(Reading time: 2 - 3 minutes)

தாயுமானவருக்காக - புவனேஸ்வரி

கம்பீரமே தவமிருந்து

யாசகம் கேட்கும் கணீர்  குரல்!

 

Thayumanavarசூரியனையே எழுப்பி விடுவதற்காக

அதிகாலையில் மலர்ந்துவிடும் இவர் விழிகள் !

 

என் பெயரை ஒரே முறை அழைத்து

ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து விடுதலை கொடுத்திடுவார் !

 

அழுத்தமான பார்வையுடன்

மீசையை முறுக்கி புன்னகைபார்!

 

என் கண்களிலே பயம் பரவினால்

அடுத்த நொடி சாந்தமாகிடுவார் !

 

சமையலறை என்பது பெண்களின் உறைவிடம்

 என்ற எழுதப்படாத சட்டத்தை தகர்த்து எரிவார் !

 

பசியை கிள்ளும் ருசி அவர் சமையலுக்கு மட்டுமே

 சொந்தமான அடையாளம் !

 

வெளியில் செல்லும்போது எனக்கவர் சாரதி

நான் துவண்டுவிடும்போதெல்லாம் எனக்கவர் பாரதி !

 

இசையை எனக்கு கற்றுத்தந்தவர்

இதயத்தை பேணும் கலையிலும் கைதேர்ந்தவர் !

 

மன்னிக்க தெரிந்தவர்

 மன்னிப்பு கேட்பதில் குழந்தையை போன்றவர் !

 

ஒரே அதட்டலில் அணுவையும் அதிர வைப்பார்

அதை ஒரே அணைப்பில் சமணப்படுத்திடுவார் !

 

இனி எத்தனை பிறவி எடுத்தாலும்

இவர் இரும்பு கரங்களில் நான் மழலையாய் தவழ வேண்டும் !

 

என்னுள் உறைந்திருந்து என்னை பேணிக்காக்கும் தாயுமானவரை

ஆயுள் உள்ளவரை பாரமென நினைக்காமல் சுமந்திட வேண்டும் !

 

தந்தையே ,

கடவுளுக்கெல்லாம் தந்தை யார் ?

கடவுளுக்கு தந்தையின் அன்பின் மகத்துவும் தெரியுமா ?

தாயுமானவனின் அன்பினை இறைவனுக்கு உணர்த்திடத்தான்

அவசரமாய் இறைவனடி சேர்ந்தீரோ ?

 

உங்கள் எண்ணம் ஈடேறட்டும்

தந்தையின் அன்பை உணர்ந்து

வருங்கலத்திலாவது இறைவன்

தந்தை - புதல்வர்களை பிரிக்காமல் இருக்கட்டும்!

 

அப்பா ... என் வாழ்க்கையில் வசந்த காலத்தை கொண்டு வந்தவர் .. எல்லா மகள்களுக்கும் அப்பா தான் முதல் காதல்ன்னு சொல்லுறதில் கொஞ்சம் கூட மிகையே இல்லை ! அனைத்து நண்பர்களின் தந்தைக்கும் என் தந்தையர் தின வாழ்த்துக்கள்.!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.