(Reading time: 2 - 4 minutes)

அவள்பா!! - கவிதை போட்டி - 03 - ஸ்வேதா சந்திரசேகரன்

சிமிழ்கன்னியின் பேச்சோ சிறுமழலைப் பேச்சோ

அமிழ்தமாய் நெஞ்சில் இனிக்கும் -அவளென்றால்

தங்க தமிழாலே வணங்கும் தமிழாலே

நல்வெண்பா பாட இவள் இங்கு.

 

இரசனையும் காதலும் அவள் தந்ததே

அழுதழுது காரியம் சாதிப்பாளா மவள்

மூடர்காள் உம்நன்மை யிற்க்கே புரிந்த

திடுமே இல்லாத போது.

 

முட்டைக் கண்ணுருட்டி மிரட்டி டுவாள்

வெள்ளம் கலந்து சிரிப் புதிர்ப்பாள்

பிரியம் கலந்து பேசிடுவாள்- அவளில்லை

எனில் நீநா னில்லை.

 

கருணைக் கடலான அவளிருப்பாள் நின்அ

யோகியதனம் தெரிந்தால் வீசும் புயலாவாள்

மடத்தனம் செய்யாதீ றவள் உண்மை

விளம்பியும் கூட  த்தான்.

 

நாணிக் கோணி நிற்பாள் தலைவனிடத்து

உயிரே கொடுப் பவள் எடுப்பாள் - தேவதை

அற்புத மானவள் அவனிற் கொரு

ஆபத் தென்  றால்.

 

சுற்றமது வேண்டும் அவளிற்கு பெற்றவர்

வேண்டு மவளிர்க்கு ஆசைகொன் டவன் - வேண்டும்

அவளிற்கு ஒன்றில்லா மல்போனாலும் உயிர்

நீங்கும் உடலை விட்டு.

 

கண்மை யுள்தன் நம்பிக்கை இருக்கும்

உதட்டு சாயத்தினுள் சோகம் மறைந்திருக்கும்

முகம் கண்டு இளிப்போரே விலகு

அவள் வழியில் லிருந்து.

 

கர்வம் எனாதீர் அவளின் நம்பிக்கையை

திமிர் எனதீர் அவள் நடத்தையை- அசுசியான

உம் சமுகம் கொடுத்தவை தாம்

அது திருந்தி டுவீர்.

 

பிறப்பால் உயர்ந்தவள் அவள் தெரியாதோ

பிறந்ததும் உயிரை பிரிப்பவரே உணருவீர்

பெண்ணவள் இல்லையெனில் பிரபஞ்சம் சுருங்கிடுமே

போற்றாமல் போகா தீர்.

 

வெண்பா விளையாட வித்திட்ட எண்ணங்கள்

அவள்பா பதிவிக்க சீரான ஓசையையும்

செப்ப லான தேன்கவிதையையும் தன் திட்ட 

அன்னை அவளிற்கு நன்றி.

 

தென்தமிழ் அதனை பிரித்துப்  படித்த

அமரகவி ஞ்யரே தவறேனும் இருந்திடின்

மன்னித்திடு  வீராம் பிள்ளைத்தமிழா மிதுவென

கணக்கில் கொண் டு.

 

குறிப்பு: அசை சீர் பிரித்து பார்த்தால் நிச்சயமாக தவறிருக்கும்(எனக்கு தெரிந்த வரை முயற்சி செய்து பிரித்து பார்த்தே வடித்துள்ளேன், ஆனாலும்...). அதற்கு மன்னித்து கொள்ளுங்கள். மறந்துப்போன வெண்பா முறை கவிதையை திரும்ப செயல்முறைக்கு எடுத்துவரும் புரட்சிகரமான முயற்சியென்றும் எடுத்துக்கொள்ளலாம். பாடலிற்கு விளக்கம் வேண்டுமென்றால்  கருத்துரையில் கேட்கவும் தருகிறேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.