(Reading time: 4 - 8 minutes)

வேறு வழி இல்லாமல் எலிசபெத் அதை ஏற்றுக் கொள்கிறாள். பீட்டரை வேலை நிமித்தம் என இரண்டு வருடங்களுக்கு வேறு நாட்டிற்கு அனுப்பி வைப்பது நல்லது என்று முடிவு செய்கிறார்கள்.

இந்த செய்து தெரிந்த உடன் மார்கரெட் எலிசபெத் மேலே கோபப் படுகிறாள். அவளை எலிசபெத் சமாதானம் செய்கிறாள். இரண்டு வருடங்கள் காத்திருந்தால் விருப்பம் போல திருமணம் செய்துக் கொள்ளலாம் என்றும் எடுத்து சொல்கிறாள்.

மார்கரெட் ரோடீசியா சுற்றுப்பயணம் செல்லும் போது முன்பு திட்டமிட்டதுப் போல பீட்டரை அழைத்து செல்ல மார்கரெட்டுக்கு அனுமதி மறுத்து விடுகிறார்கள். அதனால் கோபப்படும் தங்கையை மீண்டும் சமாதானம் செய்யும் எலிசபெத், மார்கரெட் திரும்பி வந்தப் பிறகு தான் பீட்டர் பிரசல்ஸ் செல்வார் என்று வாக்கு கொடுக்கிறாள்.

 

அயர்லாந்து சுற்றுப்பயணம் செல்லும் எலிசபெத் தன்னுடன் பீட்டரையும் அழைத்துச் செல்கிறாள். அங்கே போகும் இடங்களில் செய்தியாளர்கள் எலிசபத்தை விட பீட்டரை பற்றித்யே செய்தி சேகரிக்க முயற்சி செய்கிறார்கள். பீட்டரும் அவர்களை விட்டு தள்ளி போக முயற்சி செய்யாமல் வேண்டுமென்றே செய்தியாளர்களிடம் சற்று அதிக நேரம் செலவிடுகிறார். இது எலிசபத்தின் கண்களிலும் படுகிறது.

 

பீட்டரின் செயல்கள் புதிதாக செய்திகளையோ, பிரச்சனைகளையோ கொண்டு வராமல் இருக்க தங்கைக்கு கொடுத்த வாக்குறுதியை மீறி பீட்டரை உடனே பிரசல்ஸ் அனுப்ப முடிவு செய்கிறாள் எலிசபெத்.

ரோடீசியாவில் இருக்கும் போது இந்த விஷயம் கேள்விப்படும் மார்க்ரெட் கொதித்துப் போகிறாள். அக்காவை போனில் அழித்து பேசி தன் கோபத்தை காட்டுகிறாள். நீ எனக்கு சப்போர்ட் செய்யவில்லை, நானும் உனக்கு சப்போர்ட் செய்ய மாட்டேன் என எச்சரிக்கிறாள்!

 

வருத்தத்துடன் இருக்கும் எலிசபெத்திற்கு துணையாக இருக்காமல் ஜென்டில்மேன் ஒன்லி பார்ட்டிக்கு செல்வதாக சொல்லி கிளம்புகிறார் பிலிப்.

  

ஒரு அரச பரம்பரையின் insider view போன்ற இந்த வெப் சீரீஸ் உலகெங்கும் மிகவும் பிரபலம். நீங்களும் இதன் பார்வையாளர் என்றால் உங்கள் கருத்தையும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.