(Reading time: 4 - 8 minutes)

1983 ஆம் ஆண்டில் சிகாகோவுக்குச் சென்றார்.  அங்கே டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த அதிக பிரபலமடையாத ஏ.எம் சிகாகோ எனும் நிகழ்ச்சியை நடத்தும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

 

இப்படி ஒரு நிகழ்ச்சி இருக்கிறது என்று கூட பலருக்கும் தெரியாமல் இருந்த அந்த ப்ரோக்ராமை மிகவும் பிரபலமாக்கி, சிகாகோவின் பிரபலமான ப்ரோக்ராமாக மாற்றினார் ஒப்ரா. பிறகு, இந்த நிகழ்ச்சி தி ஓப்ரா வின்ஃப்ரே ஷோ என மறுபெயரிடப்பட்டது. அதுவே 25 ஆண்டுகளாக ஒளிபரப்பப்பட்டது.

 

ஓப்ராவின் தனித்துவமான பாணி தொலைக்காட்சியில் முற்றிலும் புதிய வடிவிலான தகவல்தொடர்புக்கு வழிவகுத்தது. அவருடைய இயல்பான, மனித தன்மையுடன் கூடிய நிகழ்ச்சி நடத்தும் ஆற்றல் அனைவரையும் கவர்ந்தது.

 

ஓப்ரா வின்ஃப்ரே யால் எப்படி இதை எல்லாம் செயல்படுத்த முடிந்தது???

ன்னிடம் மற்றவர்கள் சொன்னதை அப்படியே நம்பாதது தான் தன் வெற்றியின் ரகசியம் என்று பகிர்ந்திருக்கிறார் ஒப்ரா.

கிராமப்புற மிசிசிப்பியில் பிறந்த ஏழை, கருப்பு இன பெண் என்பது ஒப்ராவின் ஆரம்பகால வாழ்க்கையின் உண்மைகளாக இருந்திருக்கலாம். ஆனால் ஓப்ரா அந்த அடையாளங்கள் மட்டுமே அவருடையது என்று நம்பவில்லை.

மற்றவர்கள் கொடுத்த அந்த லேபிள்கள் தன்னை மட்டுப்படுத்துவதாகவும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

  

ஒரு ஏழை கறுப்பின பெண்ணால் எதுவும் செய்ய இயலாது என்று மற்றவர்கள் சொன்னதை கேட்டு அவர் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ளவில்லை.

  

ஓப்ரா மற்றவர்கள் கொடுத்த அச்சங்களையும், சவால்களையும் எதிர்கொண்டு, தன்னை நம்பி நின்றார்! வெற்றியும் பெற்றார்!

 


ப்ரா வின்ஃப்ரே வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள எத்தனையோ விஷயங்கள் இருக்கிறது.

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.