(Reading time: 2 - 4 minutes)
Egg Gravy
Egg Gravy

Chillzee சமையல் குறிப்புகள் - முட்டைக் குழம்பு

தேவையான பொருட்கள்

3 வேகவைத்த முட்டைகள்

ஒரு வெங்காயம் நறுக்கியது

ஒரு தக்காளி நறுக்கியது

3-4 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய்

5-6 பூண்டு பல் நறுக்கியது

1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் (காரத்திற்கேற்ப கூட்டி / குறைத்துக் கொள்ளவும்)

1/5 டீஸ்பூன் மஞ்சள் தூள்

கரம் மசாலா தூள் சிறிதளவு

மிளகு தூள் சிறிதளவு

ஒன்றரை டேபிள் ஸ்பூன் எண்ணெய்

உப்பு - சுவைக்கேற்ப

 

செய்முறை

ஒரு கடாயை சூடாக்கி,  அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்.

எண்ணெய் சூடான பிறகு, ​​நறுக்கிய பூண்டு சேர்த்து, பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.

நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கி, பின்னர் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்க்கவும்.

எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி விட்டு, துருவிய தேங்காயைச் சேர்க்கவும்.

2-3 நிமிடங்கள் வதக்கவும். தேங்காயை குழம்புடன் சேர்வது போல நன்றாக கலந்து வதக்கவும்.

ஸ்டவ்வை அனைத்து விட்டு, இந்த கலவையை ஆற அனுமதிக்கவும்.

பின்னர் அதை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து நல்ல பேஸ்டாக அரைக்கவும்.

ஒரு கடாயில் அரை டேபிள் ஸ்பூன் எண்ணெயை சூடாக்கவும். (முன்பு பயன்படுத்திய கடாயையே பயன்படுத்தலாம்.)

முட்டைகளை பாதியாக வெட்டி கடாயில் சேர்க்கவும்.

முட்டைகளில் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் மிளகு தூள் தூவி, ஒரு நிமிடம் வதக்கவும்.

வெங்காயம்-தக்காளி-தேங்காய் விழுது மற்றும் தேவையான அளவு தண்ணீரைச் சேர்க்கவும்.

குழம்பை 3-4 நிமிடங்கள் மீடியம் தீயில் வைத்து சமைக்கவும்.

பின்னர் உப்பு மற்றும் கரம் மசாலா தூள் சேர்க்கவும்.

குழம்பு ஒருமுறை கொதித்த உடன், ஸ்டவ்வை சிம்மில் வைத்து, நறுக்கிய கொத்தமல்லி சேர்க்கவும்.

ஒரு முறை கிளறி விட்டு ஸ்டவ்வை அணைக்கவும்.

சூடான ரொட்டி அல்லது சாதத்துடன் பரிமாற சுவையான முட்டைக் குழம்பு தயார்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.