(Reading time: 2 - 4 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - முட்டைக் கறி

தேவையான பொருட்கள்

6 முட்டை

5 டேபிள்ஸ்பூன் எண்ணெய்

2 வெங்காயம்

3 தக்காளி

2 பச்சை மிளகாய்

2 டீஸ்பூன் பூண்டு விழுது

2 டீஸ்பூன் இஞ்சி பேஸ்ட்

2 டீஸ்பூன் கொத்தமல்லி தூள்

1 டீஸ்பூன் சீரகத் தூள்

1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்

1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்

1/2 டீஸ்பூன் மிளகாய் தூள்

உப்பு  - தேவைக்கு

2 உருளைக்கிழங்கு 1 அங்குல க்யூப்ஸாக வெட்டப்பட்டது (விரும்பினால்)

நறுக்கிய கொத்தமல்லி இலைகள்

 

செய்முறை

முட்டைகளை நன்றாக வேக வைத்து தனியாக வைக்கவும்.

ஒரு வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெயை சூடாக்கி, சிறிதாக நறுக்கிய ​​வெங்காயத்தை சேர்க்கவும். சற்று பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

ஸ்டவ்வை அணைத்து விட்டு வாணலியில் இருந்து வெங்காயத்தை நீக்கி, மிக்சியில் சேர்க்கவும். கூடவே தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து, நன்றாக மைய அரைத்துக் கொள்ளவும்.

மீதமுள்ள எண்ணெயை அதே கடாயில் சூடாக்கி, நீங்கள் இப்போது தயாரித்த பேஸ்ட்டைச் சேர்க்கவும். 2 முதல் 3 நிமிடங்கள் வறுக்கவும்.

 

 

இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட்களைச் சேர்த்து, கிளறி விட்டு, மசாலா தூள்கள் (கொத்தமல்லி தூள், சீரகத் தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், மற்றும் மிளகாய் தூள்) சேர்த்து மசாலாவிலிருந்து எண்ணெய் பிரியத் தொடங்கும் வரை நன்றாக வறுக்கவும்.

இந்த மசாலாவில் 2 கப் வெதுவெதுப்பான நீரை சேர்த்து, நடுத்தர ஃப்லேமில் வைத்து கொதிக்க வைக்கவும்.

உருளைக்கிழங்கைச் சேர்ப்பதாக இருந்தால், இப்போது சேர்த்து அவை பாதி வேகும் வரை சமைக்கவும்.

வேக வைத்த முட்டைகளில் செங்குத்தாக மெல்லிய பிளவு ஏற்படுத்தி, மெதுவாக கிரேவியில் சேர்க்கவும்.

சிம்மில் வைத்து, 10 நிமிடங்கள் (அல்லது கிரேவி கெட்டியாகும் வரை) சமைக்கவும். உருளைக்கிழங்கைச் சேர்த்திருந்தால், அவை இப்போது முழுதாக வெந்திருக்கும்.

நெருப்பை அணைத்து, நறுக்கிய கொத்தமல்லி இலைகள் தூவி அலங்கரித்து பரிமாறவும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.