(Reading time: 2 - 4 minutes)
Cooking Tips
Cooking Tips

Cooking Tips # 28 - ஆரோக்கியத்திற்கான சமையல் டிப்ஸ் - அம்புலி

எண்ணெயை குறைவாக பயன்படுத்துங்கள்

லிவ் எண்ணெய் சிறந்த ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது, ஆனால் வதக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒரு சில துளிகள் மட்டுமே போதுமானது.

அதிக எண்ணெய் பயன்படுத்தி வறுக்கும் முறைகளை விட்டு விடுங்கள். அது உடல் நலனுக்கு நல்லதில்லை.  

  

உணவில் இருக்கும் கொழுப்பு அளவை குறையுங்கள்

ங்கள் உணவின் கொழுப்பு அளவை குறைக்க, வழக்கமான உணவுகளை மாற்றி, வறுக்க தேவையில்லாத உணவுகள் மற்றும் சப்பாத்தி, ரொட்டிகளை சமையுங்கள். 

  

தேங்காய் பாலுக்கான மாற்று

ங்கள் உணவில் தேங்காய் பாலுக்கு பதிலாக கொழுப்பு நீக்கப்பட்ட பால் (skimmed milk), அரைத்த முந்திரி விழுது அல்லது அரைத்த கசகசா விழுதை பயன்படுத்திப் பாருங்கள். 

  

தந்தூரி முறையை முயற்சி செய்யுங்கள்

முடிந்தவரை வறுப்பதற்கு பதிலாக பிற முறைகளை - கிரில், ஸ்டீம், பேக் முயற்சி செய்துப் பாருங்கள்.

தந்தூரி கிரில்லிங் என்பது சமையலின் சிறந்த வடிவமாகும்.  இதில் குறைந்த  எண்ணெய் பயன்படுத்த வேண்டி இருக்கும். இந்த முறையில் அதிக வெப்பத்தில் சமைப்பதால், உணவு விரைவாக தயாராகிவிடும். மற்றும் உணவுப் பொருட்களின் அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்து இருக்கும்.

  

எளிய மாற்றுகள்

ப்பாத்திகள் தயார் செய்யும் போது சாதாரண மாவுக்கு பதிலாக முழு கோதுமை / தானிய மாவு (whole wheat / whole grain flour) பயன்படுத்துங்கள்.

   

லேசான உணவு

முளைத்த பீன்ஸ் மற்றும் பயறு போன்ற ஆரோக்கியமான பருப்பு வகைகளைப் பயன்படுத்துங்கள்.

   

தக்காளி

தேங்காய் பால், தேங்காய் விழுது போன்றவற்றில் ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், கொழுப்பும் அதிகமாக இருக்கிறது.

எனவே தேங்காய்ப் பால், தேங்காய் விழுது போன்றவற்றுக்கு பதிலாக அரைத்த தக்காளியை பயன்படுத்தி பாருங்கள்.

குறைந்த கொழுப்பு தயிரை (low fat curd) கூட பயன்படுத்தி பார்க்கலாம்.

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.