள்ளே வாழ வாய்ப்பு கிடைத்த எனக்கு ஒவ்வொரு மொழி, மதக்கலாச்சாரமும் நெகிழச் செய்கின்ற ஒன்றாகவே இதுவரை இருந்து வந்திருக்கின்றது.

நாமெல்லாம் பெற்றவர்களை, பெரியவர்களை கையெடுத்து கும்பிட கூட கூச்சப் படுவோம். ஆனால், வட இந்தியர்கள் கலாச்சாரத்தின் படி அவர்கள் நிற்பது எந்த ஒரு பொதுவிடமாக இருக்கட்டும், ரோடாக இருக்கட்டும் பெரியவர்களை முதலில் பார்த்தவுடன் சட்டென்று தாள் பணிந்து கால் தொட்டு கும்பிடுவார்கள்.

மீன்கள் சாப்பிடுவதையே வாழ்வில் மிகப்பெரிய விருப்பமான விஷயமாகக் கொண்டிருந்தாலும் வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் அசைவம் சாப்பிடாத மராத்தி நண்பர்கள்.

எப்போதும் கலர் ஃபுல்லாக உடை அலங்காரம் செய்யும், உற்சாகமாக பேசும்,பழகும் பஞ்சாபி மக்கள்.

வளவளவென பேசினாலும் மரியாதைக் குறைவாக பேசியறியாத குஜராத்தி மக்கள்.

இப்படி எத்தனையோச் சொல்லலாம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.