(Reading time: 4 - 8 minutes)

TV Serials - தி கிரவுன் - நெட்ஃப்ளிக்ஸ் [ The Crown - Netflix ] - சீசன் 1 எபிசோட் 06

இங்கிலாந்தின் தற்போதைய மகாராணி எலிசபெத்தின் கதையை சொல்லும்  நெட்ஃபிலிக்ஸ் வெப் சீரீஸின் சீசன் 1 6 ஆம் அத்தியாயத்தின் கதை சுருக்கம் இது. எபிசோட் 5 கதைக்கு தி கிரவுன் - எபிசோட் 5 பக்கத்திற்கு செல்லுங்கள்.

ந்த எபிசோடில் ராணியான பிறகு எலிசபெத் எதிர்கொண்ட முதல் பிரச்சனையை நம்மால் பார்க்க முடிகிறது.

வேறு நாட்டுடன் சண்டை, நெருக்கடி என்று இல்லாமல் எலிசபெத்திற்கு பிரச்சனை தன் குடும்பத்திலேயே உருவாகிறது.

ராணி என்று முடி சூட்டிக் கொண்டதால் ஒரு சாதாரண அக்காவாகவோ, பெண்ணாகவோ நடந்துக் கொள்ள முடியாமல் எலிசபெத் வருந்துவதை நம்மாலும் உணர முடிகிறது.

  

கதை சுருக்கம்:

பீட்டருக்கு விவாகரத்து கிடைத்து விட்டதால் மார்கரெட் அவரை திருமணம் செய்துக் கொள்ள விரும்புகிறாள். இதைப் பற்றி ராணியும் தன் அக்காவுமான எலிசபெத் மற்றும் பிலிப்பிடம் சொல்லி அனுமதி கேட்கிறாள்.

அக்கா என்ற முறையில் மார்க்கரெட் விருப்பத்திற்கு குறுக்கே நிற்க மாட்டேன் என்று வாக்கு கொடுக்கிறாள் எலிசபெத்.

பிலிப்பிற்கு இந்த திருமண பேச்சு பிடிக்காமல் போகிறது. தன் எதிர்ப்பை மார்கரெட்டிடம் சொல்லாமல் எலிசபெத்திடம் சொல்கிறார்.

அரசக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் விவாகரத்தானவரை மண முடிப்பது என்பது பெரிய பிரச்சனையாக உருமாறும் என்று எச்சரிக்கிறார்.

 

மார்கரெட் பீட்டர் நடுவே இருக்கும் உறவு பற்றிய கிசுகிசு மெல்ல பரவ தொடங்குகிறது. இது பத்திரிக்கை துறையையும் அடைகிறது.

பத்திரிக்கையில் மார்கரெட் பற்றிய செய்தி வரப் போவதை தெரிந்துக் கொள்ளும் பேலஸின் முக்கிய பணியாளர் டாமி அதைப் பற்றி எலிசபத்தின் அம்மாவிடம் சொல்கிறார். அவர் எலிசபத்தை சந்தித்து பேசுகிறார்.

மார்கரெட்டின் திருமணத்திற்கு எலிசபெத் சம்மதம் கொடுத்தால் சர்ச் மற்றும் பிரதமமந்திரியின் அலுவலகத்துடன் எலிசபெத் சச்சரவை உருவாக்கியது போல ஆகும் என மகளிடம் சொல்கிறார்.

இங்கிலாந்தின் அன்றைய சட்டத்தின் படி அரசக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் 25 வயதாகும் வரை அரசர் / அரசியின் சம்மதத்திற்குப் பிறகு தான் திருமணம் செய்துக் கொள்ள முடியும். எனவே 23 வயதாகும் மார்கரெட் இரண்டு வருடம் காத்திருந்து திருமணம் செய்துக் கொண்டால் கிசுகிசுக்கள், பிரச்சனைகள் இல்லாமல் போய் விடும் என்றும் அம்மா அறிவுறுத்துகிறார்.

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.