(Reading time: 2 - 3 minutes)

போதை மனிதனுக்கு சில போதனைகள்

 

மதுவைக் குடித்து
மயக்கத்தில் நடக்கும்
மதிகெட்ட மனிதா
உனக்கு மானத்தை விட மது என்ன பெரிதா?
மதுவால் நீ இழந்தது என்னவென்று தெரியுமா?
அதை உனக்கு எடுத்து சொன்னால் புரியுமா?

புரிந்து கொள்!

மானத்தை இழந்தாயடா
மதிகெட்டு நின்றாயடா
உன் சொந்தங்களை துறந்தாயடா
நல்ல நண்பர்களின் நட்பை முரிதாயடா
இத்தனை இழப்புகள் தேவையா?
மதுவால் அடைந்த பயன் இதுதானய்யா
நீ குடிப்பதனால் உன்னை பெற்றவர் உள்ளம் துடிக்குதடா
உன் உடல் கேட்டு குடல் கேட்டு துடிக்கும்போது
அவர்கள் கண்கள் இரத்தம் வடிக்குதடா
அந்த பாழாய்ப்போன குடியால் குடும்பத்தில் கஷ்டம்டா
குடியை நிறுத்திவிட்டால் உனக்கு இல்லை நஷ்டமடா
குடியால் விலகின சொந்த பந்தமெல்லாம் பின் வந்து சேரும்!
உன்னை பார்க்கவே மறுத்த நண்பர்களின் நட்பு உன்னை வந்து நாடும்
இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கையில் என்கிறார்களே
நீ குடித்துவிட்டு போதையில் மிதந்தாள் சொன்னவர்கள் வருந்துவார்களே
உன் தாய்க்கு செய்ய வேண்டிய கடமை எத்தனையோ காத்திருக்கு
தாய் நாட்டுக்கு செய்ய வேண்டிய கடமைகள் அதனையும் காத்திருக்கு
இதையெல்லாம் மறந்தாயடா
இதற்காகவா நீ பிறந்தாயடா?
நீ சாதிக்க பிறந்தவன் அல்லவா?
மது என்னும் சாக்கடையிலிருந்து நண்பா நீ எழுந்து வா!
உனக்கு தோல் கொடுக்க ஒரு கூட்டம் இருக்கு
இனியும் மதுமீது நாட்டம் எதற்கு?
போதை என்னும் அரக்கனை நீ விரட்டிவிடு
அறிவு என்னும் கண்களை திறந்து வாழ்க்கையில் எழுச்சிபெறு
குடும்பத்தோடு மகிழ்ச்சி பேரு!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.