(Reading time: 2 - 3 minutes)

அதிசய உலகம் - 09. 33 வருடங்களுக்கு முன் காணாமல் போன பீச் மீண்டும் தானாகவே தோன்றி இருக்கும் அதிசயம்! - தேன்மொழி

Dooagh

முப்பத்தி மூன்று வருடங்களுக்கு முன் கடலால் மூழ்கடிக்கப் பட்ட பீச் ஒன்று திடீரென மீண்டும் தானாகவே தோன்றி இருக்கிறது!!!

அயர்லாந்தின் மேற்கு பகுதியில் இருக்கும் டூஆ பீச் 1984ஆம் ஆண்டு வரை பிரபலமான டூரிஸ்ட் இடமாக இருந்தது. பல ஹோட்டல்கள், தங்கும் இடங்கள், கடைகள் என்று பரபரப்பாகவும் இருந்த இடம் அது!

ஆனால் அந்த வருடம் கோடைக் காலத்தில் திடீரென அங்கிருந்த மணல் பரப்பு காணாமல் போய் பீச்சும் கண்ணுக்கு மறைந்து போனது.

வெறும் கற்களால் ஆன கரை மட்டுமே கண்ணில் பட்டது!

இதனால் டூரிஸ்டுகள் அந்த இடத்திற்கு வருவதை விட்டுவிட, அந்த இடமே வெறிச்சிட்டு போயிருந்தது.

Dooagh

ந்த நிலையில், அதிசயிக்கும் விதமாக, கடந்த சில நாட்களில் திடீரென அங்கிருந்த கற்கள், பாறைகள் போய், பீச் மணல் பரப்பு மீண்டும் தோன்றி இருக்கிறது!

தானாகவே மீண்டும் வந்திருக்கும் பீச்சை கண்டு மக்கள் அதிசயித்து போயிருக்கிறார்கள்!

பீச் கண்ணுக்கு தெரிந்ததற்கு பலமான காற்று மற்றும் மணல் அரிப்பு காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள.

 

அதிசய உலகம் - மற்ற கட்டுரைகள்

 {kunena_discuss:1125}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.