(Reading time: 1 - 2 minutes)

அன்பும் நீரும் - புவனேஸ்வரி
Love and Water

அன்பிற்கு விலை இல்லை என்றால்,

எதற்கு ஆடம்பர பரிசுகள்?

 

அன்பிற்கு பிரிவு இல்லை என்றால்,

எதற்கு கலங்குகின்றன விழிகள்?

 

அன்பிற்கு எல்லை இல்லை என்றால்,

எதற்கு எல்லை கோடுகள்?

 

அன்பே குற்றமில்லை என்றால்,

எதற்கு தயக்கங்கள்?

 

அன்பென்பது புனிதமெனில்,

மனிதனை ஈர்கும் மனிதமெனில்,

நேசிக்க ஏன் யோசிக்க வேண்டும்?

 

உண்மையில் அன்பென்பது கட்டுப்பாடு இல்லாத காட்டாறு!

வெட்ட வெட்ட தொடரும் ஜீவநதி!

சில நேரம் மழையாய் பொழியும்,

சில நேரம் அலையாய் மோதிடும்!

அது இருக்கும்வரை வறட்சியில்லை!

அது மறைந்துவிட்டால் மலர்ச்சியில்லை!

சிறு துளியாய் சிலிர்க்கவும் வைக்கும்,

பேரலையாய் உயிரையும் எடுக்கும்!

 

அன்பென்பது நீர் போல!

உலகை சுற்றி இருந்தாலும்,

நமக்குத்தான் பேணிக்காக்க தெரியவில்லை!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.