(Reading time: 1 - 2 minutes)

கவிதை - ஆதவனும் பூமியும்! - புவனேஸ்வரி

Sun

என் கற்பனை என்பது

கடலென்று நினைத்தேன்!

அது உன்னை மட்டுமே தொடும்

கண்ணீர் என உணர்த்தினாய்!

 

என் குறும்புகள் எல்லாம்

அமுதசுரபி என்று நினைத்தேன்!

அவை உன்னை வசீகரிக்கவே

எழுந்த மாயை என உணர்த்தினாய்!

 

என் நர்த்தனம் எல்லாம்

கால்களின் களிப்பு என்று நினைத்தேன்!

அவை உனது கவனத்தை பெற

நடத்திய போராட்டமது என உணர்த்தினாய்!

 

என் எழுத்தும் பேனாவும்

தமிழுக்கே அடிமையென நினைத்தேன்!

நீயோ மௌனித்து என் பேனாவை உறங்க வைத்துவிட்டாய்!

 

என்னவனே,

நான் என்ற உலகத்தில்

நீ ஏன் வந்தாய்?

எப்படி வந்தாய் ?

உன் மௌன முத்திரையிட்டு

என் இதய தேசத்தை எப்படி கைப்பற்றினாய் ?

அன்பைக் காட்டி சிறைப்பிடிக்க முடியாமல்

ஆட்டிப்படைப்பதும் ஆண் மகனுக்கு வீரமாகுமா?

மீட்டு கொடு என்னை அல்லது மீள விடு!

நீ எத்தனை கொதித்தாலும்

உன்னையே ஓயாமல் சுற்றிட

நீ ஆதவனும் இல்லை,

தான் பூமியும் இல்லை!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.