(Reading time: 6 - 11 minutes)

காட்டனை குளிர்ந்த நீரில் நனைத்து, மூடிய கண் இமைகளுக்கு மேல் சுமார் 10 நிமிடங்கள் வைக்கலாம். இது கண்கள் இலகுவாகவும், ரிலாக்ஸ்டாகவும் உணர உதவும்.

உங்கள் கண்களைச் சுற்றியுள்ள பகுதிக்கு ஒரு நல்ல மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவது சருமம் வறண்டு போகாமல் இருக்க உதவுவதோடு, கோடுகள் மற்றும் சுருக்கங்கள் தோன்றாமல் இருக்கவும் உதவும்.

பொதுவாக பயன்படுத்தப்படும் மாய்ச்சரைசர் என்றில்லாமல் கண்களுக்கான பிரத்தியேக கண் கிரீம் தேர்வு செய்வது நலம்.

 

கண்களுக்கான முக பயிற்சிகள்

ஒரு எளிய முக மசாஜ், குறிப்பாக கண் பகுதியைச் சுற்றி மசாஜ் செய்வது, இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும். இதனால் கண்கள் மிகவும் ரிலாக்ஸ்டாக உணர முடியும். இது கண்களுக்கு மிகவும் நல்லது.

மேலும் இப்படி மசாஜ் செய்வது அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய அதிகப்படியான திரவத்தை வெளியேற்றுவதற்கும், கண்கள் வீங்கியிருப்பது போன்ற தோற்றத்தில் இருந்து விடுதலைப் பெறுவதற்கும் உதவுகிறது.

உங்கள் விரல்களால் செய்யப்படும் சில எளிய முகப் பயிற்சிகள் மற்றும் மசாஜ்கள், அதாவது புருவங்களை மேலே தள்ளுவது மற்றும் கண்களை மூடுவது போன்றவை உங்கள் கண்களைச் சுற்றியுள்ள பகுதியை அழகாகவும், கோடுகள் மற்றும் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்கவும் உதவும்.

  

கண்கள் விஷயத்தில் செய்ய வேண்டியவையும், செய்யக்கூடாதவையும்

உங்கள் கண்கள் உங்கள் உடலின் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றாக இருப்பதால், எல்லா நேரங்களிலும் உங்கள் கண்களையும், அவற்றைச் சுற்றியுள்ள சருமத்தையும் பாதுகாக்க வேண்டியது அவசியம்.

ஏதேனும் எரிச்சல் ஏற்பட்டால் கண்களைத் தேய்ப்பதற்குப் பதிலாக அதைக் கழுவவும்.

நம் முகத்தையும், கண்களைச் சுற்றியுள்ள பகுதியையும் நாள் முழுவதும் பல முறை கைகளால் தொடுவதால், நம் கைகளை சுத்தமாகவும், பாக்டீரியாக்கள் இல்லாமல் இருக்க கழுவுவதும் அவசியம்.

கண் கூசுவது மற்றும் பொல்யூஷன், அல்ட்ரா வையலட் கதிர்களிலிருந்து கண்களைப் பாதுகாக்க சன்கிளாஸ்கள் அணிவது நல்லதொரு வழி.

   

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.