(Reading time: 1 - 2 minutes)

புரிதல் இல்லாதவரை பிரிவு நிரந்தரம் தான்! - புவனேஸ்வரி 

 Understanding

மிகவும் பிடித்தது அவளை!

அவள் என்னைப்போல அல்ல!

வார்த்தைகளை விரயம் செய்வதில்லை!

நேர்த்தியால் கீர்த்தியை உயர்த்திக் கொண்டவள்

தனக்கென அடையாளம் கொண்டவள் !

அவளை என்னவளாக்கினேன்

வாழ்க்கை புதிதானது, சில நாளில் புதிரானது !

என்னைப்போல் இல்லாதவளிடம் என்னை தேடினேன்!

ரசித்ததை  எல்லாம் தூற்றத் தொடங்கினேன்,

எனக்கவள் சரியில்லையென உதறியும் போனேன்..

நாட்கள் நகர்ந்தன..!

 

இம்முறை இவளைக் கண்டேன்!

என்னைப்போல் ஒருத்தி !

என் சிந்தனைகளின் நகல் அவள் !

அவள் செயல்கலின் அசல் நான் !

என்னைப் போன்றவளுக்கு என்னை புரியும் என நினைத்தேன்!

அவளும் என்னவளாகினாள் !

நான் சிரிக்கையில் அவளும் சிரித்தாள்!

நான் அழுகையில் அவளும் அழுதாள்!

காலம் கடந்தது, ஒரு நாள் காதலும் கடந்து போனது!

நான் சினம் கொண்டேன், அவளும் சினம் கொண்டாள் !

நான் போய்விடு என்றேன், அவளும் அதையே உரைத்தாள் !

 

மீண்டும் தனியானேன்..!

தனிமை கற்றுத் தந்த பாடம்,

இதுவரை நான் சந்தித்த ஆசிரியர்கள் கூட

கற்றுத்தராத வேதம்!

எதிர் எதிராய் இருந்தாலும்,

ஒன்றுபோல் தோன்றினாலும்

பிணைப்பு என்பது புரிதலின் மறுஉருவம்!

புரிதல் இல்லாதவரை பிரிவு நிரந்தரம்தான்!

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.