(Reading time: 1 - 2 minutes)

மகளிர் தினம்.... - தங்கமணி சுவாமினாதன்

மார்ச் 8 மகளிர் தினம்...

மகளிர் தலையில் .மணி மகுடம்?

குப்பிக்கும்,சுப்பிக்கும் தெரியுமா..?

மகளிர் தினம்..

மாடுகளுக்கோர் நாள்..

மாட்டுப் பொங்கல்..

ஆயுதங்களுக்கோர் நாள்

ஆயுத பூஜை..

மாடுகள் அஃறிணை.....

ஆயுதமோ ஜடப்பொருள்...

பெண்களாம் மகளிர்-இதில்

எந்த வகை?

"மகளிர் தின நல் வாழ்த்துக்கள்"

காலை முதல் இரவு வரை-விடாது

வாழ்த்தும் தொலைக்காட்சி..

ஹேப்பி"விமென்ஸ் டே"செயற்கயாய்

வாழ்த்தும் ஆண்கள்..

அன்றாட வேலைகள் அன்று மட்டும்

இல்லையா என்ன?

ஒட்டக முதுகிலிருந்தோர்..

தீப்பெட்டி எடுத்து-அது

பார்க்கக் கீழே போட

தன் முதுகில் சுமைகளேயில்லையென

சுமக்க மாட்டா சுமைகளைச்

சுமந்து ஓடுமாம் ஒட்டகம்-அது போல

வருடம் ஓர் நாள் அடிமைகளுக்கு

வாழ்த்துச் சொல்லும் ஓர் நாள்..

பாராளு மன்றத்தில் 50% என்ன..

33%என்று கிடைக்குமோ அன்னாளே

நமக்கு மகளிர் தினம்..

அது போல் என்றும் நடந்து விடாது..

அடிமை நமக்கது கிடைத்து விடாது..

விடு..எனதருமைச் சகோதரி....

மகளிர் தினம் என்பதெல்லாம்-நம்மை

மடச்சியாக்கவேயன்றி..

மணிமகுடம் சூட்டவல்ல... 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.