(Reading time: 1 - 2 minutes)

நீயும் நானும் - 03 - தமிழ் மழையில்

நீ:     

பெய்யென பெய்யும் மழையோ என

பொழிகிறாய் நீ என்ன முகிலோ

தாண்டவம் புரிவது உன்னில் தமிழோ

தன்னடக்கம் உந்தன் எழிலோ

 

நான்:  

மின்னலே வியக்கும் உந்தன் வேகம்

கண்ணிமைக்கும் நொடியில் தமிழை தாலாட்டும்

என்னே உன் சிந்தனை விளையாட்டு.. !

வியந்தேன் மின்னல் தாக்கும் மரமாய் சட்டென்று.

 

நீ:     

முகிலோ மின்னலோ

பொழிந்து தாக்கியது தமிழ் அல்லவா

தமிழ் அமுதம் பருகப் பருக இன்பம்

இன்பத்தில் திளைத்த மனதில் கவிநயம்

 

நான்: 

இன்பமான சுகமல்லவா

தமிழில் நனைந்து போவது

உந்தன் கவிநயத்தால் எந்தன் கவித்துவம்

உயிர்த்தெழ தமிழ் மழை நில்லாது பொழியும்!!!

Neeyum naanum - 02

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.